என் மலர்
புதுச்சேரி

பயிற்சி முகாமில் மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் பேசிய போது எடுத்த படம்.
குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்
- பிரிட்டன், இந்தியா நாடுகளிடையே கடற்கரையை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற குறிப்பிட்ட நகரங்களோடு வலுவான இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- புதுவையில் உற்பத்தி யாகும் 400 டன் குப்பையில் 200 டன் மக்கும் குப்பையை உரமாக மாற்ற பெரிய இடம் தேவை.
புதுச்சேரி:
பிரிட்டன், இந்தியா நாடுகளிடையே கடற்கரையை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற குறிப்பிட்ட நகரங்களோடு வலுவான இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த பயிற்சி முகாம் ஓட்டல் அக்கார்டில் நடந்தது.பிரிட்டன் குழுவை சேர்ந்த சோப்பி வாக்கர், டாம்பாஸ்மோர் ஆகியோர் பங்கேற்றனர். தொடக்கவிழாவில் அறிவியல் தொழில் நுட்பத்துறை செயலர் முத்தம்மா பேசும்போது, பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் திடக்கழிவு மேலாண்மையில் வெற்றி பெறலாம். கடல் வளம் காக்க திடக்கழிவு கடலில் கலப்பதை தடுக்க வேண்டும் என்றார்.
இயக்குனர் பிரியதர்ஷினி பேசும்போது, கடற்கரை மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தி புதுவை கடற்கரையை பாதுகாக்கலாம் என்றார்.
தொழில்நுட்ப அமர்வில் மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் பேசியதாவது:-
புதுவையில் உற்பத்தி யாகும் 400 டன் குப்பையில் 200 டன் மக்கும் குப்பையை உரமாக மாற்ற பெரிய இடம் தேவை. திடக்கழிவு உரமாக மாற்ற 10 நாட்கள் தேவை. சிறிய மாநிலமான புதுவையில் இது சாத்தியமில்லை.
400 டன் குப்பையில் 4 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதே சிறந்த திட்டம். நாள்தோறும் உற்பத்தியாகும் குப்பைகளை அன்றைய தினமே அறிவியல் பூர்வமாக அகற்றலாம். ஜப்பான், சிங்கப்பூர், கொரியா நாடுகளில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்றார்.






