என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து பராமரிக்கப்படாமல் நீண்ட காலமாக உள்ளது.
    • இதுபோன்ற அடிப்படை சாலை வசதிகள் செய்து தராமல் தினக்கூலி பிழைப்புக்காக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் அடாவடியாக ரூ.1000 வசூலிக்கப்படு கின்றது.மிகவும் கண்டி க்கத்தக்கது.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் வளவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை அரசு கொண்டு வந்துள்ள கட்டாய ஹெல்மெட் சட்டத்தை உடனடியாக திரும்ப் பெற வேண்டும். புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து பராமரிக்கப்படாமல் நீண்ட காலமாக உள்ளது.

    இதனால் அதிகளவில் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

    இதுபோன்ற அடிப்படை சாலை வசதிகள் செய்து தராமல் தினக்கூலி பிழைப்புக்காக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் அடாவடியாக ரூ.1000 வசூலிக்கப்படு கின்றது.மிகவும் கண்டி க்கத்தக்கது.

    புதுவை அரசு உடனடியாக ெஹல்மெட் தொடர்பான கட்டாய வசூல் வேட்டையை ரத்து செய்து புதுவை மக்களை காப்பாற்ற வேண்டும்.

    மத்திய அரசு வழிகாட்டுதல் இருந்தும் சீட்பெல்ட் அணியாத அமைச்சர்கள், எல்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத புதுவை அரசு அப்பாவி இரு சக்கர வாகன ஓட்டிகளை குறிவைப்பது, புதுவை அரசின் மின்துறை தனியார் மயமாக்கும் நடவடிக்கை–களுக்கு புதுவை அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதை திசை திருப்புவதற்காக இந்த ஹெல்மெட் கட்டாய அபராதம் கொண்டு வந்ததாக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

    புதுவை மாநில மக்கள் பேரியக்கம் இந்த கட்டாய 'ஹெல்மெட்' வசூல் வேட்டையை வன்மையாக கண்டிக்கின்றது. ேமலும் காலம் தாழ்த்தாமல் இந்த சட்டத்தை ரத்து செய்து வரும் பண்டிகை நாட்களில் புதுவை மக்களை நிம்மதியாக வாழ விட வேண்டும் என்றும் கவர்னர் மற்றும் முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • புதுவை சுற்றுலாத் துறை இணைந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல் மற்றும் ஈறு நல பராமரிப்பு வீடியோக்களை கியூ.ஆர்.கோடு மூலம் புதுவை கடற்கரையில் வெளியிட்டனர்.
    • இந்த கியூ. ஆர். கோடு கொண்ட பேனர்கள் புதுவை கடற்கரை, மணக்குள விநாயகர் கோவில் மற்றும் சுண்ணாம்பு ஆறு படகு குழாம் ஆகிய இயங்களில் நிறுவப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    பிள்ளையார் குப்பத்தில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி வளாகத்தில் இயங்கிவரும் இந்திரா காந்தி பல் மருத்துவக்கல்லூரி, புதுவை சுற்றுலாத் துறை இணைந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல் மற்றும் ஈறு நல பராமரிப்பு வீடியோக்களை கியூ.ஆர்.கோடு மூலம் புதுவை கடற்கரையில் வெளியிட்டனர்.

    இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், ஸ்ரீ பாலாஜி வித்யா பீத் பல்கலைக்கழக நிர்வாகி ஆஷா சுரேஷ்பாபு ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இந்த கியூ. ஆர். கோடு கொண்ட பேனர்கள் புதுவை கடற்கரை, மணக்குள விநாயகர் கோவில் மற்றும் சுண்ணாம்பு ஆறு படகு குழாம் ஆகிய இயங்களில் நிறுவப்பட்டுள்ளன.

    இவற்றை ஸ்கேன் செய்து பொதுமக்கள், பல் மற்றும் ஈறு நல பராமரிப்பு வீடியோக்களை கண்டு பயன்பெறலாம். இனி இந்திராகாந்தி பல் மருத்துவக்கல்லூரியில், ஈறுநோய் பிரிவிற்கு வரும் நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை மற்றும் பல் சுத்தம் செய்தல் மேற்கொள்ளப்படும் என தெரிவித்து உள்ளனர்.

    • கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரவுடிகள் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது.
    • புதுவை மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு லாட்ஜூகள், ஓட்டல்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    தமிழக போலீசார் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், தலைமறைவு ரவுடிகளை கைது செய்ய ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் மின்னல் ரவுடி வேட்டை என்ற திட்டத்தை செயல்படுத்தினர்.

    இதில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 95 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அச்சமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் அண்டை மாநிலங்களுக்கு தப்பி சென்று பதுங்கியுள்ளதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரவுடிகள் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து புதுவை மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு லாட்ஜூகள், ஓட்டல்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று இரவு 9 மணி முதல் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி, இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் சிறப்பு அதிரடி படை போலீசார் புதுவையில் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள லாட்ஜூகள் மற்றும் ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பதிவேட்டை பார்வையிட்டு யார்? யார்? தங்கியுள்ளனர் என்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் அங்குள்ள அறைகளுக்கு சென்று தங்கியிருந்தவர்களிடம் அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை சோதனை செய்தனர். இந்த சோதனையில் போது தமிழக ரவுடிகள் யாரும் சிக்கவில்லை.

    இதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா கூறும் போது, தமிழகத்தில் இருந்து தப்பிய குற்றவாளிகள் பட்டியலை அந்த மாநில போலீசார் எங்களுக்கு கொடுத்துள்ளனர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றார்.

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சின்ன மணிகூண்டு மார்க்கெட் மீன் வியாபாரிகள் புதுவை மாநில உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குறைகள் சம்பந்தமாக நேரில் வரக் கோரி அழைத்தனர்.
    • மின்துறை இளநிலை பொறியாளர் சுரேசை செல்போனில் அழைத்து மரங்களை உடனே அகற்றுங்கள் என கூறினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சின்ன மணிகூண்டு மார்க்கெட் மீன் வியாபாரிகள் புதுவை மாநில உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குறைகள் சம்பந்தமாக நேரில் வரக் கோரி அழைத்தனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எம்.எல்.ஏ. வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார், முதலில் மீன் மார்க்கெட் பாண்லே நிலையம் அருகில் வெட்டப்பட்ட மரங்கள் அப்புறப்படுத்தாமல் பல வாரங்களாக இருப்பதனை எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் தெரிவித்தனர். உடனே மின்துறை இளநிலை பொறியாளர் சுரேசை செல்போனில் அழைத்து மரங்களை உடனே அகற்றுங்கள் என கூறினார்.

    மேலும் மின்சார டிரான்ஸ்பார்மர் கண்ரோல் பொட்டியை சற்று தள்ளி வைக்கும்படியும் மின் மார்க்கெட் கூரைகளை சரிசெய்து தரைகளை ஒழுங்குப்படுத்தி கொடுக்கும்படியும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    அப்போது தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, காலப்பன் மற்றும் தி.மு.க. நிருவாகிகள் உடன் இருந்தனர்.

    • தமிழக அரசின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மருத்துவ ஆய்வறிக்கை மற்றும் கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக், கடலூர் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியின் தமிழினி சங்கம் இணைந்து “தமிழ் மருத்துவம் இனிய மருத்துவம்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
    • அக்குபஞ்சர்-ஆயுர்வேதிக் கிளினிக்கின் தலைமை மருத்துவருமான டாக்டர் உஷாரவி கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    தமிழக அரசின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மருத்துவ ஆய்வறிக்கை மற்றும் கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக், கடலூர் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியின் தமிழினி சங்கம் இணைந்து "தமிழ் மருத்துவம் இனிய மருத்துவம்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

    சகாயமேரி தலைமையில் சுசிலாதேவி முன்னிலையில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக தி சுசான்லி குழுமத்தின் சேர்மன் டாக்டர் ரவி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மருத்துவ ஆய்வறிக்கையின் பொறுப்பாளரும் தி சுசான்லி அக்குபஞ்சர்-ஆயுர்வேதிக் கிளினிக்கின் தலைமை மருத்துவருமான டாக்டர் உஷாரவி கலந்து கொண்டனர்.

