search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை தி.மு.க. இரட்டை வேடம் -  ஓம்.சக்திசேகர் கண்டனம்
    X

    கோப்பு படம்

    புதுவை தி.மு.க. இரட்டை வேடம் - ஓம்.சக்திசேகர் கண்டனம்

    • புதுவைக்கு வருகை புரிந்த மத்திய கல்வி மந்திரி புதுவையில் பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது போல இந்த விவகாரத்திலும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செய்லாளர் (ஒ.பி.எஸ். பிரிவு) ஒம்.சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவைக்கு வருகை புரிந்த மத்திய கல்வி மந்திரி புதுவையில் பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.இதனை புரிந்து கொள்ளாத புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எப்போது எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது போல இந்த விவகாரத்திலும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

    முதலில் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் தமிழகத்தில் தி.மு.க.ஆட்சியில் புதிய கல்விக் கொள்கையில் நிலைபாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒருபோதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு இப்போது புதிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்கள் இருந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று பாலுக்கும் காவல் பூனைக்கும் காவல் என்று இரட்டை நிலையை பின்பற்றுகிறது.

    ஆனால் அ.தி.மு.க. எப்போதும் புதிய கல்வி கொள்கையில் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை மாநில தி.மு.க. அமைப்பாளர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த கொள்கையால் வட மாநிலத்தவர் புதுவையை ஆக்கிரமிக்கும் சூழல் நிலவும் என்று கூறியுள்ளார்.

    புதுவை மாநிலத்தில் வட மாநிலத்தவரை உள்ளே அனுமதிக்க முழுமுதல் காரணமாக இருந்தது இவரது ஆதரவில் அமைந்த கடந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசுதான். மேல்நிலைப் பள்ளிகளில் முதல்வர் பதவி உள்ளிட்ட குரூப் பி பணியிடங்களில் 20 சதவீதம் வடநாட்டவருக்கு வழங்கலாம் என்ற அனுமதி வழங்கியது தி.மு.க. ஆதரவு பெற்ற கடந்த காங்கிரஸ் அரசாங்கம் தான்.

    இவை அனைத்தையும் மறந்து விட்டு தனக்கு வசதியாக எப்போதும் போல பொய் மூட்டைகளை அறிக்கையாக தி.மு.க. மாநில அமைப்பாளர் வெளியிட்டுள்ளார். எனவே இது போன்ற செயல்களை நிறுத்தி மக்கள் பணியில் ஈடுபட புதுவை எதிர்கட்சி தலைவரை புதுவை அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு ஒம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×