என் மலர்
புதுச்சேரி
- அழகு நிலையத்தில் கத்திமுனையில் நகை-பணம் பறித்த ரவுடி கும்பலில் மேலும் 3 பேர் சிக்கினர்
- இவர் சங்கரதாஸ் வீதியில் அழகு நிலையத்துடன் மசாஜ் சென்டர் (ஸ்பா) நடத்திவருகிறார்.
புதுச்சேரி:
புதுவை ரோடியர் பேட் அங்குநாயக்கர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜீவகன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் சங்கரதாஸ் வீதியில் அழகு நிலையத்துடன் மசாஜ் சென்டர் (ஸ்பா) நடத்திவருகிறார்.
விஜயலட்சுமி அழகு நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டார். பெண் ஊழியர்கள் மட்டும் அழகு நிலையத்தில் இருந்தனர். 8 மணியளவில் 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் புகுந்து அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் மாமுல் கேட்டு மிரட்டியது. இது பற்றி தகவல் அறிந்த விஜயலட்சுமி அழகு நிலையத்துக்கு விரைந்து சென்றார்.
அப்போது விஜய லட்சுமியையும் கடை ஊழியர்களையும் கத்தியை காட்டி மிரட்டி ரூ.82 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கடை ஊழியரின் அரை பவுன் செயின் ஆகியவற்றை பறித்து கொண்டு அந்த ரவுடிக்கும்பல் தப்பிச் சென்று விட்டது.
இது குறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்தனர்.
அவர்கள் ரெயின்போ நகரை சேர்ந்த சத்யா என்ற சிவபெருமாள், லாஸ்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் விஸ்வா, விக்கி என்ற விக்னேஷ், எலி என்ற எலி விஜய், நாவற்குளத்தை சேர்ந்த வெற்றி மற்றும் கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பாலா என்பது தெரியவந்தது.
இவர்களில் சத்யா, கிருஷ்ண குமார் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் கிருஷ்ண குமார் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் தற்போது விஷ்வா, பாலா உட்பட 3 பேர் போலீசாரிடம் சிக்கி யுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து மற்றவர்களையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- சுகாதாரத்துறையில் டாக்டர் - ஊழியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கவர்னர்த மிழிசை தெரிவித்துள்ளார்.
- புறநோயாளிகள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
புதுச்சேரி:
ஒரு நாள் அரசு முறை பயணமாக காரைக்கால் சென்றார். அங்கு கவர்னர் தமிழிசைக்கு மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
மாவட்டத் துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.பின்னர், கவர்னர் தமிழிசை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார். புறநோயாளிகள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தைப் பார்வையிட்டார்.சுகாதாரத் துறைச் செயலர் உதய குமார்,கவர்னரின் செயலாளர் அஜித் விஜய் சவுத்ரி, சுகாதார துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, மருத்துவமனை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்கால் அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தம் ஜிப்மர் மருத்துவமனையோடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஜிப்மர் மருத்துவ மனையின் ஒத்துழைப்போடு மருத்துவமனையை மேம்படுத்த அரசு திட்டம் உருவாகி இருக்கிறது. கட்டிடம் கட்டுவதற்கான வாய்ப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் பகுதியில் உள்ள மக்களுக்கு சிறப்பான சேவைகள் அளிக்கக் கூடிய சிறந்த மருத்துவமனையாக விரைவில் மேம்படு த்தப்படும்.கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை பிரிவுகள் மீண்டும் தொட ங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சருடன்க லந்தாலோசனை செய்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் காலிப் பணி யிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கவர்னர் கூறினார்.
- குறைகளை சீர் செய்யாவிட்டால் ஜிப்மர் முன்பு போராட்டம்எதிர்கட்சித்தலைவர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- இங்கு தலைமை சரியில்லாததால் மக்களுக்கு சிறப்பான சேவையும் கிடைக்காமல் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை ஜிப்மர் மருத்து வமனையின் தரம் நாளுக்கு, நாள் மிகவும் குறைந்து வருகின்றது. இங்கு தலைமை சரியில்லாததால் மக்களுக்கு சிறப்பான சேவையும் கிடைக்காமல் உள்ளது.
மருந்து, மாத்திரைகள், மருத்துவ கருவிகள் வாங்கினால் முறைகேடு நடந்துவிடும் எனக்கூறி அவைகளை வாங்காமல், அதற்காக தரப்படும் நிதியை செலவு செய்யாமல் மத்திய அரசிடமே திருப்பி அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக ஜிப்மர் நிர்வாகத்திற்கு தெரியவந்தால், அதை தடுத்து முறைகேடு இல்லாத வகையில் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர மாறாக அதை வாங்குவதையே நிறுத்தி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்த க்கூடாது.
