என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • உப்பளம் தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சரியாக செயல்படுத்தப் படுவதில்லை.
    • தொகுதியில் இருந்து அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, நலத்திட்ட உதவிகள் பயனாளிகளை சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.அனிபால் கென்னடி சமூக நலத்துறை இயக்குனர் பத்மாவதி, துணை இயக்குனர் கலாவதி ஆகியோரை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    உப்பளம் தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சரியாக செயல்படுத்தப் படுவதில்லை.

    தொகுதியில் இருந்து அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, நலத்திட்ட உதவிகள் பயனாளிகளை சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இதில் தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர் செல்வம், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார். இவரது வீட்டு முகவரிக்கு பிரான்சில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் உன்னையும் உன் குடும்பத்தினரையும் 3 மாதத்திற்குள் கொலை செய்து விடுவோம் என குறிப்பிடப்பட்டு இருந்து. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. இது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாகள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தியால் பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு எதிராக எம்.எல்.ஏ. போராடியதால் அது தொடர்பாக கொலைமிரட்டல் கடிதம் வந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • மனநல நோய் ஒருவரின் எண்ணம், செயல், உணர்வுகளை பாதிக்கிறது.
    • மனநலம் இன்றி உடல் நலம் இல்லை. அதேபோல் உடல்நலம் இன்றி மனநலம் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ந்தேதி உலக சுகாதார நிறுவனத்தால் 'உலக மனநல தினம்' அனுசரிக்கப்படுகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் 'உலக மக்கள் அனைவரின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயலே முதன்மையானதாக கருத வேண்டும்' என்பதே. உலக அளவில் 8 பேரில் ஒருவர் மனநல பாதிப்பு உள்ளவராக உள்ளனர். இளம் வயதிலேயே அதிக பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

    உலக சுகாதார நிறுவனம் 10 முதல் 19 வயது வரையிலுள்ள வளர் இளம் பருவத்தினரில் 7 பேரில் ஒருவர் மனநல பிரச்சினையில் உள்ளதாக தெரிவிக்கிறது.

    இந்த வயதினர் ஆண்டு தோறும் சராசரியாக 45,800 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதாவது 11 நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலக அளவில் தற்கொலை எண்ணங்கள் மக்களிடையே அதிகரித்து உள்ளது. மனப்பதற்றம் மற்றும் மனஅழுத்த நோய்கள் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. வளர்ந்து வரும் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நீண்ட நாள் கருத்து வேறுபாடுகள், வன்முறை, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அவசர கால நோய்கள் போன்றவைகளினால் மக்கள், மனநல பாதிப்பு அடைகின்றனர்.

    மனநல நோய் ஒருவரின் எண்ணம், செயல், உணர்வுகளை பாதிக்கிறது. மனநலம் இன்றி உடல் நலம் இல்லை. அதேபோல் உடல்நலம் இன்றி மனநலம் இல்லை. இலவசமாக மனநல சிகிச்சை பல்வேறு மருத்துவமனைகளில் அளிக்கப்படும். மனநல சிகிச்சை பெற மக்கள் தயக்கத்தை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • புதுவை, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 23 மாநிலங்களில் அடிக்கடி பேரிடர் பாதிப்பு ஏற்படுகிறது. பேரிடர் காலங்களில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை இணைந்து செயல்படுகிறது.
    • முதல்கட்டமாக 100 தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது.

    புதுச்சேரி:

    புதுவை, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 23 மாநிலங்களில் அடிக்கடி பேரிடர் பாதிப்பு ஏற்படுகிறது.

    பேரிடர் காலங்களில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை இணைந்து செயல்படுகிறது. இவர்களுடன் அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்களையும், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக ஆப்த மித்ரா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தில் புதுவை மாநிலத்தில் 500 தன்னார்வலர்கள் இணைக்கப்பட உள்ளனர். முதல்கட்டமாக 100 தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது. காமராஜர் மணிமண்டபத்தில்  பயிற்சி முகாமினை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், மாவட்ட கலெக்டர் வல்லவன், துணை கலெக்டர்கள் தமிழ்ச்செல்வன், கந்தசாமி, இளங்கோ, துணை தாசில்தார் ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஆப்த மித்ரா கையேட்டினை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட, அதனை முதல் அமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார் பெற்றுக்கொண்டார்.

