என் மலர்
புதுச்சேரி
- முத்தியால்பேட்டையில் மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் பூக்கடை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த நிலையில் கண்ணன் வீட்டிலேயே மது வாங்கி வந்து குடித்தார்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டையில் மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் பூக்கடை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை முத்தி யால்பேட்டை வசந்தம் நகர் நிலா தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கண்ணன். இவர் புதுவை பெரியமார்கெட்டில் ஒரு பூக்கடையில் தொழிலா ளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். 2 மகன்கள் உள்ள நிலையில் இப்படி குடித்து செலவு செய்தால் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்று ஜெயந்தி கணவரை திட்டினார்.
இந்த நிலையில் கண்ணன் வீட்டிலேயே மது வாங்கி வந்து குடித்தார். இதனை அவரது மனைவி ஜெயந்தி கண்டித்து விட்டு தனது இளையமகன் படித்த பள்ளிக்கு அழைத்து சென்றார். பின்னர் ஜெயந்தி வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஜெயந்தி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது சமையல் அறையில் உள்ள ஜன்னலில் கணவர் கண்ணன் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வீரவள்ளி, பெரியபள்ளி ஆகிய இடங்களில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கொட்டும் மழையிலும் ஆய்வு மேற்கொண்டார்.
- மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி அனைத்து வாய்க்கால்களையும் சீர் செய்து தண்ணீர் தேங்காமல் இருக்கும்படி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.அறிவுறுத்தினார்.
புதுச்சேரி
புதுவையில் கனமழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் நீர் தேங்கியது.
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வீரவள்ளி, பெரியபள்ளி ஆகிய இடங்களில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கொட்டும் மழையிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அடைக்கப்பட்டு இருந்த வாய்க்கால்களை தி.மு.க.வினரின் உதவியுடன் சுத்தம் செய்தார்.
அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் உடனிருந்தனர்.
அதேபோல், குபேர் மன்றம் எதிரேவுள்ள வய்க்கால் குப்பைகளால் அடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், இதனை சரிசெய்து கொடுக்கும்படி, சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் கென்னடி எம்.எல்.ஏ. முறையிட்டார்.
மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி அனைத்து வாய்க்கால்களையும் சீர் செய்து தண்ணீர் தேங்காமல் இருக்கும்படி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.அறிவுறுத்தினார்.
3நாட்களுக்குள் அனைத்தையும் சரி செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அப்போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, தொழில்நுட்ப அணி சுகுமார், கிளை செயலாளர் அசோக், ரகுமான், பாரதி வீதி ராஜா சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- புதுவை யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் தொகையில் 16 விழுக்காடாக இருக்கின்றனர். புதுவையின் 2-வது மிகப் பெரிய சமுதாயமாக இவர்கள் இருக்கிறார்கள்.
- அதற்காக நியமிக்க ப்பட்டுள்ள அமைச்சர், போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்று தான் அழைக்கப்படுகிறார்.
புதுச்சேரி:
முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் தொகையில் 16 விழுக்காடாக இருக்கின்றனர். புதுவையின் 2-வது மிகப் பெரிய சமுதாயமாக இவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சமுதாயத்திற்கென்று இன்று புதுவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற பெயரில் ஒரு தனி அமைச்சர் இல்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.
அதற்காக நியமிக்க ப்பட்டுள்ள அமைச்சர், போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்று தான் அழைக்கப்படுகிறார். அவருக்கு போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலத்துறை, வீட்டு வசதித் துறை, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, கலை கலாச்சாரத்துறை புள்ளியல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இத்துறைகளில் மிக முக்கிய துறையும், 16 சதவீதம் உள்ள மக்களை காப்பாற்றும் பொறுப்புடைய துறையும் ஆதிதிராவிடர் நலத்துறை தான்.
எனவே இவரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்று மட்டுமே அழைக்க வேண்டும்.அம்பேத்கரின் இட ஒதுக்கீடு முறை மூலம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ள பெண்மணி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற பெயரை ஏன் கேட்டு வாங்கவில்லை?
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவதில் அவருக்கு ஏதேனும் தயக்கம் உள்ளதா?தமிழகத்தில் மற்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்தாலும் அங்கு கயல்விழி செல்வராசு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுகிறார். இது ஏன் புதுவையில் நிகழவில்லை?ஆதிதிராவிட மக்களுக்கான சிறப்புக்கூறு நிதி திட்டத்தை 1980-ல் இருந்து 2005 வரை சரியாக முறையாக செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு இந்த மக்களை வஞ்சித்த அரசு இன்றைக்கு இந்த மக்களுக்கென்று ஒரு முதன்மை அமைச்சர் இல்லாமல் செய்து விட்டது வருத்தத்திற்குரியது.
