search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 63 பேருக்கு கொரோனா
    X

    கோப்பு படம்.

    புதுவையில் 63 பேருக்கு கொரோனா

    • புதுவை மாநிலத்தில் நேற்று 720 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    • புதுவையில் 46 பேர், காரைக்காலில் 17 பேர் என மொத்தம் 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் நேற்று 720 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    புதுவையில் 46 பேர், காரைக்காலில் 17 பேர் என மொத்தம் 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாம் மற்றும் மாகியில் தொற்று பாதிப்பு இல்லை. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

    இதில் ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 6 பேர் அரசு மார்பக மருத்துவமனையிலும், 4 பேர் கோவிட் கேர் சென்டரிலும் சிகிச்சையில் உள்ளனர். 325 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    இன்று 38 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதில் 36 பேர் புதுவையையும், 2 பேர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள். புதுவையில் இதுவரை 1 லட்சத்து 73 ஆயிரரத்து 364 பேருக்கு கொரேனா தொற்று ஏற்பட்டது.

    இவர்களில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 59 பேர் குணமடைந்துள்ளனர். 1969 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×