என் மலர்
புதுச்சேரி

அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.
அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு
- கல்வித்துறை மற்றும் அத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நேதாஜி நகர் 3 பஞ்சாயத்தரர்களுடன் மனு அளித்திருந்தார்.
- கென்னடி எம்.எல்.ஏ. கேட்டிருந்த கோரிக்கை கல்வித்துறை மூலமும் அத்துறை அமைச்சர் மூலமும் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 3-ல் உள்ள பெரியபாளையத்தம்மன் அரசு பள்ளியினை சமுதாயக்கூடத்திற்கு மாற்றி கொடுப்பது சம்பந்தமாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கல்வித்துறை மற்றும் அத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நேதாஜி நகர் 3 பஞ்சாயத்தரர்களுடன் மனு அளித்திருந்தார்.
பழுதடைந்த அப்பள்ளியை புரனைப்பு செய்தும், பெரியபாளையத்தம்மன் கோவில் பணி நடைபெற்று கொண்டிருப்பதினாலும் தற்சமயம் மாணவர்கள் அங்குள்ள சமுதாயக்கூட த்தில் தங்கிப் படிக்க கென்னடி எம்.எல்.ஏ. கேட்டிருந்த கோரிக்கை கல்வித்துறை மூலமும் அத்துறை அமைச்சர் மூலமும் வழங்கப்பட்டது.
ஆனால் மாணவர்கள் அங்கு படிக்க வசதியாக சமுதாய கூடம் திறக்கப்படவில்லை. அதனால் கென்னடி எம்.எல்.ஏ. ஊர் பஞ்சாயத்துடன் சென்று நகராட்சி ஆணையரை சந்தித்து வருவாய் துறை அதிகாரி சாம்பசிவத்திடம் இருந்து சாவியைப் பெற்றுக் கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.
அதற்கு ஆணையர் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து செயற்பொறியாளர் யுவராஜை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் தாமரை நகர் மற்றும் நேதாஜி நகர் 2-ல் நடைபெறும் பணிகளின் குளறுபடிகளை உடனே சரி செய்து முடிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
மேலும் வம்பாக்கீரப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதி சாலை மேம்படுத்துதல் மற்றும் யூ-வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி ஆகிய வற்றை மிக விரைவில் தொடங்குங்கள் என்றும் கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.






