என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சில நாட்களுக்கு முன்பு மாணவர் சிறப்பு பேருந்தின் பின்னால் ஏறி நின்று 2 மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்தனர்.
    • விதிகளை மீறி ஆ பத்தான பயணம் செய்யக்கூடாது என மாணவர்களை நீதிபதி கண்டித்தும், பெற்றோர்க ளுக்கு எச்சரிக்கை விடுத்தும் அனுப்பினார்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சில நாட்களுக்கு முன்பு மாணவர் சிறப்பு பேருந்தின் பின்னால் ஏறி நின்று 2 மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, மாணவர்கள், பெற்றோர் சிறுவர் சீர்திருத்த குழுமத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

    விதிகளை மீறி ஆ பத்தான பயணம் செய்யக்கூடாது என மாணவர்களை நீதிபதி கண்டித்தும், பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் அனுப்பினார்.

    பேருந்து ஓட்டு நருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் மீறி செயல்படும் பள்ளி மாணவர்கள், பெற்றோர், வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுவை மாநில ஹேண்ட்பால் அசோசி யேஷன் செயலாளர் நாராயணசாமி, உழவர் கரை மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் தலைவர் டாக்டர் சசிகுமார் தலைமை வகித்தனர்.
    • விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக டான் போஸ்கோ பள்ளி முதல்வர் ஜாபர்சன் சுரேஷ், எஸ்.பி. ரவிக்குமார், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் கீத்தல் சத்யநாராயணன் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அளவிலான சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹேண்ட்பால் விளையாட்டு போட்டிகள் உழவர்கரை கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    புதுவை மாநில ஹேண்ட்பால் அசோசி யேஷன் செயலாளர் நாராயணசாமி, உழவர் கரை மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் தலைவர் டாக்டர் சசிகுமார் தலைமை வகித்தனர். விளையாட்டு போட்டிகளை பாத்திமா மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆக்னல், புதுவை ஹேண்ட்பால் சங்க செயலாளர் நாராயணசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை வில்லியனூர் அணியும், 2-ம் இடத்தைப் காரைக்கால் அணியும், 3-ம் இடத்தை உழவர்கரை அணியும் கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை வில்லியனூர் அணியும், 2-ம் இடத்தை புதுவை அணியும், 3-ம் இடத்தை உழவர்கரை மாவட்ட அணியும் கைப்பற்றியது.

    இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக டான் போஸ்கோ பள்ளி முதல்வர் ஜாபர்சன் சுரேஷ், எஸ்.பி. ரவிக்குமார், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் கீத்தல் சத்யநாராயணன் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.

    விழாவில் டாக்டர் இளங்கோவன், பாண்லே உதவி மேலாளர் குமார், உழவர்கரை மாவட்ட ஹேண்ட்பால் பொதுசெயலாளர்கள் அருள், வீரன், பொருளாளர் ஏகாம்பரம், பொறுப்பா ளர்கள்

    பொண்ணி யம்மாள்,வித்தியா, ஐயனா ரப்பன், கிருஷ்ணா, மணிமாறன், சித்திரவேலு, ராஜாராம், முனியன்,விசு, பிரசன்னா, இளவேந்தன், மனோபாலன் , கரண்,பரணி, அருள்,விஜய் உட்பட பலர்கலந்துகொண்டனர். பொறுப்பாளர்கள் அருள், ஏகாம்பரம் நன்றி தெரிவித்தனர். 

    • ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம் வில்லியனூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.
    • கழிவறை கட்டும் திட்டத்தில் கோடிக் கணக்கான ரூபாய் நிதியை பயனாளிகளுக்கு வழங்காமல் கையாடல் செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம் வில்லியனூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு சங்க கவுரவத் தலைவர் பிரேமதாசன் தலைமை தாங்கினார். ஆலோசகர் ரவி வரவேற்றார். சங்க தலைவர் பொன்னி, செயலாளர் ஜெசிந்தாமேரி, பொருளாளர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும் 200 ஊழியர்கள் தற்பொழுது மதிப்பூதியமாக பெற்று வரும் ரூ. 7 ஆயிரத்தை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி அவர்களின் பணி பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர், துறை அமைச்சர், துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளேன். இது தொடர்பாக சட்டமன்றத்தில் கோரிக்கை விடுப்பேன். தேவைப்பட்டால் ஊழியர்க ளுடன் இணைந்து கோரிக்கை நிறைவேறும் வரை போராட தயாராக உள்ளேன்.

