என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நெல்லித்தோப்பு பெரியார் நகரில் ரவுடியை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • கடந்த ஆண்டு வினோத்தையும் சாலமனின் கூட்டாளிகளையும் ரிஷி தாக்கியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு பெரியார் நகரில் ரவுடியை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுவை சின்ன கொசப்பாளையத்தை சேர்ந்தவர் ரிஷி (வயது 25) ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இவருக்கும் நெல்லித்தோப்பை சேர்ந்த சாலமன், வினோத் ஆகியோருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

    கடந்த ஆண்டு வினோத்தையும் சாலமனின் கூட்டாளிகளையும் ரிஷி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரிஷி மீது வினோத்தும் சாலமனும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். மேலும் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தனர். ரிஷி எங்கெங்கு சென்று வருகிறார் என்பதையும் நோட்டமிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் ரிஷி மது குடித்து விட்டு பெரியார் நகர் வழியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த சாலமன், வினோத் மற்றும் இவர்களது கூட்டாளிகள் 4 பேர் ரிஷியை வழிமறித்தனர். தன்னை கொலை செய்ய கும்பல் வழிமறிப்பதை கண்ட ரிஷி அவர்களிடமிருந்து உயிர் தப்பிக்க ஓடினார். ஆனால் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி ரிஷியை கத்தியால் வெட்டியது.

    இதில் ரத்த வெள்ளத்தில் ரிஷி மயங்கி சாய்ந்தார். உடனே அந்த கும்பல் ரிஷி இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் ரிஷியை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு ரிஷி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உருளையன் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் இதில் சம்மந்தப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளப்பெருக்கால் சொர்ணாவூர் அணையி–லிருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்தது.
    • அதிகபட்ச நீர் சேமிக்கும் வகையில் அரங்கனூர் கலிங்கல் பகுதியில் 20 செ.மீ. உயரம் கொண்ட 2 தடுப்பு கட்டைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அமைத்தனர்.

    புதுச்சேரி:

    தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளப்பெருக்கால் சொர்ணாவூர் அணையி–லிருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்தது. இதனால் பாகூர் ஏரி 3 மீட்டரை தொட்டு முழு கொள்ளளவை எட்டி நீர் வழிந்தது.

    இதையடுத்து அதிகபட்ச நீர் சேமிக்கும் வகையில் அரங்கனூர் கலிங்கல் பகுதியில் 20 செ.மீ. உயரம் கொண்ட 2 தடுப்பு கட்டைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அமைத்தனர். இதனால் பாகூர் ஏரி அதிகபட்ச கொள்ளளவான 3.60 மீட்டரை எட்டியது.

    மேலும் பாகூர் சித்தேரி, உச்சிமேடு, மணப்பட்டு, கடுவனூர், ஆகிய 4 சிறிய ஏரிகளும் பருவமழைக்கு முன்னதாகவே நிரம்பி வழிந்து ஓடுகிறது.

    பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள் நிரம்பியதால், மழைகாலத்திற்கு முன்பே வரத்து மற்றும் போக்குவாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

    • புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில நிர்வாகிகள், மாநில பிற அணி நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர,தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • அ.தி.மு.க.வுக்கு துரோகம் விளைவித்தவர்கள் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில நிர்வாகிகள், மாநில பிற அணி நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர,தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமைம வகித்து பேசியதாவது:-

    அ.தி.மு.க.வுக்கு துரோகம் விளைவித்தவர்கள் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. தி.மு.க.வின் பி டீம் ஆக செயல்பட்ட ஓ.பி.எஸ். சிறிதுநாளில் தி.மு.க.வில் இணைவார். புதுவை மாநில அ.தி.மு.க. தொண்டர்கள் ஒற்றுமையுடன் எடப்பாடியார் தலைமையை ஏற்று பணி ஆற்ற முன்வர வேண்டும். தமிழகம் போன்று புதுவையிலும் ஏறத்தாழ 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையை ஏற்றுள்ளனர்.

