என் மலர்
புதுச்சேரி
- மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலை அறிவியல், வேளாண்மை , பிசியோதெரபி மற்றும் சட்டக்கல்லூரிகளுக்கான ஆண்டு விழா நடந்தது.
- சிறந்த தொழில்முனைவோராகவும், பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிடவும் வாழ்த்தினார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலை அறிவியல், வேளாண்மை , பிசியோதெரபி மற்றும் சட்டக்கல்லூரிகளுக்கான ஆண்டு விழா நடந்தது.
விழாவுக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாரன்,
செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி வரவேற்று பேசினார்.
கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி தனது ஆண்டு அறிக்கையில், கல்லூரியின் கட்டமைப்பு, சர்வதேச சான்றிதழ் படிப்புகள், முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்லூரியின் அனைத்து சிறப்பு அம்சங்களையும் எடுத்துக்கூறினார்.
மேலாண் இயக்குனர் தனசேகரன் பேசும்போது, மாணவர்கள் தனித்திறமையுடனும், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் உடையவர்களாகவும், எதிர் காலத்தில் சிறந்த தொழில்முனைவோராகவும், பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிடவும் வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர் மலர்கண், பதிவாளர் அப்பாஸ் மொதீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், ஆராய்ச்சித்துறை டீன் வேல்முருகன், வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம், டீன்கள் கைலாசம், மனோகரன், முத்துலட்சுமி, கோபால், முகமது யாசின், சந்திரசேகர், சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அக்குபஞ்சர் என்ற கட்டுரையை உலக அக்குபஞ்சர் கருத்தரங்கில் சீனாவில் சமர்ப்பித்து தங்கப்பதக்கம் பெற்றவர்.
- அக்குபஞ்சர் மற்றும் இயற்கை வழி சிகிச்சை முறையில் 100-க் கும் மேற்பட்ட குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்க வழி ஏற்படுத்தினார்.
புதுச்சேரி:
மருத்துவத்துறையில் குழந்தையின்மை என்பது தொடர் கதையாகவே உள்ளது. இதில் பேராசிரியை டாக்டர் உஷா ரவி கடந்த 2000-ம் ஆண்டில் பைபாஸ் அக்குபஞ்சர் என்ற கட்டுரையை உலக அக்குபஞ்சர் கருத்தரங்கில் சீனாவில் சமர்ப்பித்து தங்கப்பதக்கம் பெற்றவர்.
மேலும் கோவை ராஜராஜேஸ்வரி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரங்கநாயகி ஆங்கில மருத்துவதுறையில் முன்னோடியானவர். அவருடன் இணைந்து அக்குபஞ்சர் மற்றும் இயற்கை வழி சிகிச்சை முறையில் 100-க் கும் மேற்பட்ட குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்க வழி ஏற்படுத்தினார்.
அனுபவ அடிப்படையிலும், ஆரோக்கிய அறிவியல் ஆய்வின்படியும், அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் குழந்தையில்லாத தம்பதியினருக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பது குறித்து அக்குபஞ்சர் நிபுணர்களுக்கு டாக்டர் உஷாரவி பயிற்சி அளித்தார்.
கடலூரில் நடந்த இந்த பயிற்சியை கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டரின் நிறுவனரும், தலைவருமான சுசான்லி டாக்டர் ரவி தொடங்கி வைத்தார்.
முடிவில் கவுன்சிலின் பொருளாளர் டாக்டர் அனந்த கிருஷ்ணன் நன்றி கூறினார்.
- புதுவை வாலிபால் சங்கத்தின் சார்பில் ஆடவர்-பெண்களுக்கான ஜூனியர் வாலிபால் போட்டி நடைபெற்றது.
