search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செல்வகணபதி எம்.பி. அலுவலகம் -  ரங்கசாமி திறந்து வைத்தார்
    X

    செல்வகணபதி எம்.பி. அலுவலகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்த காட்சி.

    செல்வகணபதி எம்.பி. அலுவலகம் - ரங்கசாமி திறந்து வைத்தார்

    • புதுவை ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி அலுவலகம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கரூர் வைசியா வங்கி எதிரில் அமைக்கப்பட்டுள்ளது.
    • இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    பதுச்சேரி:

    புதுவை ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி அலுவலகம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கரூர் வைசியா வங்கி எதிரில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி அலுவலகத்தை திறந்து வைத்து செல்வகணபதி எம்.பி.யை இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ. சரவணன்குமார், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், கே.எஸ்.பி. ரமேஷ், ஏ.கே.டி. ஆறுமுகம், அசோக்பாபு, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×