    இயற்கை மருத்துவத்தின் அவசியத்தையும், அதனால் உடலுக்குக் கிடைக்கக் கூடிய பயன்களையும் எடுத்துரைத்ததுடன் மாணவிகளுக்கு அபாயக் கால முதலுதவிக்கான அக்குபிரஷர் புள்ளிகள் கற்றுக் கொடுத்தனர்.

    முன்னதாக சிவகாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் கே. அன்னப்பூரணி மற்றும் புனிதவதி பேசினர். முடிவில் பி.அன்னப்பூரணி நன்றி கூறினார்.

    • சேதராபட்டியில் உள்ள வெல்டிங் ராடு தயாரிக்கும் கம்பெனி தொடங்கும் பொழுது மெஷின் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.
    • தொடர்ந்து அந்த கம்பெனியில் பணியாற்றிய அவருக்கு அங்குள்ள எந்திரத்தில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் இவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    வில்லியனூரை அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (வயது 58). இவர் சேதராபட்டியில் உள்ள வெல்டிங் ராடு தயாரிக்கும் கம்பெனி தொடங்கும் பொழுது மெஷின் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.

    தொடர்ந்து அந்த கம்பெனியில் பணியாற்றிய அவருக்கு அங்குள்ள எந்திரத்தில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் இவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர் கடந்த ஆண்டு முதல் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவருக்கு உடல்நிலை சரியில்லாததை கருத்தில் கொண்டு அந்த தனியார் கம்பெனி நிர்வாகம் திடீரென அவரை வேலையில் இருந்து அனுப்பியது. 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கம்பெனியில் வேலை செய்து வந்த மண்ணாங்கட்டிக்கு, கம்பெனி நிர்வாகம் எந்த விதமான தொகை வழங்கவில்லை என தெரிகிறது.

    மண்ணாங்கட்டியின் மனைவி பிரேமாராணி கடந்த 6 மாதங்களாக கணவருக்கு கொடுக்க வேண்டிய தொகையை தரவேண்டியும், 20 ஆண்டு களாக அவர் கம்பெனியில் பணியாற்றியமைக்காகவும் மேலும் இ.எஸ்.ஐ மற்றும் பி.எப் தொகையினை பெற்று தர கூறியும் கம்பெனி நிர்வாகத்தை அணுகி உள்ளனர்.

    ஆனால் கம்பெனி நிர்வாகம் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலை யில் மண்ணாங்கட்டி, இவரது மனைவி பிரேமாராணி மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை சேதராப்பட்டியில் உள்ள கம்பெனிக்கு வந்தனர்.

    கம்பெனியின் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது மண்ணாங்கட்டி மனைவி பிரேமாராணி, இந்த கம்பெனிக்காக இரவும் பகலும் உழைத்த எனது கணவர் மண்ணாங்கட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வாங்க கூட பணம் இல்லாமல் நடுவீதிக்கு வந்துள்ளோம். என் கணவருக்கு சேர வேண்டிய பணத்தை நிர்வாகம் கொடுக்காவிட்டால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.

    தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு சேதராப்பட்டு போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினரையும் அவர்க ளது உறவினர்களையும் சமாதானப்படுத்தினர். இதற்கு முடிவு தெரியாமல் போக மாட்டோம் எனக் கூறி அங்கேயே உறவினர்கள் முற்றுகையிட்டு வருகின்ற னர். இந்த சம்பவத்தால் சேதராப்பட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வில்லியனூர் தொகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியது.
    • வடிகால் வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளச் செய்து வருகின்றார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியது.

    மேலும் சாலைகளும் சேதமானது. அதுபோல் இந்த ஆண்டு மழைக்காலத்தில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் சாலைப்பணிகள், குடிநீர் பராமரிப்பு, வடிகால் வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளச் செய்து வருகின்றார்.