மாநில உரிமைகளுக்கு மாநில அந்தஸ்து கூறும் நமது முதல்-அமைச்சர் ஆதிதிராவிட மக்களுக்கு உரிமை தர வேண்டும் அவர்களுக்கு பெருமை தர வேண்டும் என்று நினைத்தால் போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்ற பெயரை நீக்கிவிட்டு பெண் அமைச்சருக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்று பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் இது இம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் திட்டங்கள் அனைத்தும் முறையாக கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விவசாயிகள் சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியாது. இப்படி இருக்கையில் வருடாந்திர சம்பா நெல் பயிருக்கான மழைக்கால காப்பீடு புதுவை அரசின் மெத்தனபோக்கால் இதுவரை காப்பீடு செய்யவில்லை.
- சம்பா நெல் பயிருக்கான காப்பீட்டினை ஒவ்வொரு வருடமும் காலதாமதம் இன்றி காப்பீடு செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியாது. இப்படி இருக்கையில் வருடாந்திர சம்பா நெல் பயிருக்கான மழைக்கால காப்பீடு புதுவை அரசின் மெத்தனபோக்கால் இதுவரை காப்பீடு செய்யவில்லை.
இருப்பினும் தற்போது தொடர் மழை ஆரம்பித்துவிட்ட நிலையில் நெற்பயிர்கள் நடவு செய்து தண்ணீரில் மூழ்கி அழுகி கொண்டிருக்கின்றன. எனவே புதுவை விவசாயிகளுக்கு மழைக்கால நிவாரண நிதியாக நெல் பயிர் எக்டருக்கு (25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரையும்), மற்றும் வருடாந்திர பயிர்களான வாழை,கரும்பு, மரவள்ளி மற்றும் ஏனைய பயிர்களுக்கு (35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை) மழைக்கால நிவாரண நிதியாக மற்றும் சம்பா நெல் பயிருக்கான காப்பீட்டினை ஒவ்வொரு வருடமும் காலதாமதம் இன்றி காப்பீடு செய்ய வேண்டும்.
ஏற்கனவே புதுவை மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை, வியாபாரம் இல்லை, விவசாயமும் அழிந்து வருகிறது. உடனடியாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் வெள்ளி, சனியன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது
- புதுவையில் கடந்த இரு தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
புதுச்சேரி:
வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. 2 நாட்களாக மழை புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் 2 மணிக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை அடுத்தடுத்து வேகம் பிடித்து கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு மழை பெய்தது. வில்லியனூர், திருபுவனை, திருக்கனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தொடர் மழையால் மாநிலம் முழுவதும் குளிர்ந்து காணப்படுகிறது. கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம் என சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுதினம் என 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது என
- லாசுப்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதனுக்கு பிறந்த நாளாகும்.
- அறக்கட்டளையில் தட்டச்சு மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
புதுச்சேரி:
லாசுப்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதனுக்கு பிறந்த நாளாகும்.
பிறந்த நாளையொட்டி வைத்தியநாதன் எம்.எல்.ஏ. குடும்பத்துடன் லாஸ்பேட்டையில் உள்ள கோவில்களில் வழிபட்டார்.
பின்னர்,எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
அவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் தலைவர் எ.வி. சுப்ரமணியன் முன்னாள் அமைச்சர் கமலகண்ணன் மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் வாழ்த்தினர்.
பிறந்தநாளையொட்டி வைத்தியநாதன் எம்.எல்.ஏ. லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த 10 மற்றும்12-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, கமலா அறக்கட்டளையில் தட்டச்சு மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
மேலும் மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகமும் வழங்கப்பட்டது.
- புதுவை பெரிய காலாப்பட்டு மீனவர் பகுதியைச் சேர்ந்த சங்கரவேல் மகன் சங்கர் (வயது 43). பெரிய காலாப்பட்டு ஊர் எதிரே உள்ள கடற்கரையில் தனது கட்டுமரப் படகில் காணங் கழுத்தை வலை கொண்டு மீன் பிடிக்கச் சென்றார்.
- இதனை அறிந்த அவர் உடனடியாக வலையை மேல் நோக்கி வேகமாக எடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பெரிய காலாப்பட்டு மீனவர் பகுதியைச் சேர்ந்த சங்கரவேல் மகன் சங்கர் (வயது 43). பெரிய காலாப்பட்டு ஊர் எதிரே உள்ள கடற்கரையில் தனது கட்டுமரப் படகில் காணங் கழுத்தை வலை கொண்டு மீன் பிடிக்கச் சென்றார்.