    வெகு விரைவில் ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவிக்கு தி.மு.க.வை உறுதியுடன் எதிர்த்து அரசியல் நடத்தும் எடப்பாடியார் இந்த பதவியை நிச்சயம் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் அந்த நாள் அ.தி.மு.க. வெற்றி திருநாள் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், முன்னாள் மாநில செயலாளர் நடராசன், மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், இணைச் செயலாளர்கள் வீரம்மாள், மகாதேவி, கணேசன், திருநாவுக்கரசு, துணை தலைவர் ராஜாராமன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழக உடையார், துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, எம்.ஏ.கே.கருணாநிதி, காந்தி, கணேசன், மூர்த்தி,சேரன், நாகமணி, மணவாளன், குமுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்கக்கோரி தொழிலாளர் துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • தினக்கூலி ஊழியர்களுக்கு பதிலாக துப்புரவு தொழிலாளர்களை நியமித்து ஜிப்மர் நிர்வாகம் பணிகளை கவனித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 580 தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் மாதம் ரூ.11 ஆயிரம் வரை சம்பளம் பெறுகின்றனர். பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்கக்கோரி தொழிலாளர் துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 2017-ல் 2 மாதத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    ஆனால் ஜிப்மரில் இப்போதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதை கண்டித்து ஜிப்மர் ஹாஸ்பிடல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், கண்காணிப்பாளர் கிருஷ்ணகோபால்கோயல் ஆகியோர், சங்க தலைவர் சிவசங்கரன், பொதுச்செயலாளர் செல்வதுரை, பொருளாளர் டேனியல்சாமி உட்பட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் நோயாளிகளை இடமாற்றம் செய்தல், மருத்துவ பதிவேடு, புறநோயாளி பதிவு, உள் நோயாளிகளுக்கு உணவு வழங்குதல், சலவை, எக்ஸ்ரே, ரத்த வங்கி உட்பட 60-க்கும் மேற்பட்ட துறைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த துறைகளில் தினக்கூலி ஊழியர்களுக்கு பதிலாக துப்புரவு தொழிலாளர்களை நியமித்து ஜிப்மர் நிர்வாகம் பணிகளை கவனித்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பர்கரை பிரித்து பார்த்த பொழுது அதில் நீல நிற கையுறை இருந்தது தெரியவந்தது.
    • ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு வேறு பர்கர் தருவதாக கூறினர்.

    சேதராப்பட்டு:

    புதுவை கோரிமேடு அருகே தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் கே.எப்.சி. ஓட்டல் உள்ளது.

    இங்கு திண்டிவனத்தை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வரும் டேவிட் (வயது 29) மற்றும் இவரது நண்பரும் இந்த ஓட்டலில் பர்கர் வாங்கி உள்ளனர்.

    அதை சாப்பிடும்போது அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது. உடனே அந்த பர்கர் முழுவதையும் பிரித்து பார்த்த பொழுது அதில் நீல நிற கையுறை இருந்தது தெரியவந்தது.

    அதிர்ச்சி அடைந்த டேவிட் இதுகுறித்து உடனடியாக ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு வேறு பர்கர் தருவதாக கூறினர்.

    அதற்கு டேவிட் வேண்டாம் என கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு வீடியோ எடுத்து புகாரையும் அனுப்பி உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் பிரபல உணவுக்கடையில் சாப்பிடும் தின்பண்டத்தில் கையுறை இருந்தது வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 72)சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை தலைமை செயலகம் அருகே நிறுத்தி விட்டு கடற்கரை சாலைக்கு சென்றார்.
    • லோக நாதன் பெரிய கடை போலீசில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 72)சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை தலைமை செயலகம் அருகே நிறுத்தி விட்டு கடற்கரை சாலைக்கு சென்றார்.

    பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் லோகநாதன் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து லோக நாதன் பெரிய கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நைனார் மண்டபத்தில் மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • இந்த நிலையில் குமார் சம்பள பணத்தை தனது மனைவி ஜெயாவிடம் கொடுத்தார். அப்போது பணம் குறைவாக இருப்பதாக அவரது மனைவி தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    நைனார் மண்டபத்தில் மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    புதுவை நைனார் மண்டபம் சுதானா நகர் கலைமகள் வீதியை சேர்ந்தவர் குமார். இவர் மேட்டுப்பாளையம்-பூத்துறை செல்லும் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    வேலை நேரங்களிலும் இவர் மது குடித்துவிட்டு பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குமார் சம்பள பணத்தை தனது மனைவி ஜெயாவிடம் கொடுத்தார். அப்போது பணம் குறைவாக இருப்பதாக அவரது மனைவி தெரிவித்தார்.

