என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்-பா.ம.க. கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    விசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்-பா.ம.க. கோரிக்கை

    • விவசாயிகள் சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியாது. இப்படி இருக்கையில் வருடாந்திர சம்பா நெல் பயிருக்கான மழைக்கால காப்பீடு புதுவை அரசின் மெத்தனபோக்கால் இதுவரை காப்பீடு செய்யவில்லை.
    • சம்பா நெல் பயிருக்கான காப்பீட்டினை ஒவ்வொரு வருடமும் காலதாமதம் இன்றி காப்பீடு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியாது. இப்படி இருக்கையில் வருடாந்திர சம்பா நெல் பயிருக்கான மழைக்கால காப்பீடு புதுவை அரசின் மெத்தனபோக்கால் இதுவரை காப்பீடு செய்யவில்லை.

    இருப்பினும் தற்போது தொடர் மழை ஆரம்பித்துவிட்ட நிலையில் நெற்பயிர்கள் நடவு செய்து தண்ணீரில் மூழ்கி அழுகி கொண்டிருக்கின்றன. எனவே புதுவை விவசாயிகளுக்கு மழைக்கால நிவாரண நிதியாக நெல் பயிர் எக்டருக்கு (25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரையும்), மற்றும் வருடாந்திர பயிர்களான வாழை,கரும்பு, மரவள்ளி மற்றும் ஏனைய பயிர்களுக்கு (35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை) மழைக்கால நிவாரண நிதியாக மற்றும் சம்பா நெல் பயிருக்கான காப்பீட்டினை ஒவ்வொரு வருடமும் காலதாமதம் இன்றி காப்பீடு செய்ய வேண்டும்.

    ஏற்கனவே புதுவை மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை, வியாபாரம் இல்லை, விவசாயமும் அழிந்து வருகிறது. உடனடியாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×