என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.80 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள்
    X

    பாகூர் தொகுதியில் மேம்பாட்டு பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.80 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள்

    • ரூ.80 செலவில் மேம்பாட்டு பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
    • ரூ.77 லட்சத்து 86 ஆயிரம் செலவில்

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதிக்குட்பட்ட மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பட்டாபிராமர் கோவில் வளாகத்தில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சத்து 99ஆயிரம் செலவில் பொதுக் கழிப்பிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து ரூ.77 லட்சத்து 86 ஆயிரம் செலவில் உச்சிமேடு தாங்கல் வடிகால் வாய்க்கால், மணப்பட்டு - காட்டுக்குப்பம் வாய்க்கால், மணப்பட்டு ஆத்துவாய்க்கால், மேல்பரிக்கல்பட்டு தாங்கள், சோரியாங்குப்பம் ஓடைவெளி வாய்க்கால், சோரியாங்குப்பம் தாங்கள் வாய்க்கால், சோரியாங்குப்பம் ஏரி வாய்க்கால் ஆகியவற்றை துார்வாரும் பணியை, அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், தி.மு.க., தொகுதி நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×