என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கடல் வழியிலும் கடலோர காவல்படை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.
    • மோதலை தவிர்க்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் 3 சூப்பிரண்டுகள் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    சுருக்கு மடிவலை பயன்படுத்த தமிழகம் மற்றும் புதுவையில் தடை விதிக்கபட்டுள்ளது.

    இருப்பினும் புதுவையில் சுருக்குவலையை சிலர் இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராமங்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி வீராம்பட்டினம்- நல்லவாடு மீனவ கிராமங்களுக்கு இடையே கடல் மார்க்கமாகவும் கடற்கரையிலும் மோதல் ஏற்பட்டது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை அடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம் கூடி இன்று (திங்கட்கிழமை) முதல் புதுவை துறைமுகத்துக்குள் சுருக்குவலையுடன் வரும் படகுகள் தடை செய்யப்படும். மீறி வரும் படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர்.

    இதனால் இன்று மீனவர்களுக்குள் மோதல் வரக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பா கீரப்பாளையம் மற்றும் தேங்காய்த்திட்டு துறைமுகம் பகுதியில் போலீசார் காலை 7 மணி முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கடல் வழியிலும் கடலோர காவல்படை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. மோதலை தவிர்க்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் 3 சூப்பிரண்டுகள் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • முதலியார்பேட்டையில் நடைபயிற்சி சென்ற ஜிப்மர் பெண் ஊழியரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செயினை பறித்து சென்றனர்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மைதிலி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டையில் நடைபயிற்சி சென்ற ஜிப்மர் பெண் ஊழியரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செயினை பறித்து சென்றனர்.

    புதுவை முதலி யார்பேட்டை உழந்தை கீரப்பாளையம் புவன்கரே வீதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி மைதிலி (வயது47). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சிங் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமணன் இறந்து விட்டார். தினமும் மைதிலி அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதுபோல் 8 மணியளவில் நடைபயிற்சி சென்று விட்டு பாரதிதாசன் நகர் வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மைதிலி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மைதிலி திருடன் திருடன் என அலறல் சத்தம் போட்டு அவர்களிடமிருந்து போராடினார்.

    ஆனால் அங்கு யாரும் இல்லாததால் அந்த வாலிபர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மைதிலி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மைதிலி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற மர்மநபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆரோவில் அருகே அடுத்தடுத்த நடந்த 3 கார் விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் மீது மோதியதில் கார் 10 அடி பள்ளத்தில் உருண்டு ஓடியது.

    புதுச்சேரி:

    ஆரோவில் அருகே அடுத்தடுத்த நடந்த 3 கார் விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். புதுவை லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் போஸ்கோ.(வயது 60). இவர் தனது உறவினர்களை காரில் ஏற்றிக்கொண்டு திண்டிவனம் ெரயில் நிலையத்திற்கு சென்றார். அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ெரயிலில் ஏற்றிவிட்டு புதுவை திரும்பி கொண்டு இருந்தார். ஆரோவில் அருகே புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை ராவுத்தான்குப்பம் அருகே சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார்.

    அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் மீது மோதியதில் கார் 10 அடி பள்ளத்தில் உருண்டு ஓடியது. அதிர்ச்சி அடைந்த போஸ்கோ செய்வதறியாது திகைத்து நின்றார். இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவம் அறிந்து வந்த ஆரோவில் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை ஓரம் நின்றிருந்த கார் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு வருகின்றனர். இந்த விபத்தில் போஸ்கோ அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினார்.

    நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 2 பெண்கள் திருப்பதியில் இருந்து புதுவை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஒட்டி வந்தார். அதிகாலை பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த கார் முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    கார் லாரியின் மீது மோதிய வேகத்தில் கார் பைபாஸ் சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர், அதில் பயணம் செய்த 2 பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்த 3 பேரையும் ஆரோவில் போலீசார் மற்றும் டோல்கேட் ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இரும்பை ரோடு சந்திப்பில் பட்டாணூரை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன் ஆட்டு இறைச்சி வாங்கிக்கொண்டு ேமாட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது புதுவையில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

    இதில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது. மணிகண்டனின் இடது காலில் காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆரோவில் அருகே புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து நடந்த 2 கார் விபத்து, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பைக் மீது கார் மோதிய விபத்து குறித்து ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். வில்லியனூர் பெருமாள்புரத்தை சேர்ந்தவர் கண்ணப்பன்.
    • வெண்ணிலாவின் கணவர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூருக்கு சென்றுவிடுவார்.

