என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "making death threat to BJP executive"

    • கொலை மிரட்டல் விடுத்தயொட்டி 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மணவெளி தொகுதிக்குட்பட்ட அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதிக்குட்பட்ட அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு கவர்னர், முதல்-அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட தலைவர்களின் பேனரில் பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் முன்தினம் அப்பகுதியில் இருந்த சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உருவம் பொறித்த 2 பேனர்களை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்து விட்டு சென்று விட்டனர்‌.

    இதனால் சந்தேகத்தின் பேரில் அபிஷேகப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி ஹேமாமாலினி என்பவர் அப்பகுதியை சேர்ந்த வடிவேலு, தட்சணாமூர்த்தி என்ற திவாகர், பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சந்துரு ஆகியோரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் ஹேமமாலினியை தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து ஹேமமாலினி தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து வடிவேலு, தட்சிணாமூர்த்தி, சந்துரு ஆகிய 3 பேரை கைது செய்து உள்ளனர்.

    ×