    சந்தேகமடைந்து குமார் வேலை பார்க்கும் உரிமையாளரிடம் ஜெயா போன் செய்து கேட்டார். அப்போது உரிமையாளர் உனது கணவர் எப்போதும் மது குடித்து விட்டு வேலைக்கு வருகிறார். இனிமேல் அதுபோல் குடித்து விட்டு வேலைக்கு வந்தால் வேலையில் இருந்து நீக்கி விடுவேன் என்று எச்சரித்தார். இதனை ஜெயா தனது கணவரிடம் கூறி கண்டித்தார். பின்னர் ஜெயா தனது தாயாரிடம் வீட்டு வராண்டாவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குமார் சமையல் அறைக்கு சென்றார். கணவர் சாப்பிட செல்வதாக நினைத்து ஜெயா தனது தாயாரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால் வெகு நேரம் ஆகியும் சமையல் அறையில் இருந்து கணவர் வெளியே வராததால் சந்தேகமடைந்து ஜெயா சமையலறைக்கு சென்று பார்த்தார். அப்போது மின் விசிறி கொக்கியில் ஜன்னல் திரை துணியினால் கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இது குறித்து முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஓணம் பண்டிகை நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் உதயசங்கர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஓணம் பண்டிகை நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகர் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் உதயசங்கர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அருட் தந்தை ஜோபி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. முடிவில் மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு கேம் ஷோ நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் மற்றும் இயக்குனர் உதயசங்கர், முதல்வர் அனில் பூர்த்தி ஆகியோர் வழங்கினர்.நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி, டாக்டர் கவிதா உதயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரியாங்குப்பத்தில் ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது.
    • புதுவை அரியாங்குப்பத்தில் ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்தக் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி வளாக நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை அரியாங்குப்பத்தில் ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது.சிறப்பு விருந்தினராக சென்னை தாஜ் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் ஜீனு, கே .ஜான் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கான கல்லூரி வளாக நேர்காணலை நடத்தினார். இந்த நேர்காணலில் கலந்து கொண்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பணி ஆணையை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் ஜார்ஜ் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர் . முடிவில் பூங்குழலி ஸ்ரீதர் நன்றி கூறினார்.

    • நோயாளிகள் மற்றும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறிய வீடுகள் கட்டி அவரவர் குடும்பம் வசித்து வர செர்த் இந்தியா நிறுவனம் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது.
    • பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதால் குடியிருப்பு மேற்கூரைகளும் சுவர்களும் விரிசல் விட ஆரம்பித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட திப்புராயப்பேட்டை லேசார் கோவில் வீதியில் உள்ள செர்த் இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த நிக்கோலஸ் துரியோ குடியிருப்பு முன்பு இந்த இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை முடிந்த தொழு நோயாளிகள் மற்றும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறிய வீடுகள் கட்டி அவரவர் குடும்பம் வசித்து வர செர்த் இந்தியா நிறுவனம் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது.

    பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதால் குடியிருப்பு மேற்கூரைகளும் சுவர்களும் விரிசல் விட ஆரம்பித்துள்ளது, அனைத்து குடியிருப்பு குடும்பங்களின் நலன் கருதி இந்த குடியிருப்பு நிலத்தில் வசிக்கும் அவர்களுக்கு சொந்தம் ஆக்கினால் ஒவ்வொரு குடும்பமும் அரசு நிதி உதவியுடன் புதிய வீடுகள் கட்டிக் கொள்ள முடியும் என்பதால், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி அப்பகுதி மக்களை நில அளவீடு இயக்குனரிடம் அழைத்து சென்று அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் ஆவணங்களை அளித்து, அவர்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    எம்.எல்.ஏ.வின் கோரிக்கை ஏற்று இயக்குனர் அறிவியல் தொழில்நுட்ப சூழல் மற்றும் துணை கலெக்டர் வருவாய் துறைகளிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டிருந்தார், அதன் தொடர்ச்சியாக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சூழல் துறையிடம் தடையில்லா சான்றிதழ் தொடர்பாகஅதிகாரிகளை அணுகி பெற்றுவிட்டார்.

