என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி -  சபாநாயகர்  ஏம்பலம்  செல்வம் தொடங்கி வைத்தார்
    X

    கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.

    கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி - சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

    • சர்வதேச கடலோர தூய்மை தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 17-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • இந்திய கடலோர தூய்மை செய்யும் பணி ஜூலை 5-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.

    புதுச்சேரி:

    சர்வதேச கடலோர தூய்மை தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 17-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.

    மேலும் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் இந்திய கடலோர தூய்மை செய்யும் பணி ஜூலை 5-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.

    அதன்படி புதுவை சுகாதாரத்துறை, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துடன் இணைந்து இன்று மணவெளி தொகு திக்குட்பட்ட சின்ன வீராம் பட்டனம் கடற்கரை பகுதியை தூய்மை செய்யும் பணியை நடத்தியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் முரளி, செய்தி கல்வி தொலைதொடர்பு துணை இயக்குனர் ரகுநாதன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை அன்னைதெரசா செவிலியர் கல்லூரி மாணவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடு பட்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரியாங்குப்பம், தவள குப்பம், கிருமாம்பாக்கம் சுகாதாரம் மற்றும் நலவழி மையம் செய்திருந்தது.

    Next Story
    ×