என் மலர்
புதுச்சேரி
- புதுவையில் அரசு மற்றும் நகராட்சி அளித்த உரிமங்களுடன் சாலையோர வியாபாரிகள் சாலையோரங்களில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
- இதற்கு நடைபாதை வியாபாரிகள் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் அரசு மற்றும் நகராட்சி அளித்த உரிமங்களுடன் சாலையோர வியாபாரிகள் சாலையோரங்களில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, கலெக்டர் உத்தரவின் பேரில் அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக புதுவை நகரப்பகுதிகளில் உள்ள சாலையோர, நடைபாதை வியாபாரிகளின் கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகிறது.
இதற்கு நடைபாதை வியாபாரிகள் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக சி.ஐ.டி.யூ. புதுவை பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் அரசு மற்றும் நகராட்சி வழங்கிய வியாபார உரிமங்களின் நகல் எரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சாலையோர வியாபாரிகள் ராஜா திரையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்ட–த்திற்கு சங்கத்தின் சிறப்பு தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். பிரதேச தலைவர் அழகர்ராஜ், பொதுசெயலாளர் வடிவேல், பொருளாளர் வீரமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யூ. பிரதேச செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ரவிச்சந்திரன், துணை தலைவர் மதிவாணன் நிர்வாகிகள் ஜீவானந்தம், தினேஷ்குமார், சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சேவியர், சூரியன், அய்யனார், ரவி, அன்பழகன், பூரணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகராட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் நகராட்சி வழங்கிய வியாபார உரிமங்களின் நகல்களை எரித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடு–பட்டவர்கள் கூறியதாவது:-
பண்டிகை நாளில் எங்களது கடைகளை அதிகாரிகள் அகற்றியது தவறானது. எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். எங்களது வாழ்வாதாரத்திற்கு பதில் கூற வேண்டும்.
சாலையோர வியாபா–ரிகளை ஒழுங்குபடுத்துதல மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை பொதுப்பணித்துறை, நகராட்சி, காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் அவ–மதித்துள்ளனர், சட்டத்தின் அடிப்படையில் எங்களுக்கு புதுவை அரசு வழங்கிய உரிமம் செல்லாது என மாவட்ட கலெக்டர் கூறுவதை நாங்கள் கண்டித்து போராட்டத்தை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- குடிநீர் வரிக்கான ரசீது கிடைக்க பெற்ற உடன் ரசீதில் குறிப்பிட்டுள்ள வரி செலுத்த வேண்டிய காலத்திற்கு பிறகு வரிப்பணம் செலுத்தினால் முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
- அதற்குண்டான அரசானை வெளியிடப்பட்டு 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து வரி அமலுக்கு வந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறையின் பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடிநீர் வரிக்குண்டான கட்டணத்தைச் செலுத்தும் படி பொது சுகாதாரக்கோட்டம், பொதுப்பணித்துறை சார்பில் குடிநீர் அளவு கணக்கீட்டாளர் கணக்கெடுத்து, அதற்குண்டான கேட்பு வீட்டிற்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வரிக்கான ரசீது கிடைக்க பெற்ற உடன் ரசீதில் குறிப்பிட்டுள்ள வரி செலுத்த வேண்டிய காலத்திற்கு பிறகு வரிப்பணம் செலுத்தினால் முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் இணைப்பு கோரும் போது துண்டிப்பு மற்றும் மறு இணைப்புக்கான கட்டணமாக ரூ.5 ஆயிரம் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படும்.
அதுபோல் புதுவை நகரப்பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு உள்ள அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் வரி, பயன்பாட்டு வரியாக வசூலிக்க கடந்த 13.2.2017 அதற்குண்டான அரசானை வெளியிடப்பட்டு 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து வரி அமலுக்கு வந்துள்ளது. அதற்குரிய கட்டணத்தை செலுத்தும்படி பொது சுகாதார கோட்டம், பொதுப்பணித்துறை சார்ந்த ஊழியர்கள், தபால் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் வரி கேட்பு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. ரசீதுகிடைக்க பெற்ற 30 நாட்களுக்குள் குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரிகளுக்கு ண்டான கட்டணங்களை செலுத்துமாறு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரிகளை முறையாக செலுத்தி ஒத்து ழைப்பு கொடுக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திருக்கனூர் அருகே டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
- வேலைக்கு செல்வதற்காக ராஜா குளித்து விட்டு உடை மாற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி சாய்ந்தார்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
திருக்கனூர் அருகே தேத்தாம்பாக்கம் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் தீப்பாஞ்சான். இவரது மகன் ராஜா (வயது34). டிரைவர் வேலை செய்து வந்தார். வசந்தமுல்லை என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். வேலைக்கு செல்வதற்காக ராஜா குளித்து விட்டு உடை மாற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி சாய்ந்தார்.
உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு ஊசுடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். திடீர் மாரடைப்பால் ராஜா இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜாவின் தந்தை தீப்பாஞ்சான் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை மூலக்குளம் அருகே முத்து பிள்ளை பாளையம் ராதாநகரை சேர்ந்தவர் லீலா வினோத். இவரது மனைவி கோமதி. இவரை பார்க்க வேலூர் குடியாத்தத்தை சேர்ந்த இவரது தந்தை மோகன்(வயது62) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வந்திருந்தார்.
இந்த நிலையில் ஊருக்கு பஸ்சில் செல்ல மோகன் புதிய பஸ் நிலையத்துக்கு அப்போது பஸ்சுக்காக அங்குள்ள இருக்கையில் அமர்ந்து காத்திருந்த போது திடீரென மோகன் மயங்கி சாய்ந்தார். சிறிது நேரத்தில் அவர் இறந்து போனார். நெஞ்சுவலி காரணமாக மோகன் இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மகள் கோமதி கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை கவர்னரின் சமீபகால செயல்பாடுகள், மாநில அரசின் நடவடி க்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக உள்ளது.
- முதல்வரும், அமைச்சர்க ளும் மத்திய அரசிடம் கேட்ட தொகையான ரூ.3710 கோடியில், சிறிய தொகை யினை கூட மத்திய அரசினை வற்புறுத்தி கவர்னர் பெறவில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை கவர்னரின் சமீபகால செயல்பாடுகள், மாநில அரசின் நடவடி க்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக உள்ளது. மக்களை சந்தித்து குறைதீர் கூட்டம் நடத்துவது, மத்திய அரசின் நேரடி ஆட்சியினை கொண்டு வருவதற்கான முயற்சியாக தெரிகிறது.
முதல்வரும், அமைச்சர்க ளும் மத்திய அரசிடம் கேட்ட தொகையான ரூ.3710 கோடியில், சிறிய தொகை யினை கூட மத்திய அரசினை வற்புறுத்தி கவர்னர் பெறவில்லை.
மாநிலத்தின் மொத்த கடன் ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டும் சூழ்நிலையில், அதில், 50 சதவீதத்தைக்கூட தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவில்லை.
தமிழகத்தைப் போல அரசு பள்ளி மாணவர்க ளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த கோப்பு மத்திய அரசிடம் எந்த நிலையில் உள்ளது. என்பதைக் கூட கவர்னர் அறிய முற்படுவதில்லை.
இது போன்று, மாநில முன்னேற்றப் பணிகள் பல இருந்தும், அவற்றை செயல்படுத்த முயற்சிக்காமல், மின் துறை உள்ளிட்ட அரசின் சொத்துக்களை தனியாரிடம் தாரை வார்க்கும் பணியை மட்டும் செய்ய முற்படுவது கண்டனத்திற்குரியது.
மாநில, மத்திய அரசுகளுக்கு இணைப்பு பாலமாக இருக்க வேண்டிய கவர்னர், பா.ஜனதாவின் கொள்கை விளக்க முகவராக செயல்படுவது வேதனை அளிக்கிறாது.
இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.
- புதுவை மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மனநலத் துறையும் செவிலியர் கல்லூரியின் மனநல செவிலியர் துறையும் இணைந்து உலக மனநல தினம் கொண்டாடியது.
- இவ்விழாவின் ஒரு பகுதியாக மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி:
உலக மனநல வார விழாவை முன்னிட்டு புதுவை மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மனநலத் துறையும் செவிலியர் கல்லூரியின் மனநல செவிலியர் துறையும் இணைந்து உலக மனநல தினம் கொண்டாடியது.
