என் மலர்
புதுச்சேரி

விழாவில் ஆந்திர மாநிலம் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரவிக்குமார் மாணவர் ஒருவருக்கு பட்டம் வழங்கியபோது எடுத்த படம். அருகில் விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேசன் வேந்தர் கணேசன், நிர்வாக இயக்குனர் அனுராதா மற்றும் பலர் உள்ளனர்.
அறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- அறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் 261 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
- 2022-ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் கிருமாம்பாக்கத்தில் உள்ள அறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனையின் 2022-ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுன்டேஷன் வேந்தர் டாக்டர் கணேசன் தலைமை தாங்கினார். அறுபடை வீடு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் ராஜன் வரவேற்றார். முதல்வர் கோட்டூர் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரியின் ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணுபட் அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநிலம் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவ மனையின் தலைவர் பேராசிரியர் ரவிக்குமார் கலந்து க்கொண்டு, முதுகலை மருத்துவ மாணவர்கள் 13 பேருக்கும், இளங்கலை மருத்துவ மாணவர்கள் 248 பேருக்கும் என மொத்தம் 261 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிர்வாக இயக்குனர் அனுராதா கணேசன் சிறந்த மருத்துவ பட்டதாரி மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
நிர்வாகக்குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயசிங், மருத்துவ உறுதிமொழி ஏற்க செய்தார்.
ஏற்பாடுகளை டாக்டர்கள் லட்சுமி ஜாட்டியா, மஞ்சு, மேகநாதன், ஜவகர், வரதராஜ பெருமாள், லதா, மிஸ்ரா, அதுல், வித்யாவதி, தீபா, சந்துரு பாஸ்கர், தினேஷ் மற்றும் இணைப்பதிவாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர். மருத்துவ உதவி கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார். விழாவில், பேரா சிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