    கழிவறை கட்டும் திட்டத்தில் கோடிக் கணக்கான ரூபாய் நிதியை பயனாளிகளுக்கு வழங்காமல் கையாடல் செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் குடும்பத்திற்கு 3 நாள் கூட வேலை கிடைக்காமல் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி மாநில அளவில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தப்படும்.

    இவ்வாறு சிவா பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி மற்றும் வாழ்வாதார இயக்க பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • கடந்த 2010-ம் ஆண்டு முதல் புதுவை அரசின் கீழ் மாகியில் இயங்கி வருகின்ற அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூயிலிருந்து ஆண்டுக்கு சுமார் 50 மருத்துவர்கள் படிப்பு முடித்து வெளிவருகின்றனர்.
    • ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறக்க செயல் திட்டத்துடன் நிதி ஒதுக்கீட்டை வருகிற 2023-2024 பட்ஜெட் உரையில் இடம் பெற செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொது செயலாளர் முருகானந்தம் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2010-ம் ஆண்டு முதல் புதுவை அரசின் கீழ் மாகியில் இயங்கி வருகின்ற அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூயிலிருந்து ஆண்டுக்கு சுமார் 50 மருத்துவர்கள் படிப்பு முடித்து வெளிவருகின்றனர். அதில் 50 சதவீத மாணவர்கள் நம் புதுவை மாநிலத்தை சார்ந்தவர்களாக இருக் கின்றார்கள் அவர்க ளுக்கான வேலை வாய்ப்பு, மற்றும் எதிர்காலம் குறித்து இது நாள் வரையிலும் எந்தவித திட்டமிடுதல் இல்லாதது அதிர்ச்சியூட்டும் நிகழ்வாக உள்ளது.

    மத்திய அரசு ஆயுஸ்மான் திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைபடுத்தி வருகின்ற நிலையில் புதுவை அரசும் அண்டை மாநிலங்களில் உள்ளது போல் சுற்றுலா துறையில் ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறக்க செயல் திட்டத்துடன் நிதி ஒதுக்கீட்டை வருகிற 2023-2024 பட்ஜெட் உரையில் இடம் பெற செய்ய வேண்டும்.

    மேலும் வில்லியனூரில் கட்டி வரும் ஆயுர்வேத மருத்துவ மனையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும். இவைய னைத்தையும் வருகிற பட்ஜெட் உரையில் இடம் பெற செய்து 300-க்கும் அதிகமான ஆயுர்வேத மருத்துவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஷ்பூ சுந்தருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • சென்னை -புதுவை இடையிலான கப்பல் போக்குவரத்துச் சேவையின் மூலமாக போக்குவரத்துச் செலவு குறைந்து கடல்வழி வர்த்தகம் அதிகரிக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஷ்பூ சுந்தருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மகளிர் நலன் காக்க அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு மீண்டும் ஒரு அங்கீகாரம் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

    பிரதமரின்" சாகர் மாலா" திட்டத்தின்கீழ் சென்னை -புதுவை இடையேயான சரக்குக் கப்பல் போக்குவரத்துச் சேவையை தொடங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி சர்பானந்தா சோனுவாலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை -புதுவை இடையிலான கப்பல் போக்குவரத்துச் சேவையின் மூலமாக போக்குவரத்துச் செலவு குறைந்து கடல்வழி வர்த்தகம் அதிகரிக்கும். மேலும், வருங்காலத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

    • வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
    • கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கரிக்கலாம்பாக்கம் தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

    வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், அசாக்பாபு, கலெக்டர் மணிகண்டன், துறை இயக்குனர் வசந்தகுமார், வனத்துறை அதிகாரி வஞ்சனவள்ளி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் எழில்ராஜன், ஆறுமுகம், ஜெயக்குமார் உட்பட அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், விடுபட்டவர்களுக்கு காப்பீட்டு தொகை, மழைக்கு முன்பாக ஆண்டுதோறும் ஏரி, குளம், வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    • புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு நாடகமாடி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
    • பிரதமர் மோடியின் விருப்பப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் 12 ஆண்டுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணிஅரசில் முதல்-அமைச்சர் ரங்கசாமி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதற்கு அ.தி.மு.க. சார்பில் பாராட்டுக்கள். தி.மு.க., கூட்டணி கட்சிகள் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு நாடகமாடி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் 35 உறுப்பினர்களை கொண்ட தி.மு.க., கூட்டணி கட்சிகள் அங்கு குரல் கொடுக்காமல் மக்களிடையே வெற்று முழக்கத்தை கூறுவது சரி அல்ல. வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்தை பெற, மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் முதல்-அமைச்சர் உட்பட அனைத்து  எம்.எல்.ஏ.க்களும் 2 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

    புதுவைக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசுக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்.