    புதுச்சேரி:

    எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். வில்லியனூர் பெருமாள்புரத்தை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மனைவி செல்வி. இவரது மகள் வெண்ணிலா(வயது24). இவருக்கும் புதுவையை சேர்ந்த ஆனந்தபாபு என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். வெண்ணிலாவின் கணவர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூருக்கு சென்றுவிடுவார். அதனால் வெண்ணிலா தனது மகளுடன் தாயாரின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்தார்.

    இதற்கிடையே வெண்ணிலாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வெண்ணிலாவுக்கு வயிற்று வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெண்ணிலா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டு கண்டமங்கலத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது பாட்டி கன்னியம்மாளிடம் எலி மருந்து தின்ற விபரத்தை வெண்ணிலா தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கன்னியம்மாள் தனது மகள் செல்விக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். பின்னர் இருவரும் வெண்ணிலாவை சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், அதன்பிறகு அங்கிருந்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் வெண்ணிலாவை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று வெண்ணிலா பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடிபோதையில் ஆற்றில் கால்கழுவ சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி இறந்து போனார்.
    • இந்த நிலையில் சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் சக்திவேல் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே குடிபோதையில் ஆற்றில் கால்கழுவ சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி இறந்து போனார்.

    கடலூர் சாவடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது37). இவர் லாரியில் செங்கல் லோடு ஏற்றும் வேலை செய்து வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் தினமும் பாகூர் அருகே சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடிக்க செல்வது வழக்கம். அதுபோல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சக்திவேல் மது குடிக்க சோரியாங்குப்பம் சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் சக்திவேல் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். குடிபோதையில் சக்திவேல் ஆற்றில் கால்கழுவ சென்ற போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உலக பொதுமறையான திருக்குறள் மற்றும் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பிய நூல்களை கற்க இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவியை சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    உலக பொதுமறையான திருக்குறள் மற்றும் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பிய நூல்களை கற்க இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.

    அனைவரும் தமிழ் காப்பியங்களையும், அற நூல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மருத்துவ கல்லூரி மாணவி ஸ்ரீ கஜலட்சுமி சிறிய துண்டு பேப்பரில் 1330 திருக்குறளை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

    புதுவையில் உள்ள ரெசிடென்சி பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 15 X 42 செ.மீ. அளவில் உள்ள சிறிய காகிதத்தில் 12 மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் எழுதி உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவியை சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார். மேலும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், லட்சுமிகாந்தன், பள்ளி தாளாளர் கிரிஸ்டிராஜ் ஆகியோர் உலக சாதனை படைத்த மாணவியை பாராட்டினார்கள்.

    நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை விழிகள் அறக்கட்டளையின் நிர்வாகி பிரேம்குமார், செயலாளர் கீர்த்தனா தலைமையில் தன்னார்வலர்கள் செய்திருத்தனர்.

    • புதுவை மதகடிப்பட்டு, மணக்குளவிநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் ஐ.சி.டி. அகாடமியின் யூத்டாக் 2022 அரையிறுதி சுற்றுக்கான போட்டி நடந்தது.
    • இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு, மணக்குளவிநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் ஐ.சி.டி. அகாடமியின் யூத்டாக் 2022 அரையிறுதி சுற்றுக்கான போட்டி நடந்தது.

    இதில் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி முதலாமாண்டு மாணவி ஆஷிகா முதல் பரிசினை பெற்று கோவையில் நடைபெறும் இறுதி சுற்றிற்கு தேர்வு செய்யப்பட்டார். இறுதி ஆண்டு மாணவி ரோஷின் 2-வது பரிசை பெற்றார். அரையிறுதியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவையில் நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஐ.சி.டி. அகாடமி யூத் ஐகான் விருதும் சிங்கப்பூர் கல்வி சுற்றுலா சென்று வரும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி குழும மற்றும் மேலாண் இயக்குநர் தலைவர் தனசேகரன் சிறப்புரை ஆற்றினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். சென்னை ஐ.சி.டி.அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி அரி பாலச்சந்திரன் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