தொடக்க விழாவை மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் துணைத் தலைவர் சுகுமாறன் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மருத்துவ கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன் துணை இயக்குனர் காக்னே, டீன் (அகடாமிக்) கார்த்திகேயன், டீன் (ஆராய்ச்சி) கலைசெல்வன் மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் மனநல துறை தலைவர் அருண் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்கள்.
இவ்விழாவின் ஒரு பகுதியாக மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. டாக்டர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் மனநலத்தின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பி மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
- புதுச்சேரியில் நேற்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
- பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நேற்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதேபோல அங்கு புதிதாக 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
- புதுவையில் மின்துறையை தனியார்மயமாக்க அரசு டெண்டர் வெளியிட்டது.
- இதையடுத்து முதல் -அமைச்சர் ரங்கசாமி கடந்த 2-ந் தேதி மின்துறை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுச்சேரி:
புதுவையில் மின்துறையை தனியார்மயமாக்க அரசு டெண்டர் வெளியிட்டது. இதையடுத்து மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கினர். இதனால் கடும் மின்தடை ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். மாநிலமெங்கும் மறியல், போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து முதல் -அமைச்சர் ரங்கசாமி கடந்த 2-ந் தேதி மின்துறை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தப் போராட்டத்தை தீபாவளி வரை மின் ஊழியர்கள் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் மின்துறை தனியார்மயமாக்கல் தொடர்பாக ஊழியர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக தங்கள் பணிபாதுகாப்பு தொடர்பாக அச்சம் தெரிவித்தனர்.
அதனால் தனியார்மயமாக்கல் கட்டமைப்புக்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட ஆலோசனை அதிகாரியிடம் நேரடியாக விளக்கம் கேட்க புதுவை அரசு திட்டமிட்டது. இக்கட்டமைப்பு குழு அதிகாரிகள் புதுவை வந்துள்ளனர். 2 நாள் புதுவையில் முகாமிடும் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலர் ராஜீவ்வர்மா மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினர்.
அதையடுத்து ராஜ்நிவாஸில் கவர்னர் தமிழிசை தலைமையில் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, தலைமைச்செயலர் ராஜீவ் வர்மா, மின்துறை செயலர் அருண், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, மின்துறை செயற்பொறியாளர்கள் ராஜேஷ் சன்யால், ஸ்ரீதரன், சண்முகம், தனியார்ம யமாக்கலுக்கான பரிவர்த்தனை அதிகாரிகள் பங்கேற்றனர்.
- கிருமாம்பாக்கம் - பிள்ளையார்குப்பம் சாலை சுமார் 16 மீட்டர் அகலம் உடையது.
- இந்த ஆக்கிரமிப்பு அகற்றினால் மட்டுமே அங்கிருக்கும் மழைநீரை வெளியேற்ற முடியும்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் - பிள்ளையார்குப்பம் சாலை சுமார் 16 மீட்டர் அகலம் உடையது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலையின் இரு பக்கமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பும், கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் சாலையில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
மேலும் இளங்கோ நகர், கிருமாம்பாக்கம், மந்தவெளி பகுதியில் மழை நீர் வடிகால் வசதி இல்லாமலும் இருந்துவந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றினால் மட்டுமே அங்கிருக்கும் மழைநீரை வெளியேற்ற முடியும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வெளியேற முடியாமல் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக கொடுத்த புகாரின் பேரில் பொதுப்பணித்துறையினர், சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அதிரடியாக அப்புறப்படுத்தினர். இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவிப் பொறியாளர் கோதண்டம், இளநிலை பொறியாளர்கள் பாஸ்கரன், சரவணன் ஆகியோர் ஈடுபட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், நந்தகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பலரது வீட்டின் சுவர்கள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பாக இருந்தது. அதையும் மீறி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
- புதுவை அரசு சார்பில் மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
- வ.சுப்பையா- சரஸ்வதி சுப்பையா நினைவு சமூக விஞ்ஞான ஆய்வு மைய நூலகத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, நெல்லித்தோப்பு சந்திப்பில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு சார்பில் அமைச்சர் லட்சுமிநாராயணன், சுப்பையா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாராகலைநாதன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரதேச செயலாளர் ராஜாங்கம், பெருமாள், சி.ஐ.டி.யூ. சேதுசெல்வம், கலைஇலக்கிய பெருமன்றம் துரைசெல்வம் எல்லை சிவக்குமார், உள்பட பலர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வெள்ளாழ வீதியில் உள்ள வ.சுப்பையா- சரஸ்வதி சுப்பையா நினைவு சமூக விஞ்ஞான ஆய்வு மைய நூலகத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலைபண்பாட்டுத்துறை இயக்குநர் கந்தன் என்ற சிவராசன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
- புதுவை தவளக்குப்பம் பூரணாங்குப்பம் மெயின் ரோடு குளக்கரை பகுதியை சேர்ந்தவர் தரணிசிங்கு.