நீரோட்டம் தெற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி இருந்ததால் அவருடைய வலை ஊருக்கு வடக்கே உள்ள தனியார் கம்பெனியின் கழிவு நீர்குழாயில் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அவர் உடனடியாக வலையை மேல் நோக்கி வேகமாக எடுத்துள்ளார். இருப்பினும் பாதிவலை கழிவு நீர் குழாயில் சிக்கி இரண்டாக சேதம் அடைந்து கடலில் சென்று விட்டது.
சேதமான வலையின் மதிப்பு சுமார் ரூ.12 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக சங்கர் இன்று காலை காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் வலையுடன் வந்து புகார் அளித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- திருவண்டார் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார்.
புதுச்சேரி:
திருவண்டார் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்டார்கோவிலில் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது சட்டை பையில் சோதனை நடத்திய போது சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தார். மொத்தம் 145 கிராம் கஞ்சாவை அவர் பதுக்கி வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவண்டார்கோவில் சின்னபேட் வாய்க்கால்மேட்டு தெருவை சேர்ந்த ஸ்டாலின்(வயது37) என்பதும், இவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.
- புதுவை குடிசை மாற்று வாரியம் சார்பில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முத்தியால் பேட்டை தொகுதியை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்துக்கான மானிய தொகையை வங்கி கணக்குகளில் செலுத்தும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் சத்தியவாணி, வருவாய் ஆய்வாளர் தணிகாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை குடிசை மாற்று வாரியம் சார்பில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முத்தியால் பேட்டை தொகுதியை சேர்ந்த 5
பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்துக்கான மானிய தொகையை வங்கி கணக்குகளில் செலுத்தும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு மானியத்துக்கான ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் சத்தியவாணி, வருவாய் ஆய்வாளர் தணிகாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.
- புதுவை அருகே உள்ள மீனாட்சி பேட்டை மற்றும் சொக்கநாதன் பேட்டை பள்ளி மாணவர்கள் இணைந்து, நெய்வேலி எல்.எல்.சி.க்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.
- அங்கு சுரங்கத்தில் மின்சாரம் தயாரிப்பது, சோலார் மூலம் மின்சாரம் தயாரிப்பது, விளையாட்டு மண்டலங்கள், சுரங்கங்க ளின் பாதுகாப்பான பகுதிகள் என அனைத்தையும் பார்வையிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை அருகே உள்ள மீனாட்சி பேட்டை மற்றும் சொக்கநாதன் பேட்டை பள்ளி மாணவர்கள் இணைந்து, நெய்வேலி எல்.எல்.சி.க்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.
புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகம், நெய்வேலி சுரங்க சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக எல்.எல்.எல்யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி பள்ளி துணை ஆய்வாளர் குமார் வழிகாட்டுதலுடன், பள்ளி தலைமையாசிரியர் அபர்னா தேவி, 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 150-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவை மேற்கொண்டனர்.
அங்கு சுரங்கத்தில் மின்சாரம் தயாரிப்பது, சோலார் மூலம் மின்சாரம் தயாரிப்பது, விளையாட்டு மண்டலங்கள், சுரங்கங்க ளின் பாதுகாப்பான பகுதிகள் என அனைத்தையும் பார்வையிட்டனர்.
- முத்திரையர்பாளை யத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
- உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்சை வரவழைத்து பாகுபலியை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
புதுச்சேரி:
முத்திரையர்பாளையத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையத்தை சேர்ந்தவர் பாகுபலி (வயது60). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் புதுவை முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லூர் கணபதி நகரில் தங்கி அங்குள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பணிமுடிந்து பாகுபலி தான் தங்கியிருந்த அறையில் தூங்கினார். பாகுபலியுடன் தங்கியிருந்த கலியபெருமாள் என்பவர் பார்த்த போது பாகுபலி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்சை வரவழைத்து பாகுபலியை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாகுபலி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- டைமிங் தகராறில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கருங்கல்லாலும், இரும்பு கம்பியாலும் மதன்ராஜை சரமாரியாக தாக்கினர்.
புதுச்சேரி:
டைமிங் தகராறில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் ஜி.என்.பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது29). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இவர் புதுவை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மதகடிப்பட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அரியூர் அனந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பஸ்சை நிறுத்தி கண்டக்டர் மதன்ராஜியிடம் எங்களது பஸ் டைமில் எப்படி நீ பஸ்சில் பயணிகளை ஏற்றி செல்லலாம் என கூறி தகராறு செய்தனர்.
மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கருங்கல்லாலும், இரும்பு கம்பியாலும் மதன்ராஜை சரமாரியாக தாக்கினர். அதோடு இனிமேல் எங்களது பஸ் டைமில் தலையிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தாக்குதலில் காயமடைந்த மதன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற மதன்ராஜ் பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.