    இந்த நிலையில் அப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில்நடை பெற்றது.கூட்டத்திற்குசிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர்கள் பாலசுப்ரமணியன் (தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு), சுந்தர்ராஜன் (பொது சுகாதாரக் கோட்டம்), ராதாகிருஷ்ணன் (நீர்பாசனக் கோட்டம்), உதவிப் பொறியாளர்கள் மீனாராணி, வாசு, சீனுவாசன், கோபி, மதி, சேகர், இளநிலைப் பொறியாளர்கள் திருவேங்கடம், சித்தார்த்தன், நடராஜன், சங்கர் மற்றும் வில்லியனூர் தொகுதி தி.மு.க. செயலாளர் ராமசாமி, விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் கதிரவன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, முத்து, அருள், வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா வில்லியனூர் தொகுதி வழியாக செல்லும் கருப்பட்டி வாய்க்கால், ஆத்து வாய்க்கால், ஒதியம்பட்டு வாய்க்கால், மேட்டு வாய்க்கால், சன்னதி வாய்க்கால் உள்ளிட்ட நீர்பாசன வடிக்கால் வாய்க்கால்கள் மழைக்கு முன் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

    அரும்பார்த்தபுரம் முதல் முத்துப்பிள்ளை ப்பாளையம் வரை செல்லும் சாலையை செப்பனிடுதல், ஜி.என். பாளையம், மணவெளி, ஒதியம்பட்டு ஆகிய கிராமங்களில் புதிய போர்வெல் அமைக்க வேண்டும். வில்லியனூர், சுல்தான்பேட், கொம்பாக்கம்பேட், ஒட்டாம்பாளையம் ஆகிய இடங்களில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். வில்லியனூர் பிருந்தாவனம் நகர் விரிவாக்கம், எஸ்.எம்.வி.புரம், கொம்பாக்கம் பிரியதர்ஷினி நகர், சிவசக்தி நகர், மணக்குள விநாயகர் நகர் பகுதிகளில் புதிய குடிநீர் பைப்–லைன் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

    • பாண்லே பால் விற்பனை தொழிலாளர்களுக்கு எவ்வித காரணம் இன்றி விற்பனைக்கான பாலின் அளவை கடந்த ஒரு வார காலமாக குறைத்து வழங்கப்பட்டு வருகிறது.
    • வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்தில் பால் பாக்கெட்களை வாங்கக்கூடிய நிலையை பாண்லே நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    பாண்லே பால் விற்பனை தொழிலாளர்களுக்கு எவ்வித காரணம் இன்றி விற்பனைக்கான பாலின் அளவை கடந்த ஒரு வார காலமாக குறைத்து வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பால் பாக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்தில் பால் பாக்கெட்களை வாங்கக்கூடிய நிலையை பாண்லே நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.

    இதனை கண்டித்தும் தட்டுப்பாடு இல்லாமல் பால் விற்பனையாளர்களுக்கு பால் பாக்கெட் வழங்க வலியுறுத்தி ஏ .ஐ. டி .யு .சி. பாண்லே முகவர்கள் காலி பால் டப்பாக்களுடன் இன்று காலை மிஷின் வீதி மாதா கோவில் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏ. ஐ.டி. யு. சி. பாண்லே பால் விற்பனை தொழிலாளர் சங்க தலைவர் கலைமணி, செயலாளர் முருகன், பொருளாளர் கதிரேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ. ஐ. டி. யு. சி. பொதுச் செயலாளர் சேது செல்வம், செயல் தலைவர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாண்லே பால் விற்பனை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பாலாஜி, ஆறுமுகம், பாலச்சந்தர், விஜய், முத்து, முருகேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • தமிழக ரவுடிகள் புதுவையில் தஞ்சமடைந்து ள்ளதாக வந்த தகவலை அடுத்து லாட்ஜூகளில் விடிய விடிய போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • தமிழகம் முழுவதும் மின்னல் ரவுடி வேட்டை ஆபரேசன் நடத்தப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    தமிழக ரவுடிகள் புதுவையில் தஞ்சமடைந்து ள்ளதாக வந்த தகவலை அடுத்து லாட்ஜூகளில் விடிய விடிய போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் மின்னல் ரவுடி வேட்டை ஆபரேசன் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் பல ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த ரவுடிகள் சிக்கி வருகிறார்கள்.

