என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
நகராட்சி ஊழியர் தற்கொலை
- மனைவி பிரிந்து பிரான்சில் வசிப்பதால் நகராட்சி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இவருக்கு 2009-ம் ஆண்டு தமிழ் செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது.
புதுச்சேரி:
உப்பளம் நேத்தாஜி நகர் அசோகன் வீதியை சேர்ந்தவர் லோகநாதன்(வயது57). இவர் புதுவை நகராட்சியில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு 2009-ம் ஆண்டு தமிழ் செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்செல்வி கணவரை விட்டு பிரிந்து பிரான்சில் வசித்து வருகிறார். இதனால் லோகநாதன் தனது சகோதரர் ராமகிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார்.
இதற்கிடையே லோகநாதனுக்கு இதய நோய் மற்றும் நீரழிவு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.
இந்த நிலையில் மனைவி பிரிந்து பிரான்சில் வசித்து வந்ததால் லோகநாதன் மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு தான் தங்கியிருந்த அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