    முன்னதாக குடிமை பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கு சீருடை, அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்துபல்வேறு துறைகளின் திறனை வெளிப்படுத்தும் கண்காட்சியினை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார், இதில் தீயணைப்புத்துறையினர் தங்களது மீட்பு வாகனங்கள், உபகரணங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    இதேபோல் சுகாதாரத்துறை உயிர்காக்கும் கருவிகளை காட்சிப்படுத்தி இருந்தது. மேலும் காவல் துறை, கடலோர காவல் படை மற்றும் துறைமுகத் துறையினரின் உபகரணங்களும் காட்சி படுத்தப்பட்டிருந்தது. இதனை முதல்-அமைச்சர ரங்கசாமி, ஜான்குமார் எம்.எல்.எ. மற்றும அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    வருகிற 21-ந் தேதி வரை நடைபெறும் முகாமிற்கு பின் தன்னார்வலர்களுக்கு ரூ.2 லட்சத்திற்கான காப்பீடு, பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் 14 பொருட்கள் அடங்கிய கிட், பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    பயிற்சி முகாமில் நீச்சல், மரம் வெட்டுதல், சாலைகளில் தடைகளை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

    • புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
    • கவர்னர் தமிழிசை தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

    தனது தாயார் கமலா அம்மாளிடம் ஆசி பெற்றார். அ.தி.மு.க. மாநில அவைத் தலைவர் அன்பானந்தம் தலைமையில் மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் முன்னிலையில் மாநில செயலாளர் அன்பழகன் நீடூழிவாழ வேண்டிய 8:30 மணிக்கு அளவில் மனக்குள விநாயகர் ஆலயத்தில் அ.தி.மு.க.வினர் தங்க தேர் இழுத்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள்.

    புதுவை கவர்னர் தமிழிசை தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயபால், அ.தி.மு.க. மாநில ஜெ. பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர், முன்னாள் மாநில செயலாளர் நடராஜன், மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், திருநாவுக்கரசு, மகாதேவி,.மாநில துணை தலைவர்கள் ராஜாராமன், சின்னதுரை, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர்கள், அன்பழக உடையார், மாநில துணைச் செயலாளர்கள் பெரியசாமி, கிருஷ்ண மூர்த்தி, எம்.ஏ.கே. கருணாநிதி, காந்தி, சேரன், குணசேகரன், கணேசன், மூர்த்தி, நாகமணி, மணவாளன், குமுதன், மேற்கு மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ,மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மாநில மீனவர் அணி செயலாளர் ஞானவேல்.

    இளைஞர் , இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன்,மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாநில வர்த்தக அணி செயலாளர் முத்துராஜீலு |மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், நகர தலைவர்கள் செல்வகுமார், கணேஷ், சிவா, தொகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆறுமுகம்,பாஸ்கர், துரை, பொன்னுசாமி, கருணாநிதி, ராஜா, சம்பத், நடேசன், குணசேகர், கிருஷ்ணன், கமல் தாஸ், வேலவன்.மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் மற்றும் உப்பளம் தொகுதி பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

    • பா.ஜனதா சார்பில் 300 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளை செந்தில்குமரன் ஏற்பாட்டில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் செல்வகணபதி எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
    • சோலைநகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி பா.ஜனதா சார்பில் 300 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளை செந்தில்குமரன் ஏற்பாட்டில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் செல்வகணபதி எம்.பி. ஆகியோர் வழங்கி னர்.

    பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினரும், முத்தியால்பேட்டை தொகுதி பா.ஜனதா பிரமுகருமான செந்தில்குமரன் ஏற்பாட்டில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தியால்பேட்டை சோலைநகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

    கண் சிகிச்சை முகாமில் பரிசோதித்துக்கொண்ட வர்களில் 300 பேருக்கு பார்வை குறைபாடு கண்டறியப்பட்டது. அவர்களுக்கு கண் மருத்துவர் மூலம் கண் கண்ணாடிகள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

    அதன்படி அவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி முத்தியால்பேட்டையில் பா.ஜனதா செயற்குழு உறுப்பினர் செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் செல்வகணபதி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகள் 300 பேருக்கு கண் கண்ணாடிகளை வழங்கினர்.

