search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Van-car collision"

    • கிருமாம்பாக்கம் அருகே வேன்-கார் நேருக்கு நேர் மோதலில் 7 பேர் காயம் அடைந்தனர்.
    • இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. வேனும் நடுரோட்டில் கவிழ்ந்து போனது.

    புதுச்சேரி:

    மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மின்துறை ஊழியர்கள் 11 பேர் அடங்கிய குழுவினர் சங்கத்தின் சார்பில் சென்னையில் அமைச்சரை சந்திக்க இன்று காலை ஒரு வேனில், சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    புதுவை-கடலூர் சாலையில் பிள்ளையார் குப்பம் சந்திப்பு அருகே வந்த போது, எதிரே காரைக்கால் நோக்கி சென்ற காரும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு ள்ளனது.

    இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. வேனும் நடுரோட்டில் கவிழ்ந்து போனது.

    தகவலறிந்த கிருமா ம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடன் இணைந்து, விபத்தில் காயமடைந்த மின் துறை ஊழியர்களை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் மின் ஊழியர்கள் மணிமாறன் (45), கிருஷ்ணமூர்த்தி (57), லெனின் (47), சிவசண்முகம் (57) ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.அதேபோல், காரில் பயணம் செய்து காயம் அடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×