என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
ஜிப்மர் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் - சிவா எம்.எல்.ஏ. அறிவிப்பு
- குறைகளை சீர் செய்யாவிட்டால் ஜிப்மர் முன்பு போராட்டம்எதிர்கட்சித்தலைவர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- இங்கு தலைமை சரியில்லாததால் மக்களுக்கு சிறப்பான சேவையும் கிடைக்காமல் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை ஜிப்மர் மருத்து வமனையின் தரம் நாளுக்கு, நாள் மிகவும் குறைந்து வருகின்றது. இங்கு தலைமை சரியில்லாததால் மக்களுக்கு சிறப்பான சேவையும் கிடைக்காமல் உள்ளது.
மருந்து, மாத்திரைகள், மருத்துவ கருவிகள் வாங்கினால் முறைகேடு நடந்துவிடும் எனக்கூறி அவைகளை வாங்காமல், அதற்காக தரப்படும் நிதியை செலவு செய்யாமல் மத்திய அரசிடமே திருப்பி அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக ஜிப்மர் நிர்வாகத்திற்கு தெரியவந்தால், அதை தடுத்து முறைகேடு இல்லாத வகையில் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர மாறாக அதை வாங்குவதையே நிறுத்தி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்த க்கூடாது.
ஜிப்மருக்கு வரும் அனைத்து நோயாளிக ளுக்கும் சிகிச்சை தர வேண்டும். மத்திய சுகாதாரத்துறை இவ்விஷயத்தில் தலையிட்டு ஜிப்மருக்கு வரும் அனைத்து நோயாளி களுக்கும் விசாரணைகள் ஏதுமின்றி சேர்த்து சிகிச்சை அளிக்கவும், மருந்து, மாத்திரைகள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜிப்மர் தன் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் மக்களை திரட்டி தி.மு.க. போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.