    எச்.சி.எல். மேலாளர் டீனா, கெம்பேப் குழும தலைவர் விஜயகுமார், திறன் கையகப்படுத்துதல் தலைவர் விஜயகுமார், ஓமேகா ஹெல்த்கேர் மேனேஜ் மென்ட் மூத்த இயக்குனர் சேவியர் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு வெற்றியாளர்களை தேர்வு செய்தது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், அகாடமிக் டீன்கள் அன்புமலர் அறிவழகர், தேர்வு கட்டுப்பா ட்டாளர் ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐ.சி.டி.அகாடமி தணிக்கை பிரிவு தலைவர் நரேந்திர கோபால் நன்றி கூறினார்.

    • உலக மனநல தினத்தை முன்னிட்டு கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் கடற்கரை சாலையில் நடந்தது. வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கடற்கரை சாலை காந்தி சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் டூப்ளே சிலையில் முடிவடைந்தது.

    புதுச்சேரி:

    உலக மனநல தினத்தை முன்னிட்டு கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் கடற்கரை சாலையில் நடந்தது. வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில்சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற தலைவர் வக்கீல் கோவிந்தராஜ், மகாத்மா காந்தி மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுவாதி, ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பின் தலைவர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கடற்கரை சாலை காந்தி சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் டூப்ளே சிலையில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் மனநல மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் மற்றும் பயிற்சி மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மூளை மற்றும் மனநல டாக்டர் விமலநாதன் செய்திருந்தார்.

    • ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10-ந் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • விழிப்புணர்வு பதாகை ஏந்தி பேரணியாக கடற்கரை சாலை காந்தி சிலையில் தொடங்கி கார்கில் நினைவிடம் வரை நடந்து சென்றனர்.

    புதுச்சேரி:

    ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10-ந் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிம்ஸ் மனநலத்துறை சார்பில் செவிலியர் கல்லூரி மாணவ- மாணவிகள் மனநலம் குறித்த விழிப்புணர்வு பதாகை ஏந்தி பேரணியாக கடற்கரை சாலை காந்தி சிலையில் தொடங்கி கார்கில் நினைவிடம் வரை நடந்து சென்றனர்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார்.பிம்ஸ் மனநலமருத்துவ துறை தலைவர் டாக்டர் பிரதீப் திலகன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உலக சுகாதார நிறுவனத்தின் புதுச்சேரி கண்காணிப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சாய்ராபானு கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலிய மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011-ல் அமைத்தது.
    • புதுவை சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்து வருகிறார்.

    புதுச்சேரி:

    பிரான்ஸிலுள்ள தமிழ்க் கலாச்சார மன்றம் பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011-ல் அமைத்தது.

    தற்போது பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று பிரான்ஸ் அருகே செர்ஜி நகரத்திலுள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது.இந்த சிலையை ஜனாதிபதி விருது பெற்ற புதுவை சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்து வருகிறார்.

    சிலையின் இறுதிக்கட்ட பணி தற்போது நடக்கிறது. வெண்கலத்தில் 7 அடியில் திருவள்ளுவர் சிலை உருவாகிறது. இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் விமானத்தில் திருவள்ளுவர் சிலை பிரான்சுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இது குறித்து தமிழ்க்கலா ச்சார மன்ற சிறப்பு அழைப்பாளரும், முன்னாள் சபாநாயகருமான சிவக்கொழுந்து கூறுகையில், "பிரான்ஸ் அருகேயுள்ள செர்ஜி நகரில் நவம்பர் 11-ந் தேதி திறப்பு விழா நடக்கிறது. அதையொட்டி திருவள்ளுவர் மாநாடும் நடத்துகிறோம்.

    சிலை அனைவரையும் கவரும் வகையில் 600கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்க்கலாச்சார மன்றத்தின் மூலம் பிரான்சில் வாரந்தோறும் தமிழ் மொழி வகுப்புகள், பண்பாட்டு இசை, நடனப்பயிற்சி வகுப்புகளை இளையோருக்கு நடத்துகிறோம். என்று தெரிவித்தார்.

