என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
- மது குடிக்க தாய் பணம் கொடுக்க மறுத்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அவ்வப்போது மது குடிக்க தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்
புதுச்சேரி:
மது குடிக்க தாய் பணம் கொடுக்க மறுத்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாஸ்பேட்டை அருகே சாமிபிள்ளை தோட்டம் அனைக்கரை வீதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சரோஜா. இவர்களது மகன் முருகன் (வயது36). திருமணமாகாத இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்தார். மேலும் அவ்வப்போது மது குடிக்க தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார். ஒரு சில நேரங்களில் கையில் இருக்கும் பணத்தை அவரது தாய் சரோஜா கொடுப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த முருகன் மீண்டும் மது குடிக்க தாயிடம் பணம் கேட்டார். அதற்கு அவரது தாய் சரோஜா வேலைக்கு எதுவும் செல்லாமல் இப்படி தொடர்ந்து மது குடித்து வருகிறாயே என கண்டித்தார்.
இதையடுத்து முருகன் மாடிக்கு சென்றார். அவர் தூங்க செல்வதாக சரோஜா கருதியிருந்தார். நேற்று காலை வெகுநேரமாகியும் மாடியில் இருந்து முருகன் எழுந்து வராததால் சந்தேகமடைந்து அவரது தாய் சரோஜா மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது மாடி அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






