என் மலர்
புதுச்சேரி

காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவ நகர சமுதாய மருத்துவமனையில் நடந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்ட மருத்துவ குழுவினரை படத்தில் காணலாம்.
இலவச காது கேட்கும் திறன் மருத்துவ முகாம்
- மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நகர சுகாதார மையத்தில், பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் துறை சார்பில் சிறப்பு இலவச காது கேட்கும் திறன் மருத்துவ முகாம் நடைபெற்றது.
- காரைக்கால் பகுதியில் முதல் முறையாக பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுக்கென தனிக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி வளாகத்திலே புதியதாக தொடங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் மொழி குறைபாடுகள் துறை சார்பில் உலக செவித்திறன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை தலைவர் சந்திரசேகர், இயக்குனர் அருணாதேவி ஆகியோரின் உத்தரவின் பேரில் காரைக்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நகர சுகாதார மையத்தில், பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் துறை சார்பில் சிறப்பு இலவச காது கேட்கும் திறன் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியின் டீன். பேராசிரியர் குணசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கண், காது. மூக்கு சிகிச்சை பிரிவு துறை தலைவர் சீனிவாசன், இணை பேராசிரியர் கணேஷ்பாலா, பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் துறை தலைவர் ரம்யா ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் சுமார் 500 பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் துணைத் தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:-
காரைக்கால் பகுதியில் முதல் முறையாக பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுக்கென தனிக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியின் மருத்துவக் குழுக்களை கொண்டு பல கிராமங்களில் வாரம் தோறும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு குறித்த இலவச முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் புதிய தொழில்நுட்பத்துடன் பரிசோதனை செய்து சிகிச்சை செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக கொண்டு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.