    • புதுவைக்கு வருகை புரிந்த மத்திய கல்வி மந்திரி புதுவையில் பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது போல இந்த விவகாரத்திலும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செய்லாளர் (ஒ.பி.எஸ். பிரிவு) ஒம்.சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவைக்கு வருகை புரிந்த மத்திய கல்வி மந்திரி புதுவையில் பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.இதனை புரிந்து கொள்ளாத புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எப்போது எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது போல இந்த விவகாரத்திலும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

    முதலில் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் தமிழகத்தில் தி.மு.க.ஆட்சியில் புதிய கல்விக் கொள்கையில் நிலைபாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒருபோதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு இப்போது புதிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்கள் இருந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று பாலுக்கும் காவல் பூனைக்கும் காவல் என்று இரட்டை நிலையை பின்பற்றுகிறது.

    ஆனால் அ.தி.மு.க. எப்போதும் புதிய கல்வி கொள்கையில் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை மாநில தி.மு.க. அமைப்பாளர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த கொள்கையால் வட மாநிலத்தவர் புதுவையை ஆக்கிரமிக்கும் சூழல் நிலவும் என்று கூறியுள்ளார்.

    புதுவை மாநிலத்தில் வட மாநிலத்தவரை உள்ளே அனுமதிக்க முழுமுதல் காரணமாக இருந்தது இவரது ஆதரவில் அமைந்த கடந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசுதான். மேல்நிலைப் பள்ளிகளில் முதல்வர் பதவி உள்ளிட்ட குரூப் பி பணியிடங்களில் 20 சதவீதம் வடநாட்டவருக்கு வழங்கலாம் என்ற அனுமதி வழங்கியது தி.மு.க. ஆதரவு பெற்ற கடந்த காங்கிரஸ் அரசாங்கம் தான்.

    இவை அனைத்தையும் மறந்து விட்டு தனக்கு வசதியாக எப்போதும் போல பொய் மூட்டைகளை அறிக்கையாக தி.மு.க. மாநில அமைப்பாளர் வெளியிட்டுள்ளார். எனவே இது போன்ற செயல்களை நிறுத்தி மக்கள் பணியில் ஈடுபட புதுவை எதிர்கட்சி தலைவரை புதுவை அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு ஒம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • கல்வித்துறை மற்றும் அத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நேதாஜி நகர் 3 பஞ்சாயத்தரர்களுடன் மனு அளித்திருந்தார்.
    • கென்னடி எம்.எல்.ஏ. கேட்டிருந்த கோரிக்கை கல்வித்துறை மூலமும் அத்துறை அமைச்சர் மூலமும் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 3-ல் உள்ள பெரியபாளையத்தம்மன் அரசு பள்ளியினை சமுதாயக்கூடத்திற்கு மாற்றி கொடுப்பது சம்பந்தமாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கல்வித்துறை மற்றும் அத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நேதாஜி நகர் 3 பஞ்சாயத்தரர்களுடன் மனு அளித்திருந்தார்.

    பழுதடைந்த அப்பள்ளியை புரனைப்பு செய்தும், பெரியபாளையத்தம்மன் கோவில் பணி நடைபெற்று கொண்டிருப்பதினாலும் தற்சமயம் மாணவர்கள் அங்குள்ள சமுதாயக்கூட த்தில் தங்கிப் படிக்க கென்னடி எம்.எல்.ஏ. கேட்டிருந்த கோரிக்கை கல்வித்துறை மூலமும் அத்துறை அமைச்சர் மூலமும் வழங்கப்பட்டது.

    ஆனால் மாணவர்கள் அங்கு படிக்க வசதியாக சமுதாய கூடம் திறக்கப்படவில்லை. அதனால் கென்னடி எம்.எல்.ஏ. ஊர் பஞ்சாயத்துடன் சென்று நகராட்சி ஆணையரை சந்தித்து வருவாய் துறை அதிகாரி சாம்பசிவத்திடம் இருந்து சாவியைப் பெற்றுக் கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.

    அதற்கு ஆணையர் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து செயற்பொறியாளர் யுவராஜை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் தாமரை நகர் மற்றும் நேதாஜி நகர் 2-ல் நடைபெறும் பணிகளின் குளறுபடிகளை உடனே சரி செய்து முடிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

    மேலும் வம்பாக்கீரப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதி சாலை மேம்படுத்துதல் மற்றும் யூ-வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி ஆகிய வற்றை மிக விரைவில் தொடங்குங்கள் என்றும் கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    ×