    இதற்கிடையே தமிழக போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தமிழக ரவுடிகள் புதுவையில் தஞ்சம் புகுந்துள்ளதாக புதுவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் புதுவை நகர பகுதியில் உள்ள லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    மேலும் புதுவை-தமிழக எல்லை பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. நள்ளிரவு 11 மணி முதல் விடிய விடிய இந்த சோதனை நீடித்தது. ஆனால் இந்த சோதனையில் தமிழக ரவுடிகள் யாரும் சிக்கவில்லை. எனினும் இந்த சோதனை நீடிக்கும் என்று புதுவை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • மக்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • சுமார் 70 ஆண்டுகளாக பட்டா இன்றி 4 தலைமுறையாக வசித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை பாரதிமில் திட்டு வண்ணார வீதி மக்கள் நலச்சங்கம் சார்பில் சங்க தலைவர் கண்ணன் செயலாளர் ராஜேஸ்வரி, பொருளாளர் பால குரு இணைச்செயலாளர் வெண்ணிலா பிரேமா ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    முதலியார் பேட்டை பாரதி மில் திட்டு வண்ணார வீதியில் வசிக்கும் மக்கள் சுமார் 70 ஆண்டுகளாக பட்டா இன்றி 4 தலைமுறையாக வசித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • கடற்கரை சாலையில் வியாபார போட்டியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • புதுவை கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் மற்றும் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கடற்கரை சாலையில் வியாபார போட்டியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

    புதுவை கருவடிக்குப்பம் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் ரேகா. நரிகுறவர் சமூகத்தை சேர்ந்த இவர் தனது மகள்கள் ஜோதிகா, தீபிகா, சுஜி ஆகியோருடன் புதுவை கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் மற்றும் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    அதே பகுதியில் மணி மற்றும் தர்மா ஆகியோரும் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ரேகாவுக்கும், தர்மா மற்றும் மணி ஆகியோருக்கிடையே வியாபார போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தர்மா மற்றும் மணி ஆகியோரின் குழந்தைகள் ரேகாவின் மகள்கள் மீது கல் வீசி எறிந்ததாக தெரிகிறது. இதுபற்றி தர்மா மற்றும் மணியிடம் ரேகா முறையிட்ட போது அவர்கள் ரேகாவை தகாத வார்த்தைகளால் திட்டி சமூகத்தை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

    மேலும் ரேகாவையும், அவரது மகள்களையும் மணி, தர்மா, மணியின் மனைவி சந்தியா, தர்மாவின் மனைவி செல்வி மற்றும் மணியின் மாமியார் வேளாங்கன்னி ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேகா தனது மகள்களுடன் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று பின்னர் இதுகுறித்து பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் மீது சமரசம் செய்யும் வழக்குகளில் குறை தீர்ப்பு முகாம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் நடைபெற்றது.
    • போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு மக்கள் புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில், கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு மித்ரன் தலைமையில் ஆரோவில், வானூர், கிளியனூர், கோட்டகுப்பம், மரக்காணம் ஆகிய 5 போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் மீது சமரசம் செய்யும் வழக்குகளில் குறை தீர்ப்பு முகாம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் நடைபெற்றது.

    இன்ஸ்பெக்டர்கள் அன்பரசு, பாலமுரளி, ராபின்சன் மற்றும் அனைத்து போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு மக்கள் புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த குறை தீர்ப்பு முகாமில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் 50 க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது புகார் தாரர்கள், எதிர் மனுதாரர்கள் ஆஜராகி வழக்குகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து வாதிட்டனர். போலீஸ்துறை அதிகாரிகள் சமரசம் செய்யக்கூடிய புகார் மனுக்களில் சமரசம் செய்து வைத்தனர்.

    ×