- ஒலிம்பிக் சங்கம் தனசேகர், வாலிபால் சங்கம் முருகையன், சுந்தர்ராசு, சுகுமாறன், வேணுகோபால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை வாலிபால் சங்கத்தின் சார்பில் ஆடவர்-பெண்களுக்கான ஜூனியர் வாலிபால் போட்டி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் 29 ஆண்கள் அணியும், 12 பெண்கள் அணியும் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் முத்தியால் பேட்டை ஜாலி பிரதர்ஸ் கிளப் அணி முதலிடமும், குனிச்சம்பட்டு ஜூப்பிடர் அணி 2-ம் இடமும், பெண்கள் பிரிவில் கருவடிக்குப்பம் ஸ்பைடர் ஸ்போஸ் முதலிடமும், முத்தியால்பேட்டை சூதுமத் கிளப் அணி 2-ம் இடமும், பெற்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு செல்வ கணபதி எம்.பி., கென்னடி எம்.எல்.ஏ. பரிசு கோப்பை வழங்கினர். நிகழ்ச்சியில் புதுவை ஒலிம்பிக் சங்கம் தனசேகர், வாலிபால் சங்கம் முருகையன், சுந்தர்ராசு, சுகுமாறன், வேணுகோபால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை புதுவை வாலிபால் சங்க செயலாளர் ராமதாஸ் செய்திருந்தார்.
- மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இடைக்கால பொதுசெயலாளரை பழனிசாமியை சந்தித்து நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
- புதுவை மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணை செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதையொட்டி புதுவை மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இடைக்கால பொதுசெயலாளரை பழனிசாமியை சந்தித்து நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு மாநில செயலாளர் அன்பழகன் வெள்ளி வேல் மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார் .
இந்த சந்திப்பின் போது புதுவை மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணை செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, எம்.ஏ.கே.கருணாநிதி, குமுதன், காந்தி, நகர செயலாளர்கள் அன்பழகன் உடையார், சித்தானந்தம், மேற்கு மாநில எம். ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, தொகுதி செயலாளர்கள் சம்பத், கமல்தாஸ், வேலவன், முன்னாள் மாணவர் அணி பொருளாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
- தொழிலாளர்கள் சங்கத்தினர் தொழிற்சாலையை திறக்க கோரி சேதராப்பட்டு பெட்ரோல் பங்க் அருகே பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கடந்த ஓராண்டாக தொழிற்சாலை இயங்காமல் மூடி கிடக்கிறது.
புதுச்சேரி:
சேதராப்பட்டு எல்.அன்ட்.டி தொழிற் சாலையில் 250-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாக தொழிற்சாலை இயங்காமல் மூடி கிடக்கிறது.
தொழிற்சாலையை திறந்து இயக்க கோரி தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், எல்.அன்ட்.டி ஜனநாயக தொழிலாளர்கள் சங்கத்தினர் தொழிற்சாலையை திறக்க கோரி சேதராப்பட்டு பெட்ரோல் பங்க் அருகே பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்.அன்ட். டி ஜனநாயக தொழிலாளர்கள் சங்க தலைவர் மோதிலால் தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் செல்வம், தினகரன், வீரப்பன், தியாகராஜன், அன்பரசன், அய்யனார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏ.ஐ.சி. .சி.டி.யு. தேசிய தலைவர் சங்கர், தேசிய துணை தலைவர் பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, நாம் தமிழர் தொழிற்சங்க மாநில செயலாளர் ரமேஷ், ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாநில செயலாளர் சிவக்குமார், கம்யூனிஸ்டு (எம்.எல்) தமிழக மாநில செயலாளர் ஆசைத்தம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி முருகையன், மாநில கமிட்டி உறுப்பினர் மல்லிகா, எல்.அன்ட்.டி ஜனநாயக தொழிற்சங்க செயலாளர் பாஸ்கர், சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிற்சங்க பொறுப்பாளர் மோகன்தாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
- மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நகர சுகாதார மையத்தில், பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் துறை சார்பில் சிறப்பு இலவச காது கேட்கும் திறன் மருத்துவ முகாம் நடைபெற்றது.