    பிரதமர் மோடியின் விருப்பப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும். தேர்தலின்போது அறிவித்தபடி ரேஷன் கடைகளை திறந்து பொதுவிநியோக திட்டத்தை வழங்க வேண்டும். இதற்கு பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு வழிசெய்ய வேண்டும்.

    புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டை மாணவர்களுக்கு வழங்க உறுதியான நடவடிக்கையை கவர்னர், முதல்-அமைச்சர் எடுக்க வேண்டும். 10 ஆண்டாக வேலைவாய்ப்பு துறை அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு 5 ஆண்டு அரசு வேலைவாய்ப்பு வயது வரம்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பொது பிரிவினருக்கு 35 வயதாகவும், ஒ.பி.சி. 37 வயதாகவும், எஸ்.சி. பிரிவினருக்கு 40 வயதாக மாற்றி தளர்வு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரிட்டன், இந்தியா நாடுகளிடையே கடற்கரையை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற குறிப்பிட்ட நகரங்களோடு வலுவான இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • புதுவையில் உற்பத்தி யாகும் 400 டன் குப்பையில் 200 டன் மக்கும் குப்பையை உரமாக மாற்ற பெரிய இடம் தேவை.

    புதுச்சேரி:

    பிரிட்டன், இந்தியா நாடுகளிடையே கடற்கரையை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற குறிப்பிட்ட நகரங்களோடு வலுவான இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்த பயிற்சி முகாம் ஓட்டல் அக்கார்டில் நடந்தது.பிரிட்டன் குழுவை சேர்ந்த சோப்பி வாக்கர், டாம்பாஸ்மோர் ஆகியோர் பங்கேற்றனர். தொடக்கவிழாவில் அறிவியல் தொழில் நுட்பத்துறை செயலர் முத்தம்மா பேசும்போது, பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் திடக்கழிவு மேலாண்மையில் வெற்றி பெறலாம். கடல் வளம் காக்க திடக்கழிவு கடலில் கலப்பதை தடுக்க வேண்டும் என்றார்.

    இயக்குனர் பிரியதர்ஷினி பேசும்போது, கடற்கரை மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தி புதுவை கடற்கரையை பாதுகாக்கலாம் என்றார்.

    தொழில்நுட்ப அமர்வில் மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் பேசியதாவது:-

    புதுவையில் உற்பத்தி யாகும் 400 டன் குப்பையில் 200 டன் மக்கும் குப்பையை உரமாக மாற்ற பெரிய இடம் தேவை. திடக்கழிவு உரமாக மாற்ற 10 நாட்கள் தேவை. சிறிய மாநிலமான புதுவையில் இது சாத்தியமில்லை.

    400 டன் குப்பையில் 4 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதே சிறந்த திட்டம். நாள்தோறும் உற்பத்தியாகும் குப்பைகளை அன்றைய தினமே அறிவியல் பூர்வமாக அகற்றலாம். ஜப்பான், சிங்கப்பூர், கொரியா நாடுகளில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்றார்.

    • ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் பிப் 28-ந் தேதி ஆரோவில் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • ஆரோவில் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சேதராப்பட்டு:

    ஆரோவில் உதய தினத்தையொட்டி நடந்த போன் பயர் நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டு கூட்டு தியானம் செய்தனர்.

    புதுவை அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது. இந்த நகரத்தை உருவாக்க அன்னை மீரா அல்பாசா தலைமையில் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கியது.

