என் மலர்
புதுச்சேரி
- அரியாங்குப்பம் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு சார்பாக மின்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் சுகதேவ் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு சார்பாக மின்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் சுகதேவ் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சிவராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாநில குழு உறுப்பினர் கீதநாதன் தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் அபிஷேகம், சக்திவேல், சுப்பிரமணி, ஆறுமுகம், ஜீவா, செல்வராஜ், ஏழுமலை, இந்திரஜித், கண்ணன், கலா, லூர்து மேரி, முருகையன், அலமேலு, அம்சா, கவுரி, ஆண்டாள், ரமணி, பத்மாவதி, சாந்தி மற்றும் இளைஞர் பெருமன்றத்தின் தினேஷ், பிரேம், பிரகாஷ், துளசி, பிரசன்னா, அதோனீஸ், கார்த்தி கலந்து கொண்டனர்.
அரியாங்குப்பம் முருங்கப்பாக்கம் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி அடித்து மரணம் அடைந்த தொழிலாளி மணியின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
மின் துறை வெயில் காலங்களில் எர்த் மற்றும் மின்சாரம் கசிவதை சரி செய்யும் பணியில் ஈடுபடாமல் அலட்சியம் படுத்துவதை கண்டித்து
இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- வில்லியனூர் அருகே முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வில்லியனூர் அருகே சங்கரன்பேட்டை சிவராந்தகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கென்னடி.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் அருகே சங்கரன்பேட்டை சிவராந்தகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் விக்னேஷ் (வயது26). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கந்தன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில்விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கினார். நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் தீபிடித்து எரிந்தது. மோட்டார் சைக்கிளை கந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விக்னேசின் தந்தை கென்னடி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சர்வதேச கடலோர தூய்மை தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 17-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- இந்திய கடலோர தூய்மை செய்யும் பணி ஜூலை 5-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.
புதுச்சேரி:
சர்வதேச கடலோர தூய்மை தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 17-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
மேலும் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் இந்திய கடலோர தூய்மை செய்யும் பணி ஜூலை 5-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.
அதன்படி புதுவை சுகாதாரத்துறை, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துடன் இணைந்து இன்று மணவெளி தொகு திக்குட்பட்ட சின்ன வீராம் பட்டனம் கடற்கரை பகுதியை தூய்மை செய்யும் பணியை நடத்தியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் முரளி, செய்தி கல்வி தொலைதொடர்பு துணை இயக்குனர் ரகுநாதன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை அன்னைதெரசா செவிலியர் கல்லூரி மாணவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடு பட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரியாங்குப்பம், தவள குப்பம், கிருமாம்பாக்கம் சுகாதாரம் மற்றும் நலவழி மையம் செய்திருந்தது.
- தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று நிர்வாக கட்டடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- போராட்டத்துக்கு சங்க தலைவர் சிவசங்கரன் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் மருத்துவ மனை தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று நிர்வாக கட்டடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு சங்க தலைவர் சிவசங்கரன் தலைமை வகித்தார். போராட்டத்தில் பொதுச்செயலாளர் செல்வதுரை, பொருளாளர் டேனியல்சாமி, துணைத் தலைவர் குமார், துணை செயலர் கண்ணன், இணைசெயலர் மனோகரன் உட்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமவேலைக்கு சம ஊதியம், அடையாள அட்டை வழங்க வேண்டும், பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
- வள்ளலார் சாலை பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
- இதனால் வீட்டு உபயோக பொருட்கள் வீணாகிவிடுகிறது.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் வினோத் தலைமையில் ரெயின்போ நகர் மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை ரெயின்போ நகர் சுற்றியுள்ள செல்லான்நகர், ராஜராஜேஸ்வரி நகர், வெங்கட்டா நகர், ஜீவாநகர், சுதந்திர பொன்விழாநகர், கவிக்குயில் நகர், வள்ளலார் சாலை பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் வீட்டு உபயோக பொருட்கள் வீணாகிவிடுகிறது.
மழைநீருடன் கழிவுநீர் கலந்து நோய் பரவலை ஏற்படுத்துகிறது. எனவே மழைகாலங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வாய்க்கால்களையும் குறிப்பாக உப்பனாறு வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும். அதோடு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கருவடிக்குப்பம் வாய்க்கால் சீரமைப்பு பணியை தொடர்ந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
- கோவில் உண்டி யலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
- புதுவை காமராஜர் சாலை எல்லையில் ராஜய்யர் தோட்டம் பகுதியில் முத்தலாயம்மன் கோவில் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் சாலையில் கோவில் உண்டி யலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
புதுவை காமராஜர் சாலை எல்லையில் ராஜய்யர் தோட்டம் பகுதியில் முத்தலாயம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.சம்பவத்தன்று இரவு கோவிலில் பூஜை மற்றும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் கோவில் பரா மரிப்பாளர் வேல்முருகன் கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
மறுநாள் காலை 6 மணிக்கு கோவிலில் பூஜை செய்ய வந்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கோவில் நிர்வாகி வேல்முருகன் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
கடந்த 6 மாதத்துக்கு முன்பும் இக்கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த நபரே தற்போதைய சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என கோவில் நிர்வாகி வேல்முருகன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- பாகூர் அருகே கீழ்பரிக்கல்பட்டு காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்
- அங்குள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு வேலை செய்து வந்தார்.