- காரைக்கால் பகுதியில் முதல் முறையாக பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுக்கென தனிக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி வளாகத்திலே புதியதாக தொடங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் மொழி குறைபாடுகள் துறை சார்பில் உலக செவித்திறன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை தலைவர் சந்திரசேகர், இயக்குனர் அருணாதேவி ஆகியோரின் உத்தரவின் பேரில் காரைக்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நகர சுகாதார மையத்தில், பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் துறை சார்பில் சிறப்பு இலவச காது கேட்கும் திறன் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியின் டீன். பேராசிரியர் குணசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கண், காது. மூக்கு சிகிச்சை பிரிவு துறை தலைவர் சீனிவாசன், இணை பேராசிரியர் கணேஷ்பாலா, பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் துறை தலைவர் ரம்யா ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் சுமார் 500 பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் துணைத் தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:-
காரைக்கால் பகுதியில் முதல் முறையாக பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுக்கென தனிக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியின் மருத்துவக் குழுக்களை கொண்டு பல கிராமங்களில் வாரம் தோறும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு குறித்த இலவச முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் புதிய தொழில்நுட்பத்துடன் பரிசோதனை செய்து சிகிச்சை செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக கொண்டு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
- புதிதாக கோவில் கட்ட கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது.
- நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கம் புதுக்காலனியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.
அந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கோவில் கட்ட கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது.
தற்போது பழைய கோவிலை இடித்து விட்டு புதியதாக கோவில் கட்டுவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் புதிய கோவில் கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால் கோவில் கட்டும் பணியில் இடையூறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கோவில் கட்டுவதற்கு சாலை வசதி இல்லாததை கண்டித்து கரியமாணிக்கம் புதுகாலனி மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கரியமாணிக்கம்-புதுவை செல்லும் மெயின் ரோட்டில் இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இந்த பிரச்சினையில் தொகுதி எம்.எல்.ஏ.வான துணை சபாநாயகர் ராஜவேலு தலையிட்டு கோவிலுக்கு செல்ல சாலையை உருவாக்கி தரும்வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- வில்லியனூர் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- அப்போது அந்த வாலிபர் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர் அருகே கூனிமுடக்கு-வழுதாவூர் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சாதாரண உடையில் கண்காணித்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுக்கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து அவரது சட்டைபையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தார்.
மொத்தம் 150 கிராம் கஞ்சாவை அந்த வாலிபர் வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து அந்த வாலிபரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த தினா என்ற தினகரன்(20) என்பதுதெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த 2 நாட்களாக தனது மனைவியிடம் யாரோ தன்னை அழைக்கிறார்கள் என கூறி வந்தார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் நந்தமேடு தோப்பு தெருவை சேர்ந்தவர் நிர்மல்(வயது32). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகன் மற்றும் 8 மாத பெண் கைக்குழந்தை உள்ளது. இவர் கடந்த சில நாட்களாக குறைந்த ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த 2 நாட்களாக தனது மனைவியிடம் யாரோ தன்னை அழைக்கிறார்கள் என கூறி வந்தார். அவருக்கு அவரது மனைவி ஆறுதல் கூறி வந்தார்.
இந்த நிலையில் 7 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற நிர்மல் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் அங்குள்ள விநாயகர் கோவில் எதிரே மின் ஊழியர் குடியி ருப்பு பகுதியில் உள்ள வேப்பமரத்தில் நிர்மல் தூக்கு போட்டு தொங்குவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரது மனைவி மணி மேகலைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மணி மேகலை மற்றும் அவரது உறவினர்கள் அலறி அடித்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தூக்கில் இருந்து நிர்மலை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நிர்மல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் குருகுலத்தில் நடந்த விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- குழந்தைகள் அமைப்பின் செயலாளர் ஜெகநாதன், ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த சந்திரகுரு ஆகியோருக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அரசு கலை மாமணி விருதாளர் சங்கம் சார்பில், நாட்டிய கலை விழா, தாய்மொழி தினம், சேவை நிறுவன தினம் ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் குருகுலத்தில் நடந்த விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டிய கலை ரத்னா, சேவை ரத்னா, தாய்மொழி ரத்னா ஆகிய விருதுகளை வழங்கினார்.
முன்னதாக, தமிழ்வாணன் வரவேற்றார். ஜோதி செந்தில் கண்ணன் முன்னிலை வகித்தார். விசித்ரா தலைமை தாங்கினார்.
ஓவியர் அரியபுத்திரி, சுவாமிதாசன், சரவணன், ரவி, சகாதேவன், ராஜாராம், நெல்லை, ராஜன், பேராசிரியர் சிவக்குமார், தட்சிணாமுர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
விழாவில், 103 முறை ரத்ததானம் செய்த வெற்றிச்செல்வம், உயிர்த்துளி அமைப்பின் நிறுவனர் பிரபு, குழந்தைகள் அமைப்பின் செயலாளர் ஜெகநாதன், ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த சந்திரகுரு ஆகியோருக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.
