என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆரோவில் அருகே அடுத்தடுத்து 3 கார் விபத்து
    X

    லாரி மோதியதில் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் கார்.

    ஆரோவில் அருகே அடுத்தடுத்து 3 கார் விபத்து

    • ஆரோவில் அருகே அடுத்தடுத்த நடந்த 3 கார் விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் மீது மோதியதில் கார் 10 அடி பள்ளத்தில் உருண்டு ஓடியது.

    புதுச்சேரி:

    ஆரோவில் அருகே அடுத்தடுத்த நடந்த 3 கார் விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். புதுவை லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் போஸ்கோ.(வயது 60). இவர் தனது உறவினர்களை காரில் ஏற்றிக்கொண்டு திண்டிவனம் ெரயில் நிலையத்திற்கு சென்றார். அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ெரயிலில் ஏற்றிவிட்டு புதுவை திரும்பி கொண்டு இருந்தார். ஆரோவில் அருகே புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை ராவுத்தான்குப்பம் அருகே சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார்.

    அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் மீது மோதியதில் கார் 10 அடி பள்ளத்தில் உருண்டு ஓடியது. அதிர்ச்சி அடைந்த போஸ்கோ செய்வதறியாது திகைத்து நின்றார். இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவம் அறிந்து வந்த ஆரோவில் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை ஓரம் நின்றிருந்த கார் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு வருகின்றனர். இந்த விபத்தில் போஸ்கோ அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினார்.

    நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 2 பெண்கள் திருப்பதியில் இருந்து புதுவை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஒட்டி வந்தார். அதிகாலை பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த கார் முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    கார் லாரியின் மீது மோதிய வேகத்தில் கார் பைபாஸ் சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர், அதில் பயணம் செய்த 2 பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்த 3 பேரையும் ஆரோவில் போலீசார் மற்றும் டோல்கேட் ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இரும்பை ரோடு சந்திப்பில் பட்டாணூரை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன் ஆட்டு இறைச்சி வாங்கிக்கொண்டு ேமாட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது புதுவையில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

    இதில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது. மணிகண்டனின் இடது காலில் காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆரோவில் அருகே புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து நடந்த 2 கார் விபத்து, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பைக் மீது கார் மோதிய விபத்து குறித்து ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×