என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eating rat"

    • எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். வில்லியனூர் பெருமாள்புரத்தை சேர்ந்தவர் கண்ணப்பன்.
    • வெண்ணிலாவின் கணவர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூருக்கு சென்றுவிடுவார்.

    புதுச்சேரி:

    எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். வில்லியனூர் பெருமாள்புரத்தை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மனைவி செல்வி. இவரது மகள் வெண்ணிலா(வயது24). இவருக்கும் புதுவையை சேர்ந்த ஆனந்தபாபு என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். வெண்ணிலாவின் கணவர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூருக்கு சென்றுவிடுவார். அதனால் வெண்ணிலா தனது மகளுடன் தாயாரின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்தார்.

    இதற்கிடையே வெண்ணிலாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வெண்ணிலாவுக்கு வயிற்று வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெண்ணிலா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டு கண்டமங்கலத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது பாட்டி கன்னியம்மாளிடம் எலி மருந்து தின்ற விபரத்தை வெண்ணிலா தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கன்னியம்மாள் தனது மகள் செல்விக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். பின்னர் இருவரும் வெண்ணிலாவை சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், அதன்பிறகு அங்கிருந்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் வெண்ணிலாவை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று வெண்ணிலா பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×