    மேலும் இதனை ஏற்பாடு செய்த செந்தில்குமரனை அவர்கள் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை தொகுதி தலைவர் அரிதாஸ், மாநில இளைரஞணி நிர்வாகிகள் உமாசங்கர், ராக்பெடரிக் அஸ்வின், வர்த்தகபிரிவு மாநில செயலாளர் சீனிவாசன், பசு பாதுகாப்பு இயக்க தலைவர் கிருஷ்ணகாந்தன், மாவட்ட பொதுச்செயலாளர் தேவராசு, முகாம் தலைவர்கள் ராமச்சந்திரன், மலர், கவிதா, இளைஞரணி தொகுதி தலைவர் ராம்குமார், நிர்வாகிகள் சசிதரன், தினேஷ்குமார், வினோத், அரவிந்த் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்களான மீனவரணி மாநில நிர்வாகி சுதர்சன், தகவல் தொழில்நுட்ப பிரிவு விஜய்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் எம்.ஆர்.சரவணன், ஜெ.சரவணன், அருண்குமார், வடிவேலு மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    • வெங்கட்டா நகரில் நடந்து சென்ற ஓட்டல் அதிபர் மனைவியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.
    • மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்தும், முக கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை வெங்கட்டா நகரில் நடந்து சென்ற ஓட்டல் அதிபர் மனைவியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.

    புதுவை காமராஜர் நகர் சன்னதி தெருவை சேர்ந்தவர் டெல்லி குமார். இவர் 45 அடி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி அம்பிகா(வயது50). அம்பிகா ஓட்டலை மேற்பார்வையிட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வெங்கட்டாநகர் திருவேங்கடம் வீதியில் நடந்து வந்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்தும், முக கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்தனர். அப்போது சுதாரித்துக்கொண்ட அம்பிகா செயினை கையால் இறுக்கமாக பிடித்துக்கொண்டார்.

    ஆனாலும், அந்த மர்மநபர்கள் கையில் கிடைத்த பாதி தங்க செயினுடன் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து டெல்லி குமார் பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    புதுவையில் சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்மநபர்கள் நகையை பறித்து செல்கின்றனர். முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையத்தை சேர்ந்த ஜிப்மர் பெண் ஊழியரிடம் பட்டப்பகலில் மர்மநபர்கள் செயினை பறித்து சென்றனர். தொடரும் இந்த சம்பவங்களால் பெண்கள் தனியாகவே நடந்து செல்லவே அச்சமடைந்துள்ளனர்.

    • புதுவை திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்க ஆேலாசனை கூட்டம் வள்ளலார் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் இசைக்கலைவன் தலைமை தாங்கினார்.
    • மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்க ஆேலாசனை கூட்டம் வள்ளலார் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் இசைக்கலைவன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    கூட்டத்தில் புதுவை மாநிலத்தை சேர்ந்த திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை தெரிவித்தனர்.

    இதில், புதுவையில் குப்பை வரியை குறைத்ததற்கும், கழிவுநீர் வாய்க்கால் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்கும், வணிகர்களின் வியாபார வளர்ச்சிக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    திருமண மண்டப உரிமையாளர்களின் தொழில் பாதிக்கும் வகையில் மண்டபங்களில் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு இருக்கும் கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணைத்தலைவர்கள் மணி, ராஜேந்திரன், பொருளாளர் மண்ணாங்கட்டி, துணை செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் நன்றி கூறினார்.

    • இரு மாநில எல்லையை இணைக்கும் நாவற்குளம் பிரதான சாலை குண்டும் குழியுமான நிலையில் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு செல்ல தாமதமானதால் வழியிலேயே குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    இரு மாநில எல்லையை இணைக்கும் நாவற்குளம் பிரதான சாலை குண்டும் குழியுமான நிலையில் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுவை- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை யிலிருந்து பாட்டானூர்-நாவற்குளம் வழியாக புதுவைக்கு செல்லும் பழமை வாய்ந்த பிரதான சாலை உள்ளது.

    தமிழக புதுவை எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதியில் குடியி ருப்புகள் பெருகி மக்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

    இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், 2002-ம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கப்பட்டது.

    இந்த சாலை தற்போது மிகுந்த சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் வரை மிகவும் சிரமப்பட்டு சென்று வர வேண்டி உள்ளது.

