search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடியிருப்பு பகுதிகளுக்கு தடையில்லா சான்றிதழ்  -கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    நிக்கோலஸ் துரியோ குடியிருப்பு பகுதிகளுக்கு உடனடியாக தடையில்லா சான்றிதழ் அளிக்க வருவாய் துறை அதிகாரிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து அறிவுறுத்திய காட்சி.

    குடியிருப்பு பகுதிகளுக்கு தடையில்லா சான்றிதழ் -கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • நோயாளிகள் மற்றும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறிய வீடுகள் கட்டி அவரவர் குடும்பம் வசித்து வர செர்த் இந்தியா நிறுவனம் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது.
    • பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதால் குடியிருப்பு மேற்கூரைகளும் சுவர்களும் விரிசல் விட ஆரம்பித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட திப்புராயப்பேட்டை லேசார் கோவில் வீதியில் உள்ள செர்த் இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த நிக்கோலஸ் துரியோ குடியிருப்பு முன்பு இந்த இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை முடிந்த தொழு நோயாளிகள் மற்றும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறிய வீடுகள் கட்டி அவரவர் குடும்பம் வசித்து வர செர்த் இந்தியா நிறுவனம் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது.

    பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதால் குடியிருப்பு மேற்கூரைகளும் சுவர்களும் விரிசல் விட ஆரம்பித்துள்ளது, அனைத்து குடியிருப்பு குடும்பங்களின் நலன் கருதி இந்த குடியிருப்பு நிலத்தில் வசிக்கும் அவர்களுக்கு சொந்தம் ஆக்கினால் ஒவ்வொரு குடும்பமும் அரசு நிதி உதவியுடன் புதிய வீடுகள் கட்டிக் கொள்ள முடியும் என்பதால், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி அப்பகுதி மக்களை நில அளவீடு இயக்குனரிடம் அழைத்து சென்று அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் ஆவணங்களை அளித்து, அவர்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    எம்.எல்.ஏ.வின் கோரிக்கை ஏற்று இயக்குனர் அறிவியல் தொழில்நுட்ப சூழல் மற்றும் துணை கலெக்டர் வருவாய் துறைகளிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டிருந்தார், அதன் தொடர்ச்சியாக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சூழல் துறையிடம் தடையில்லா சான்றிதழ் தொடர்பாகஅதிகாரிகளை அணுகி பெற்றுவிட்டார்.

    ஆனால், நகராட்சியிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற கால தாமதம் ஆனது அதனால் புதுவை நகராட்சி வருவாய் துறை ஆய்வாளர் அண்ணாமலையை நேரில் சந்திக்க கென்னடி எம்.எல்.ஏ. சென்றார்.

    அங்கு இருந்த அதிகாரிகளிடம் பல மாதம் கடந்தும் சரியான பதில் தடையில்லா சான்றிதழ் அளிப்பது சம்பந்தமாக அதிகாரி கொடுக்கவில்லை.உடனே அப்பகுதி பொதுமக்களின் முக்கியத்துவம் அறிந்து தடையில்லா சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று அறிவுறுத்தினார்.

    அப்போது தி.மு.க கிளை செயலாளர் செல்வம், குடியிருப்பில் வசித்து வரும் அருள், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×