ஜிப்மருக்கு வரும் அனைத்து நோயாளிக ளுக்கும் சிகிச்சை தர வேண்டும். மத்திய சுகாதாரத்துறை இவ்விஷயத்தில் தலையிட்டு ஜிப்மருக்கு வரும் அனைத்து நோயாளி களுக்கும் விசாரணைகள் ஏதுமின்றி சேர்த்து சிகிச்சை அளிக்கவும், மருந்து, மாத்திரைகள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜிப்மர் தன் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் மக்களை திரட்டி தி.மு.க. போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மின்துறை ஊழியர்களின் 5 நாள் தொடர் உண்ணாவிரதம்தொ டங்கியது
- அமைச்சரவை ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மின்துறையை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்து அமைச்சரவை ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து அங்குள்ள பொறியாளர்கள், ஊழியர்கள், ஒருங்கிணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை உருவாக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 23-ந்தேதி தொடங்கி விதிப்படி வேலை, எழுத்துப்பணிகளை புறக்கணித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி உள்ளனர்.
அரசியல் கட்சிகள் சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்தவும், மின்துறை மந்திரியை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதனிடையே தனியார் மயத்தை எதிர்த்து தொடங்கி, செவ்வாய்க் கிழமை வரை 5 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
போராட்டத்துக்கு போராட்டக்குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். போராட்டத்தில் மின்துறை டிவிஷன்1-ன் கீழ் உள்ள மின்துறை அலுவலகங்களை சேர்ந்த ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனால் டிவிஷன்-1 மின்துறை அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. நாள்தோறும் ஒவ்வொரு டிவிஷனாக செவ்வாய்க்கிழமை வரை மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
- மாடி படிக்கட்டில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலியானார்.
- கால் தவறி கீழே விழுந்து விட்டார்.
புதுச்சேரி:
கரிக்கலாம்பாக்கம் அருகே தனிகுப்பம் சுப்பையாநகரை சேர்ந்தவர் குமரன்(வயது61). கட்டிட தொழிலாளி.
குமரன் வீட்டின் மாடிக்கு செல்ல படிக்கட்டில் ஏறி சென்றார். அப்போது கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது உறவினர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தவளக்குப்பத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை
- மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
புதுச்சேரி:
புதுவை தவளக்குப்பம் வைசினவி குளம் நிவாஸ் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருபவர் இளஞ்செழியன்(வயது33). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார்.
இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கும்பகோணத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
இந்த நிலையில் எதிர்வீட்டை சேர்ந்த சுந்தர் என்பவரின் மனவைி சுகந்தி இளஞ்செழியனுக்கு போன் செய்து உங்களது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இளஞ்செழியன் வீட்டுக்கு விரைந்து வந்தார்.
அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு இளஞ்செழியன் திடுக்கிட்டார்.
யாரோ மர்ம நபர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து இளஞ்செழியன் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- வாடகை பாக்கியை வழங்ககோரியும் கடையை காலி செய்ய வலியுறுத்தியும் கலைச்செல்வி நேற்று இரவு கடைமுன் தனி ஆளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
- கலைச்செல்வி பல முறை கடைக்கு நேரில் சென்று கேட்டும் வாடகை பாக்கி வழங்காததால் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார்.
புதுவை கோவிந்தசாலை கல்வே பங்களா பகுதியை சேர்ந்தவர் மேகநாதன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு சொந்தமான கடை அண்ணா சாலையில் உள்ளது.
இந்த கடையை சிவக்குமார் என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு வாடகைக்கு விட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் மேகநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். அதன் பிறகு கடை வாடகையை சிவக்குமார் கலைச்செல்வியிடம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
கலைச்செல்வி பல முறை கடைக்கு நேரில் சென்று கேட்டும் வாடகை பாக்கி வழங்காததால் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகும் வாடகை பாக்கியை வழங்கவில்லை. வாடகை பாக்கியை வழங்ககோரியும் கடையை காலி செய்ய வலியுறுத்தியும் கலைச்செல்வி நேற்று இரவு கடைமுன் தனி ஆளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- சம்பள நிலுவை தொகை வழங்கக்கோரி விற்பனைக்குழு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்தனர்.
- தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவை ஏ.ஐ.டி.யூ.சி. விற்பனைக்குழு ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது.
பழைய பஸ் நிலையம், லாஸ்பேட்டை உழவர் சந்தைகள், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.
