என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8th year achievement"

    • பூரணாங்குப்பத்தில் பிரதமர் மோடியின் 8 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்
    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    புதுச்சேரி:

    மோடி பிரதமராக பொறுப்பேற்று 8 ஆண்டுகளில் நகர்ப்புற ஏழைகள் மேம்பாடு அடைய அவர்களுக்காக பிரதமர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து விளக்க கூட்டம் பூரணாங்குப்பத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு மத்திய அரசு நகர்ப்புற ஏழைகளுக்கு கொண்டு வந்துள்ள பிரதம மந்திரி கரிப் அன்ன யோஜனா திட்டம், உஜ்வாலா திட்டம், முத்ரா கடன் வழங்கும் திட்டம், ஏழைகளுக்கு இலவச கல்வி மற்றும் ஊக்கத்தொகை திட்டம், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், ஓய்வூதியத் திட்டம், கூலி தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைப் பற்றி விளக்கி கூறியதுடன் இத்திட்டங்களால் பயனடைந்த பயனாளி களிடம் கலந்துரையாடினார்.

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, மாவட்ட விவசாய அணி தலைவர் தட்சணாமூர்த்தி, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் சக்தி பாலன், நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் வெற்றிச்செல்வன், முருகன், அன்பு, ஜோதி, கண்ணன் மற்றும் ஆனந்தன், தண்டபாணி, மஞ்சினி, ஹரிகிருஷ்ணன், மணி, கலைவாணன், தங்கதுரை, பச்சையப்பன், கணபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    ×