- அதிவேகமாக ஏறி இறங்கிய போது எதிர்பாராத விதமாக கல்யாணி தவறி கீழே விழுந்தார்.
புதுச்சேரி:
வேக தடையில் ஏறி இறங்கிய போது மினி வேனில் இருந்து தவறி விழுந்த பெண் காய்கறி வியாபாரி பலியானார்.
புதுவை தவளக்குப்பம் பூரணாங்குப்பம் மெயின் ரோடு குளக்கரை பகுதியை சேர்ந்தவர் தரணிசிங்கு. இவரது மனைவி கல்யாணி (வயது65). இவர் தவளக்குப்பத்தில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். இவர் மினிவேனில் புதுவை உழவர் சந்தைக்கு சென்று மொத்தமாக காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம்.
அதுபோல் கல்யாணி காய்கறி வாங்க உழவர் சந்தைக்கு மினிவேனில் வந்தார். புதுவை-கடலூர் சாலையில் கோர்ட்டு வளாகம் எதிரே உள்ள வேகதடையில் மினிவேன் அதிவேகமாக ஏறி இறங்கிய போது எதிர்பாராத விதமாக கல்யாணி தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கல்யாணியை மினிவேன் டிரைவர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கல்யாணி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பின் காரணமாக கடலோர சாலைகள், மின் கம்பங்கள், குடிநீர் குழாய்கள் பெருமளவு சேதம் ஏற்பட்டு அங்கு இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
- அரிப்பை கட்டுப்படுத்த கடற்கரை பகுதியில் ராட்சத கற்களை கொட்டி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பின் காரணமாக கடலோர சாலைகள், மின் கம்பங்கள், குடிநீர் குழாய்கள் பெருமளவு சேதம் ஏற்பட்டு அங்கு இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி கிராம பஞ்சாயத்தார் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.விடம் முறை–யிட்டனர். இதனையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. மத்திய மந்திரி, கவர்னர், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரை தொடர்ந்து ஒரு வருட காலமாக நேரில் சந்தித்து நிலையை எடுத்துக் கூறி தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் பிள்ளைச்சாவாடி மற்றும் காலாப்பட்டு தொகுதி மீனவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கடல் அரிப்பை கட்டுப்படுத்த கடற்கரை பகுதியில் ராட்சத கற்களை கொட்டி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான பணியை அமைச்சர் லட்சுமி நாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பிள்ளைச்சாவடி மற்றும் காலாப்பட்டு தொகுதி மீனவ கிராமங்களை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
- நெட்டப்பாக்கத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
- அப்போது ஒருவர் செல்போனில் லாட்டரி முடிவுகளை வாடிக்கை யாளர்களுக்கு தெரிவித்து கொண்டி ருந்ததை போலீசார் கண்டனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம்-கரியமாணிக்கம் சந்திப்பில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக நெட்டப்பாக்கம் போலீ சாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது ஒருவர் செல்போனில் லாட்டரி முடிவுகளை வாடிக்கை யாளர்களுக்கு தெரிவித்து கொண்டி ருந்ததை போலீசார் கண்டனர். உடனே அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தமிழக பகுதியான பாக்கம் வெள்ளாழங்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்த இளங்கோ (48) என்பதும், இவர் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுக்களை ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இளங்கோவனை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.3 ஆயிரத்து 300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