போராட்டத்துக்கு சங்க தலைவர் பாஸ்கர பாண்டியன் செயலாளர் சண்முகம், பொருளாளர் பழனிராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். செயல் தலைவர் செல்வநாதன், துணைத்தலைவர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயல் தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ்பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஊழியர்களின் 8 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். 81 தினக்கூலி ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 7-வது சம்பளக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். தட்டாஞ்சாவடியிலேயே ஒழங்குமுறை விற்பனைக்கூடம் தொடர்ந்து இயங்க செய்ய வேண்டும்.
ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கியுள்ளது.
ஊழியர்களின் போராட்டத்தால் உழவர்சந்தைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் வியாபாரிகளுக்கு டோக்கன் வழங்கி, தராசு, படிக்கல், விலைப்பட்டியலை ஊழியர்கள்தான் வழங்க வேண்டும். ஊழியர்களின் போராட்டத்தால் புதுவை உழவர்சந்தையில் விலைப்பட்டியல் வைக்கப்படவில்லை. தராசு, படிக்கல் வழங்கப்படவில்லை.
இருப்பினும் விவசாயிகள் வழக்கம்போல கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர். பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.
லாஸ்பேட்டை உழவர்சந்தை திறக்கப்படவில்லை. நுழைவு வாயில் முன்பு ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் விவசாயிகள் உள்ளே செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் விவசாயிகளுக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஊழியர்கள் தாங்கள் ஏற்கனவே முன்னறிவிப்பு செய்தே போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டுவந்துவிட்டோம். எங்களை விற்க அனுமதியுங்கள் என்றனர்.
பின்னர் காய்கறி மூட்டைகளுடன் மறியல் செய்தனர். லாஸ்பேட்டை சாலையில் கடைகள் அமைக்க முயற்சித்தபோது போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. விற்பனை குழு ஊழியர்கள் போராட்டத்தால் சுமார் ஒரு டன் காய்கறிகள் நஷ்டம் ஏற்படும் என அங்கு கடை வைத்திருந்த 40 வியாபாரிகள் தெரிவித்தனர்.
- அறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் 261 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
- 2022-ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் கிருமாம்பாக்கத்தில் உள்ள அறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனையின் 2022-ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுன்டேஷன் வேந்தர் டாக்டர் கணேசன் தலைமை தாங்கினார். அறுபடை வீடு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் ராஜன் வரவேற்றார். முதல்வர் கோட்டூர் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரியின் ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணுபட் அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநிலம் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவ மனையின் தலைவர் பேராசிரியர் ரவிக்குமார் கலந்து க்கொண்டு, முதுகலை மருத்துவ மாணவர்கள் 13 பேருக்கும், இளங்கலை மருத்துவ மாணவர்கள் 248 பேருக்கும் என மொத்தம் 261 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிர்வாக இயக்குனர் அனுராதா கணேசன் சிறந்த மருத்துவ பட்டதாரி மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
நிர்வாகக்குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயசிங், மருத்துவ உறுதிமொழி ஏற்க செய்தார்.
ஏற்பாடுகளை டாக்டர்கள் லட்சுமி ஜாட்டியா, மஞ்சு, மேகநாதன், ஜவகர், வரதராஜ பெருமாள், லதா, மிஸ்ரா, அதுல், வித்யாவதி, தீபா, சந்துரு பாஸ்கர், தினேஷ் மற்றும் இணைப்பதிவாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர். மருத்துவ உதவி கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார். விழாவில், பேரா சிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெண்களை பொருளாதாரத்தில் உயர்த்தும் மத்திய அரசின் முயற்சி பாராட்டத்தக்கது என்று பா.ஜனதா மகளிர் அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பேசியுள்ளார்
- பெண்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஹோட்டல் கிரீன் பேலசில் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா மகளிர் அணி சார்பில் மத்திய அரசின் ஜெம் போர்ட்டல் மின் வியாபார தளம் குறித்து பெண்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஹோட்டல் கிரீன் பேலசில் நடந்தது.
மகளிர் அணி மாநிலத் தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சாமி நாதன், மகளிர் அணியின் மாநில பொறுப்பாளர் ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர். மகளிர் அணியின் தேசிய செயலாளரும், ஜெம் போர்ட்டலின் தேசிய பொறுப்பாளருமான உஷா பாஜ்பாய், மின் வியாபார தளத்தை பதிவு செய்வது, அதன் பயன்கள் குறித்து பயிற்சி அளித்தார்.
