என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அமைச்சரிடம் ரெயின்போ நகர் மக்கள் மனு
    X

    அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் காங்கிரஸ் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் தலைமையில் ரெயின்போ நகர் மக்கள் மனு அளித்தனர்.

    அமைச்சரிடம் ரெயின்போ நகர் மக்கள் மனு

    • வள்ளலார் சாலை பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
    • இதனால் வீட்டு உபயோக பொருட்கள் வீணாகிவிடுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் வினோத் தலைமையில் ரெயின்போ நகர் மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ரெயின்போ நகர் சுற்றியுள்ள செல்லான்நகர், ராஜராஜேஸ்வரி நகர், வெங்கட்டா நகர், ஜீவாநகர், சுதந்திர பொன்விழாநகர், கவிக்குயில் நகர், வள்ளலார் சாலை பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் வீட்டு உபயோக பொருட்கள் வீணாகிவிடுகிறது.

    மழைநீருடன் கழிவுநீர் கலந்து நோய் பரவலை ஏற்படுத்துகிறது. எனவே மழைகாலங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வாய்க்கால்களையும் குறிப்பாக உப்பனாறு வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும். அதோடு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கருவடிக்குப்பம் வாய்க்கால் சீரமைப்பு பணியை தொடர்ந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×