என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மாணவர்களின் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை
- சில நாட்களுக்கு முன்பு மாணவர் சிறப்பு பேருந்தின் பின்னால் ஏறி நின்று 2 மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்தனர்.
- விதிகளை மீறி ஆ பத்தான பயணம் செய்யக்கூடாது என மாணவர்களை நீதிபதி கண்டித்தும், பெற்றோர்க ளுக்கு எச்சரிக்கை விடுத்தும் அனுப்பினார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சில நாட்களுக்கு முன்பு மாணவர் சிறப்பு பேருந்தின் பின்னால் ஏறி நின்று 2 மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, மாணவர்கள், பெற்றோர் சிறுவர் சீர்திருத்த குழுமத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
விதிகளை மீறி ஆ பத்தான பயணம் செய்யக்கூடாது என மாணவர்களை நீதிபதி கண்டித்தும், பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் அனுப்பினார்.
பேருந்து ஓட்டு நருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் மீறி செயல்படும் பள்ளி மாணவர்கள், பெற்றோர், வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






