என் மலர்
புதுச்சேரி

மீன் பிடிக்கும் வலை அருந்ததாக காலப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த மீனவர் சங்கர்.
தனியார் கம்பெனி குழாயில் சிக்கிய வலை
- புதுவை பெரிய காலாப்பட்டு மீனவர் பகுதியைச் சேர்ந்த சங்கரவேல் மகன் சங்கர் (வயது 43). பெரிய காலாப்பட்டு ஊர் எதிரே உள்ள கடற்கரையில் தனது கட்டுமரப் படகில் காணங் கழுத்தை வலை கொண்டு மீன் பிடிக்கச் சென்றார்.
- இதனை அறிந்த அவர் உடனடியாக வலையை மேல் நோக்கி வேகமாக எடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பெரிய காலாப்பட்டு மீனவர் பகுதியைச் சேர்ந்த சங்கரவேல் மகன் சங்கர் (வயது 43). பெரிய காலாப்பட்டு ஊர் எதிரே உள்ள கடற்கரையில் தனது கட்டுமரப் படகில் காணங் கழுத்தை வலை கொண்டு மீன் பிடிக்கச் சென்றார்.
நீரோட்டம் தெற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி இருந்ததால் அவருடைய வலை ஊருக்கு வடக்கே உள்ள தனியார் கம்பெனியின் கழிவு நீர்குழாயில் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அவர் உடனடியாக வலையை மேல் நோக்கி வேகமாக எடுத்துள்ளார். இருப்பினும் பாதிவலை கழிவு நீர் குழாயில் சிக்கி இரண்டாக சேதம் அடைந்து கடலில் சென்று விட்டது.
சேதமான வலையின் மதிப்பு சுமார் ரூ.12 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக சங்கர் இன்று காலை காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் வலையுடன் வந்து புகார் அளித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






