என் மலர்
நீங்கள் தேடியது "Junior-Master Clerk"
- முதலியார்பேட்டை, விவேகானந்தர் கோச்சிங் சென்டரில் எல்.டி.சி. யூ.டி.சி. தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.
- மாணவர்களுக்கு தேர்வு குறித்து முக்கிய வினா-விடை தொகுப்பு மற்றும் மாதிரி தேர்வு நடத்தப்படும்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை, விவேகானந்தர் கோச்சிங் சென்டரில் எல்.டி.சி. யூ.டி.சி. தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.
இந்த பயிற்சி வகுப்பு மொத்தம் 8 பிரிவுகளாக நடக்கிறது. தமிழ், ஆங்கிலம் மற்றும் ஆண், பெண் என தனித்தனி வகுப்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்த கோச்சிங் சென்டர் நிர்வாகி வி.சி.சி. நாகராஜன் கூறியதாவது:-
இந்த சென்டரில் மாணவர்களுக்கு தேர்வு குறித்து முக்கிய வினா-விடை தொகுப்பு மற்றும் மாதிரி ேதர்வு நடத்தப்படும். தினமும் ேதர்வு நடக்கும்.
பல பதிப்பகங்களில் இருந்து வெளியான முக்கிய போட்டி தேர்வு புத்தகங்களோடு கூடிய நூலக வசதியும் உள்ளது. இங்கு பயின்ற மாணவர்கள் தேர்வில் அதிகளவில் வென்று, அரசு துறை பணியில் சேர்வதோடு, பல இடங்களை பிடித்து சாதித்துள்ளனர். நீங்களும் அது போல் வளர வேண்டும்.
இவ்வாறு வி.சி.சி. நாகராஜன் கூறினார்.
மேலும், இங்கு சப்-இன்ஸ்பெக்டர், வி.ஏ.ஓ., துணை தாசில்தார் தேர்வுக்கும் பயிற்சி வழங்கப்பட குறிப்பிடதக்கது.