    ஆனால், நகராட்சியிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற கால தாமதம் ஆனது அதனால் புதுவை நகராட்சி வருவாய் துறை ஆய்வாளர் அண்ணாமலையை நேரில் சந்திக்க கென்னடி எம்.எல்.ஏ. சென்றார்.

    அங்கு இருந்த அதிகாரிகளிடம் பல மாதம் கடந்தும் சரியான பதில் தடையில்லா சான்றிதழ் அளிப்பது சம்பந்தமாக அதிகாரி கொடுக்கவில்லை.உடனே அப்பகுதி பொதுமக்களின் முக்கியத்துவம் அறிந்து தடையில்லா சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று அறிவுறுத்தினார்.

    அப்போது தி.மு.க கிளை செயலாளர் செல்வம், குடியிருப்பில் வசித்து வரும் அருள், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டு தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மாணவியின் தாய் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பெற்ற 2 மகளிடம் தந்தை ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவத்தில் முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதே போல் மற்றொரு சம்பவம் புதுவையில் நடந்துள்ளது. புதுவை முதலியார்பேட்டை போலீஸ் நிலைய எல்கைக்குட்டபட்ட பகுதியை சேர்ந்தவர் 45 வயது கட்டிட தொழிலாளி. இவருக்கு 40 வயது மனைவி மற்றும் 12 வயது மகள் உள்பட 2 மகள்கள் உள்ளனர். இந்த மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார். இதனை அந்த மாணவியின் தந்தையான கட்டிட தொழிலாளி எட்டிப்பார்த்துள்ளார். மேலும் அந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் தாய் தனது கணவரிடம் கண்டித்துள்ளார். ஆனால் அவர் தவறை திருத்திக்கொள்ளவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து அந்த மாணவியின் தாய் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமூக ஜனநாயக அமைப்புகள் இணைந்து இருசக்கர வாகன பேரணியை நடத்தினர்.
    • தமிழகம் போல புதுவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சிந்தனையாளர்கள் பேரவை தலைவர் கோ. செல்வம் தலைமையில் பல்வேறு தமிழ் மற்றும் சமூக ஜனநாயக அமைப்புகள் இணைந்து இருசக்கர வாகன பேரணியை நடத்தினர்.

    தமிழகம் போல புதுவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டும். தமிழ் மொழி தொடர்பான அனைத்து விருதுகளையும் உடனே வழங்க வேண்டும், படைப்பாளர்களுக்கு ஊக்கம் தரும் திட்டங்களை அறிவிக்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த பேரணி சட்டசபை அருகே முடிவடைந்தது.

    பேரணியை முடித்து வைத்து புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    புதுவையில் இன ஒற்றுமையில்லாத ஆட்சி, நம்மை நாமே காட்டிக் கொடுக்கும் ஒரு ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை மக்கள் கவனித்து வருகின்றனர். தமிழ் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. ஆனால் இந்தி மொழி வளர்ச்சிக்கு ரூ.1½ கோடி அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள், மொழி மற்றும் இனத்தை வளர்க்கத்தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த விருதுகளும் வழங்கவில்லை. கலை பண்பாட்டுத்துறை நாடகம், கலை நிகழ்ச்சிகளை நடத்தினால் புதுவை, காரைக்காலில் ரூ.4 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்குகின்றனர். அதுவே மாகி, ஏனாமில் ரூ.15 லட்சம் தரப்படுகிறது.

    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை வேகமாக புதுவை அரசு அமல்படுத்தி வருகிறது. புதிய கல்வி கொள்கையை பற்றி என்ன கேட்டாலும் அரசு வாய் திறப்பதில்லை. மாநில பொருளாதாரம் சீரழிந்து வருவதுடன், தாய்மொழி புறக்கணிப்பு செய்வது, நமது அடையாளங்களை மறக்கடிக்கப்படும் சூழலும் உள்ளது.

    இது தொடர்பாக கல்வியாளர்கள், பெரியோர், இனம் சார்ந்த உணர்வாளர்களிடம் தெரியப்படுத்தி மக்களை ஒன்றுபடுத்தி எழுச்சிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×