புதுச்சேரி:-
பாகூர் அருகே மகள் இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர் அருகே கீழ்பரிக்கல்பட்டு காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(வயது50). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி.
இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது 2-வது மகள் சுகந்தி (26). இவருக்கும் கடலூர் கொடிக்கால் குப்பத்தை சேர்ந்த சரத்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுகந்தியை பிரசவத்திற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்த போது அங்கு திடீரென சுகந்தி இறந்து போனார். மகள் இறந்த வேதனையில் அன்பழகன் மது பழக்கத்துக்கு ஆளானார். மகளின் இழப்பை மறக்க அன்பழகன் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார்.
அவருக்கு அவரது மனைவி விஜயலட்சுமி ஆறுதல் கூறி வந்த போதும் எப்போதும் மகள் நினைவாகவே அன்பழகன் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அன்பழகன் தனது மனைவியிடம் இறைச்சி வாங்க பணம் கேட்டார். அதற்கு விஜயலட்சுமி இப்போது கடை திறந்து இருக்க மாட்டார்கள் பின்னர் வாங்கி கொள்ளலாம் என கூறி தூங்கி விட்டார்.
பின்னர் 6 மணிக்கு விஜயலட்சுமி எழுந்து வீட்டு தோட்டத்துக்கு சென்ற போது அங்கு குளியல் அறையில் கணவர் தூக்கு போட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினம் இன்று புதுவை அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.
- பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி:
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினம் இன்று புதுவை அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள். லட்சுமிநாராயணன், சாய்.ஜெ. சரவணன்குமார், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜனதா சார்பில் மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார். , வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் பாரதியார் திருவுருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பாரதியார் சிலைக்கு தமிழறிஞர்கள், பொதுமக்கள் பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
- புதுவை ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி அலுவலகம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கரூர் வைசியா வங்கி எதிரில் அமைக்கப்பட்டுள்ளது.
- இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
பதுச்சேரி:
புதுவை ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி அலுவலகம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கரூர் வைசியா வங்கி எதிரில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி அலுவலகத்தை திறந்து வைத்து செல்வகணபதி எம்.பி.யை இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ. சரவணன்குமார், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், கே.எஸ்.பி. ரமேஷ், ஏ.கே.டி. ஆறுமுகம், அசோக்பாபு, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- புதுவை மாநிலத்தில் நேற்று 720 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
- புதுவையில் 46 பேர், காரைக்காலில் 17 பேர் என மொத்தம் 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் நேற்று 720 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
புதுவையில் 46 பேர், காரைக்காலில் 17 பேர் என மொத்தம் 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாம் மற்றும் மாகியில் தொற்று பாதிப்பு இல்லை. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இதில் ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 6 பேர் அரசு மார்பக மருத்துவமனையிலும், 4 பேர் கோவிட் கேர் சென்டரிலும் சிகிச்சையில் உள்ளனர். 325 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 38 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதில் 36 பேர் புதுவையையும், 2 பேர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள். புதுவையில் இதுவரை 1 லட்சத்து 73 ஆயிரரத்து 364 பேருக்கு கொரேனா தொற்று ஏற்பட்டது.
இவர்களில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 59 பேர் குணமடைந்துள்ளனர். 1969 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- புதுவை எம்.ஜி.ஆர். பேரவையின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.
- மகளிர் அணி தலைவி காமாட்சி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை எம்.ஜி.ஆர். பேரவையின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேரவையின் தலைவர் சுப்ரணியன், செயலாளர் ரத்தினக்குமார், பொருளாளர் ரங்கநாதன், இணைச் செயலாளர் எல்.ஐ.சி. சாம்ராஜ், துணைத் தலைவர்கள் ஜெயராம், பரமேஸ்வரி, மகளிர் அணி தலைவி காமாட்சி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற 15-ந் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது அண்ணா பிறந்த நாளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவியருக்கு பரிசு வழங்குவது.
75-வது சுதந்திரத்தை–யொட்டி விடுதலை போராட்ட தியாகளுக்கு பரிசு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மது குடிக்க தாய் பணம் கொடுக்க மறுத்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அவ்வப்போது மது குடிக்க தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்
புதுச்சேரி:
மது குடிக்க தாய் பணம் கொடுக்க மறுத்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாஸ்பேட்டை அருகே சாமிபிள்ளை தோட்டம் அனைக்கரை வீதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சரோஜா. இவர்களது மகன் முருகன் (வயது36). திருமணமாகாத இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்தார். மேலும் அவ்வப்போது மது குடிக்க தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார். ஒரு சில நேரங்களில் கையில் இருக்கும் பணத்தை அவரது தாய் சரோஜா கொடுப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த முருகன் மீண்டும் மது குடிக்க தாயிடம் பணம் கேட்டார். அதற்கு அவரது தாய் சரோஜா வேலைக்கு எதுவும் செல்லாமல் இப்படி தொடர்ந்து மது குடித்து வருகிறாயே என கண்டித்தார்.
இதையடுத்து முருகன் மாடிக்கு சென்றார். அவர் தூங்க செல்வதாக சரோஜா கருதியிருந்தார். நேற்று காலை வெகுநேரமாகியும் மாடியில் இருந்து முருகன் எழுந்து வராததால் சந்தேகமடைந்து அவரது தாய் சரோஜா மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது மாடி அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






