search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Copy burning"

    • புதுவையில் அரசு மற்றும் நகராட்சி அளித்த உரிமங்களுடன் சாலையோர வியாபாரிகள் சாலையோரங்களில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • இதற்கு நடைபாதை வியாபாரிகள் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு மற்றும் நகராட்சி அளித்த உரிமங்களுடன் சாலையோர வியாபாரிகள் சாலையோரங்களில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இதனிடையே, கலெக்டர் உத்தரவின் பேரில் அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக புதுவை நகரப்பகுதிகளில் உள்ள சாலையோர, நடைபாதை வியாபாரிகளின் கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகிறது.

    இதற்கு நடைபாதை வியாபாரிகள் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக சி.ஐ.டி.யூ. புதுவை பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் அரசு மற்றும் நகராட்சி வழங்கிய வியாபார உரிமங்களின் நகல் எரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி சாலையோர வியாபாரிகள் ராஜா திரையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்ட–த்திற்கு சங்கத்தின் சிறப்பு தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். பிரதேச தலைவர் அழகர்ராஜ், பொதுசெயலாளர் வடிவேல், பொருளாளர் வீரமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சி.ஐ.டி.யூ. பிரதேச செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ரவிச்சந்திரன், துணை தலைவர் மதிவாணன் நிர்வாகிகள் ஜீவானந்தம், தினேஷ்குமார், சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சேவியர், சூரியன், அய்யனார், ரவி, அன்பழகன், பூரணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகராட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் நகராட்சி வழங்கிய வியாபார உரிமங்களின் நகல்களை எரித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடு–பட்டவர்கள் கூறியதாவது:-

    பண்டிகை நாளில் எங்களது கடைகளை அதிகாரிகள் அகற்றியது தவறானது. எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். எங்களது வாழ்வாதாரத்திற்கு பதில் கூற வேண்டும்.

    சாலையோர வியாபா–ரிகளை ஒழுங்குபடுத்துதல மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை பொதுப்பணித்துறை, நகராட்சி, காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் அவ–மதித்துள்ளனர், சட்டத்தின் அடிப்படையில் எங்களுக்கு புதுவை அரசு வழங்கிய உரிமம் செல்லாது என மாவட்ட கலெக்டர் கூறுவதை நாங்கள் கண்டித்து போராட்டத்தை நடத்துகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×