பின்னர் அவர் பேசும் போது, திருநங்கைகள் வியாபாரம் செய்ய ஊக்குவிக்கவும், பெண்க ளின் பொருளாதாரத்தை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்தவும் மத்திய அரசு மேற் கொண்டு வரும் முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.
இதில் கைவினை பொருள் விற்கும் பெண்கள், சலவை தொழில் செய்யும் பெண்கள், தொண்டு நிறுவனப் பெண்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
மகளிர் அணி தேசிய உறுப்பினர் தாமரைச் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பூரணாங்குப்பத்தில் பிரதமர் மோடியின் 8 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
புதுச்சேரி:
மோடி பிரதமராக பொறுப்பேற்று 8 ஆண்டுகளில் நகர்ப்புற ஏழைகள் மேம்பாடு அடைய அவர்களுக்காக பிரதமர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து விளக்க கூட்டம் பூரணாங்குப்பத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு மத்திய அரசு நகர்ப்புற ஏழைகளுக்கு கொண்டு வந்துள்ள பிரதம மந்திரி கரிப் அன்ன யோஜனா திட்டம், உஜ்வாலா திட்டம், முத்ரா கடன் வழங்கும் திட்டம், ஏழைகளுக்கு இலவச கல்வி மற்றும் ஊக்கத்தொகை திட்டம், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், ஓய்வூதியத் திட்டம், கூலி தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைப் பற்றி விளக்கி கூறியதுடன் இத்திட்டங்களால் பயனடைந்த பயனாளி களிடம் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, மாவட்ட விவசாய அணி தலைவர் தட்சணாமூர்த்தி, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் சக்தி பாலன், நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் வெற்றிச்செல்வன், முருகன், அன்பு, ஜோதி, கண்ணன் மற்றும் ஆனந்தன், தண்டபாணி, மஞ்சினி, ஹரிகிருஷ்ணன், மணி, கலைவாணன், தங்கதுரை, பச்சையப்பன், கணபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- அழகு நிலையத்தில் 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஊழியர்களை மிரட்டிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- அழகு நிலைய உரிமையாளர் விஜயலட்சுமி உடனடியாக பெரியக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை ரோடியர்பேட் அங்குநாயக்கர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜீவகன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது30). இவர் புதுவை சங்கரதாஸ் வீதியில் ஒரு கட்டிடத்தின் மாடியில் அழகு நிலையத்துடன் ஸ்பா நடத்தி வருகிறார்.
நேற்று மாலை விஜயலட்சுமி அழகு நிலைய ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் வந்து சென்ற பின்னர் அழகு நிலையத்தை பூட்டி சாவியை வீட்டில் வந்த கொடுக்கும்படி கூறி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.
ஆனால் இரவு 10 மணி ஆகியும் ஊழியர்கள் சாவியை எடுத்து வந்து கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து விஜயலட்சுமி கடை ஊழியர்களுக்கு போன் செய்தார். ஆனால் கடை ஊழியர்கள் போனை எடுத்து பேசவில்லை.
இதையடுத்து தனது செல்போனில் பொறுத்தப்பட்டுள்ள அழகு நிலைய சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தார். அப்போது அழகு நிலையத்தில் 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஊழியர்களை மிரட்டிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே விஜயலட்சுமி அழகு நிலையத்துக்கு விரைந்து வந்தார். அப்போது அந்த கும்பல் விஜயலட்சுமியையும், கடை ஊழியர்களையும் கத்தியை காட்டி எங்களுக்கு மாமூல் கொடுக்காமல் எப்படி அழகு நிலையத்தை நடத்தலாம் என கூறி உடனடியாக எங்களுக்கு மாமூல் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியது.
மேலும் அழகு நிலைய கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கடை ஊழியர்களிடமிருந்து ரூ.11 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்ட அந்த கும்பல் கடை ஊழியர் அனிதா கழுத்தில் அணிந்திருந்த ½பவுன் செயினையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டது.
இதுகுறித்து அழகு நிலைய உரிமையாளர் விஜயலட்சுமி உடனடியாக பெரியக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற கும்பலை அடையாளம் கண்டனர்.
விசாரணையில் அவர்கள் ரெயின்போநகரை சேர்ந்த சத்யா என்ற சிவபெருமாள், லாஸ்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் விஸ்வா, விக்கி என்ற விக்னேஷ், எலி என்ற எலி விஜய், நாவற்குளத்தை சேர்ந்த வெற்றி மற்றும் கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பாலா என்பது தெரியவந்தது.
ரவுடிகளான இவர்களில் சத்யா, கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் கிருஷ்ணகுமார் சிக்கினார். மற்ற 6 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.