வேலு ஞானமூர்த்தி, ரேகா ராஜா ஆகியோருக்கு தாய்மொழி ரத்னா விருதையும், பக்தன், சாத்வீக காயத்திரி ஆகியோருக்கு நாட்டிய ரத்னா விருதையும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
- ஆயுர்வேதிக் மருத்துவ முறையின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
- ஆயுர்வேதிக் மருத்துவ முறைகளும் எவ்வாறு நிரந்தரமாக சரி செய்வது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினர்.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓரியண்ட்ஸ் குளோப் மார்க்கெட்டிங் சார்பில் சித்தா மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவ முறையின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
இதில் ஓரியண்ட்ஸ் ப்ளூ மார்க்கெட்டிங் ஆலோசகர்கள் ரவி, ரவிச்சந்திரன், ரவிசங்கர், விஜயநிர்மலா, சிவராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கொரோனா காலகட்டத்தில் இருந்து சித்தா மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவம் பொது மக்களை எவ்வகையில் பாதுகாத்தது என்பது குறித்தும், தற்பொழுது மனித குலத்தை ஆட்டிப்படைக்கும் நீரிழிவு நோய், உடல் வெப்பம், உடல் சோர்வு போன்ற பல பல நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது, வந்த பின்னால் ஆயுர்வேதிக் மருத்துவ முறைகளும் எவ்வாறு நிரந்தரமாக சரி செய்வது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினர்.
இந்த கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் கலந்து கொண்டனர்.
- குழந்தைகளுடன் மனைவி கோபித்து சென்றதால் சோகத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் பலியானார்.
- இந்த நிலையில் கடந்த 6 மாதமாக அய்யனாருக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்து வந்தது.
புதுச்சேரி:
குழந்தைகளுடன் மனைவி கோபித்து சென்றதால் சோகத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் பலியானார்.
புதுவை தர்மாபுரி லெனின் வீதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது40). டிப்பர் லாரி டிரைவர். இவரது மனைவி யமுனா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அய்யனாருக்கு திருமணத்துக்கு முன்பே மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மேலும் கடந்த 3 ஆண்டுகளாக அய்யனார் போதை பொருளான ஹான்ஸ் போடும் பழக்கமும் ஏற்படுத்தி கொண்டார்.
இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு 2 முறை இருதய அறுவை சிகிச்சையும், நடந்தது. இந்த நிலையில் கடந்த 6 மாதமாக அய்யனாருக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்து வந்தது. இதனால் அய்யனாரை மது அருந்த வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் டாக்டரின் அறிவுரையை ஏற்காமல் அய்யனார் தொடர்ந்து மது குடித்து வந்தார்.
மேலும் மது குடித்து விட்டு தினமும் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அய்யனார் இதுபோல் மது குடித்து விட்டு தகராறு செய்ததால் அவரது மனைவி யமுனா கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் சண்முகாபுரத்தில் உள்ள அய்யனாரின் பாட்டி வீட்டில் தங்கியிருந்து வந்தார். மனைவி கோபித்து சென்றது முதல் அய்யனார் சோகத்தில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கணவன்-மனைவியை சமாதானம் செய்து வைக்க திருக்கோவிலூரில் வசிக்கும் யமுனாவின் சகோதரி கல்பனா மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோர் யமுனா தங்கியிருந்த சண்முகாபுரத்துக்கு வந்தனர். இதையடுத்து அய்யனாரிடம் சரவணன் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அய்யனார் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து சரவணன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகிய இருவரும் அய்யனார் வீட்டுக்கு சென்றனர். அப்போது அய்யனார் அருகில் உள்ள அவரது நண்பர் வீட்டில் சுயநினைவின்றி கிடப்பதாக தகவல் வந்தது.
உடனே அய்யனாரை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அய்யனார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தைகளுடன் மனைவி கோபித்து சென்றதால் அய்யனார் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டு அய்யனார் இறந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அவரது மனைவி யமுனா கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