    அதனையொட்டி, ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் பிப் 28-ந் தேதி ஆரோவில் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதுபோல் இன்று ஆரோவில் 55-ம் ஆண்டு உதய தினத்தையொட்டி அதிகாலை ஆரோவில் ஆம்பி தியேட்டரில் போன் பயருடன் கூட்டு தியானம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்துகொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஆரோவில் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • திருபுவனை கலியபெருமாள் தலைமையில் 30 கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கம் நடைபெற்றது.
    • புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இணைத்து போதிய பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை சிந்தனையாளர் பேரவை சார்பில் 120-வது சிந்தனையரங்கம் ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. பேரவை தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். இணை செயலாளர் காமராசு வரவேற்புரையாற்றினார். துணைத்தலைவர்கள் கவுசல்யாதேவி, மணிமேகலை, துணை செயலாளர்கள் ராஜாராம், விசாலாட்சி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பழனிபாஸ்கரன், இளமுருகன், ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் திருபுவனை கலியபெருமாள் தலைமையில் 30 கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வருகிற புதுவை சட்டசபை கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து குறித்து மக்களிடம் கருத்து கணிப்பு கேட்க வேண்டும். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இணைத்து போதிய பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலை அறிவியல், வேளாண்மை , பிசியோதெரபி மற்றும் சட்டக்கல்லூரிகளுக்கான ஆண்டு விழா நடந்தது.
    • சிறந்த தொழில்முனைவோராகவும், பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிடவும் வாழ்த்தினார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலை அறிவியல், வேளாண்மை , பிசியோதெரபி மற்றும் சட்டக்கல்லூரிகளுக்கான ஆண்டு விழா நடந்தது.

    விழாவுக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாரன்,

    செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி வரவேற்று பேசினார்.

    கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி தனது ஆண்டு அறிக்கையில், கல்லூரியின் கட்டமைப்பு, சர்வதேச சான்றிதழ் படிப்புகள், முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்லூரியின் அனைத்து சிறப்பு அம்சங்களையும் எடுத்துக்கூறினார்.

    மேலாண் இயக்குனர் தனசேகரன் பேசும்போது, மாணவர்கள் தனித்திறமையுடனும், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் உடையவர்களாகவும், எதிர் காலத்தில் சிறந்த தொழில்முனைவோராகவும், பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிடவும் வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர் மலர்கண், பதிவாளர் அப்பாஸ் மொதீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், ஆராய்ச்சித்துறை டீன் வேல்முருகன், வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம், டீன்கள் கைலாசம், மனோகரன், முத்துலட்சுமி, கோபால், முகமது யாசின், சந்திரசேகர், சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அக்குபஞ்சர் என்ற கட்டுரையை உலக அக்குபஞ்சர் கருத்தரங்கில் சீனாவில் சமர்ப்பித்து தங்கப்பதக்கம் பெற்றவர்.
    • அக்குபஞ்சர் மற்றும் இயற்கை வழி சிகிச்சை முறையில் 100-க் கும் மேற்பட்ட குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்க வழி ஏற்படுத்தினார்.

    புதுச்சேரி:

    மருத்துவத்துறையில் குழந்தையின்மை என்பது தொடர் கதையாகவே உள்ளது. இதில் பேராசிரியை டாக்டர் உஷா ரவி கடந்த 2000-ம் ஆண்டில் பைபாஸ் அக்குபஞ்சர் என்ற கட்டுரையை உலக அக்குபஞ்சர் கருத்தரங்கில் சீனாவில் சமர்ப்பித்து தங்கப்பதக்கம் பெற்றவர்.

    மேலும் கோவை ராஜராஜேஸ்வரி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரங்கநாயகி ஆங்கில மருத்துவதுறையில் முன்னோடியானவர். அவருடன் இணைந்து அக்குபஞ்சர் மற்றும் இயற்கை வழி சிகிச்சை முறையில் 100-க் கும் மேற்பட்ட குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்க வழி ஏற்படுத்தினார்.

    அனுபவ அடிப்படையிலும், ஆரோக்கிய அறிவியல் ஆய்வின்படியும், அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் குழந்தையில்லாத தம்பதியினருக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பது குறித்து அக்குபஞ்சர் நிபுணர்களுக்கு டாக்டர் உஷாரவி பயிற்சி அளித்தார்.

    கடலூரில் நடந்த இந்த பயிற்சியை கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டரின் நிறுவனரும், தலைவருமான சுசான்லி டாக்டர் ரவி தொடங்கி வைத்தார்.

    முடிவில் கவுன்சிலின் பொருளாளர் டாக்டர் அனந்த கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×