என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பட்ஜெட் கூட்டத்தொடரை2 நாட்கள் புறக்கணிக்க வேண்டும்-அன்பழகன் வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    பட்ஜெட் கூட்டத்தொடரை2 நாட்கள் புறக்கணிக்க வேண்டும்-அன்பழகன் வலியுறுத்தல்

    • புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு நாடகமாடி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
    • பிரதமர் மோடியின் விருப்பப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் 12 ஆண்டுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணிஅரசில் முதல்-அமைச்சர் ரங்கசாமி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதற்கு அ.தி.மு.க. சார்பில் பாராட்டுக்கள். தி.மு.க., கூட்டணி கட்சிகள் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு நாடகமாடி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் 35 உறுப்பினர்களை கொண்ட தி.மு.க., கூட்டணி கட்சிகள் அங்கு குரல் கொடுக்காமல் மக்களிடையே வெற்று முழக்கத்தை கூறுவது சரி அல்ல. வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்தை பெற, மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் முதல்-அமைச்சர் உட்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் 2 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

    புதுவைக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசுக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்.

    பிரதமர் மோடியின் விருப்பப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும். தேர்தலின்போது அறிவித்தபடி ரேஷன் கடைகளை திறந்து பொதுவிநியோக திட்டத்தை வழங்க வேண்டும். இதற்கு பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு வழிசெய்ய வேண்டும்.

    புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டை மாணவர்களுக்கு வழங்க உறுதியான நடவடிக்கையை கவர்னர், முதல்-அமைச்சர் எடுக்க வேண்டும். 10 ஆண்டாக வேலைவாய்ப்பு துறை அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு 5 ஆண்டு அரசு வேலைவாய்ப்பு வயது வரம்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பொது பிரிவினருக்கு 35 வயதாகவும், ஒ.பி.சி. 37 வயதாகவும், எஸ்.சி. பிரிவினருக்கு 40 வயதாக மாற்றி தளர்வு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×