    மழைக்காலங்களில் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு படுமோசமாக இருப்பதாகவும், அருகிலுள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு செல்ல தாமதமானதால் வழியிலேயே குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் சாலை சமீபத்தில் புனரமைக்கப்பட்டாலும் கொஞ்சம் நாட்களிலேயே சாலை சேதமடைந்தன. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் இங்கு வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்களை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் தமிழக அரசானது இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என நாவற் குளம் பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • முதலியார்பேட்டை, விவேகானந்தர் கோச்சிங் சென்டரில் எல்.டி.சி. யூ.டி.சி. தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.
    • மாணவர்களுக்கு தேர்வு குறித்து முக்கிய வினா-விடை தொகுப்பு மற்றும் மாதிரி தேர்வு நடத்தப்படும்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை, விவேகானந்தர் கோச்சிங் சென்டரில் எல்.டி.சி. யூ.டி.சி. தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.

    இந்த பயிற்சி வகுப்பு மொத்தம் 8 பிரிவுகளாக நடக்கிறது. தமிழ், ஆங்கிலம் மற்றும் ஆண், பெண் என தனித்தனி வகுப்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்த கோச்சிங் சென்டர் நிர்வாகி வி.சி.சி. நாகராஜன் கூறியதாவது:-

    இந்த சென்டரில் மாணவர்களுக்கு தேர்வு குறித்து முக்கிய வினா-விடை தொகுப்பு மற்றும் மாதிரி ேதர்வு நடத்தப்படும். தினமும் ேதர்வு நடக்கும்.

    பல பதிப்பகங்களில் இருந்து வெளியான முக்கிய போட்டி தேர்வு புத்தகங்களோடு கூடிய நூலக வசதியும் உள்ளது. இங்கு பயின்ற மாணவர்கள் தேர்வில் அதிகளவில் வென்று, அரசு துறை பணியில் சேர்வதோடு, பல இடங்களை பிடித்து சாதித்துள்ளனர். நீங்களும் அது போல் வளர வேண்டும்.

    இவ்வாறு வி.சி.சி. நாகராஜன் கூறினார்.

    மேலும், இங்கு சப்-இன்ஸ்பெக்டர், வி.ஏ.ஓ., துணை தாசில்தார் தேர்வுக்கும் பயிற்சி வழங்கப்பட குறிப்பிடதக்கது.

    • பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
    • பெண்குழந்தை–களுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கினார். விழாவில் புதுவை போலீஸ் ஐ.ஜி சந்திரன் கலந்துெகாண்டு அறக்கட்டளை சார்பில் சாரதி முதியோர் இல்ல நிறுவனர் கலைவாணி கணேசன, தன்னம்பிக்கைக் கலைக்குழு நிறுவனர் எலிசபெத் ராணி, ஆம்பூர் மாணவி அமிழ்தினி ஆகியோருக்கு விருது–களையும் பெண்குழந்தை–களுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.விழாவுக்கு கிருஷ்ண–குமார், ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். பாவலர் ராசலட்சுமி வாழ்த்துப்பா வாசித்தார்.

    பாவேந்தரின் கவிதை வரியான "எங்களுக்குக் காணிணும் சக்தியடா!" என்ற தலைப்பில் நடைபெற்றக் கவியரங்கத்தில் தமிழ்நாடு, புதுவையைச் சேர்ந்த 36 கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.

    முன்னதாக சரஸ்வதி வைத்தியநாதன் வரவேற்றார். முடிவில் பச்சையம்மா பாண்டியன் நன்றி கூறினார். செல்வதுரை நீஸ், படைப்பாளி பைரவி, செயலர் வள்ளி நாடக கலைஞர் மோகன் உள்ளிட்டோர் ஏற்பாடு–களைச் செய்திருந்தனர்.

    • யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால் புதுவை ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து சுமார் 98 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி புதுவை நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி புதிய கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் கருவூலத்தில் இருந்து திருவள்ளுவர் நகர் வழியாக செல்லும் புதுவை நகராட்சிக்கு சொந்தமான யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால், சோலை நகர் வடக்கு மீனவர் பகுதி சிங்காரவேலர்சிலை அருகில் இருந்து கடலை நோக்கி செல்லும் நகராட்சி யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால் புதுவை ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து சுமார் 98 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி புதுவை நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி புதிய கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மற்றும் உள்ளாட்சி துறை செயலர் வல்லவன் மற்றும் ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி திட்ட தலைமை செயல் அதிகாரி அருண், உள்ளாட்சி துறை இயக்குனர் ரவி தீப் சிங் சஹார் மற்றும் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனி ராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் நகராட்சி ஊழியர்களும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

    ×