search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குண்டும் குழியுமான சாலை
    X

    நாவற்குளம் பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலை.

    குண்டும் குழியுமான சாலை

    • இரு மாநில எல்லையை இணைக்கும் நாவற்குளம் பிரதான சாலை குண்டும் குழியுமான நிலையில் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு செல்ல தாமதமானதால் வழியிலேயே குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    இரு மாநில எல்லையை இணைக்கும் நாவற்குளம் பிரதான சாலை குண்டும் குழியுமான நிலையில் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுவை- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை யிலிருந்து பாட்டானூர்-நாவற்குளம் வழியாக புதுவைக்கு செல்லும் பழமை வாய்ந்த பிரதான சாலை உள்ளது.

    தமிழக புதுவை எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதியில் குடியி ருப்புகள் பெருகி மக்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

    இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், 2002-ம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கப்பட்டது.

    இந்த சாலை தற்போது மிகுந்த சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் வரை மிகவும் சிரமப்பட்டு சென்று வர வேண்டி உள்ளது.

    மழைக்காலங்களில் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு படுமோசமாக இருப்பதாகவும், அருகிலுள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு செல்ல தாமதமானதால் வழியிலேயே குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் சாலை சமீபத்தில் புனரமைக்கப்பட்டாலும் கொஞ்சம் நாட்களிலேயே சாலை சேதமடைந்தன. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் இங்கு வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்களை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் தமிழக அரசானது இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என நாவற் குளம் பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×