என் மலர்
புதுச்சேரி
- புதுவை மாநில கபடி சங்கம் சார்பில் முகாம்கள் நடத்தி கபடி வீராங்கனைகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு அதன்படி 12 கபடி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
- ஆசிய கோல்டு மெடலிஸ்டும் அணியின் மேலாளருமான ஜெயக்குமார் உடன் சென்றனர்.
புதுச்சேரி:
ஹரியானா மாநிலத்தில் 69-வது தேசிய சீனியர் மகளிர் கபடி போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்க புதுவை மாநில கபடி சங்கம் சார்பில் முகாம்கள் நடத்தி கபடி வீராங்கனைகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு அதன்படி 12 கபடி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் கபடி போட்டியில் பங்கேற்க செல்லும் வீராங்கனைகளை புதுவை பஸ் நிலையத்தில் புதுவை மாநில கபடி சங்க தலைவர் விஜயலட்சுமி ஜெயராமன் தலைமையில் பொதுச் செயலாளர் ஆரியசாமி, பொருளாளர் கபிலன், துணைத் தலைவர் மலையான் மற்றும் கபடி சங்க நிர்வாகிகள் பாஸ்கர், மருது,பாபு மற்றும் பலர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
ஹரியானா செல்லும் 12 கபடி வீராங்கனைகளுடன் பயிற்சியாளர் கதிரவன், ஆசிய கோல்டு மெடலிஸ்டும் அணியின் மேலாளருமான ஜெயக்குமார் உடன் சென்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை புதுவை மாநில கபடி சங்க மக்கள் தொடர்பு அலுவலர் பூபாலன் செய்திருந்தார்.
- துணிகளை மொட்டை மாடியில் காய வைத்துவிட்டு வீட்டுக்குள் வரும்போது 2 நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.
- இந்நிலையில் திடீரென பவித்ராவுக்கு போன் வந்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 54). இவருக்கு ஒரு மனைவி 3 மகள்கள் உள்ளனர்.
இவரது மூத்த மகளை கல்பாக்கம் பகுதியில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அறிவழகன் அவரது மனைவி மற்றும் இளைய மகள் ஆகிய 3 பேரும் மூத்த மகளை பார்க்க சென்று விட்டனர். மற்றொரு மகளான பவித்ரா (வயது 22) வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் துவைத்த துணிகளை மொட்டை மாடியில் காய வைத்துவிட்டு வீட்டுக்குள் வரும்போது 2 நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.
பின்னர் அந்தப் பெண்ணை கையும் காலும் கட்டி வாயில் துணியை வைத்து அழுத்தி கட்டிலுக்கு அடியில் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்த செயினை பறித்த போது அது கவரிங் நகை என்று தெரிந்தவுடன் அதை போட்டு விட்டனர்.
பின்னர் வீடு முழுக்க நகை, பணம் ஏதாவது வைத்து இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்துள்ளனர்.
ஆனால் நகை, பணம் ஏதும் இல்லை. இந்நிலையில் திடீரென பவித்ராவுக்கு போன் வந்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்த பவித்ரா சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது பவித்ரா கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை அப்பகுதி மக்கள் மீட்டனர். பின்னர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்.
வீடுகளுக்கு மத்தியில் கடற்கரை ஓரமாக உள்ள வீட்டில் பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு திருட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புதுவை சட்டசபையில் கடந்த 13-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
- முதல்-அமைச்சரை சந்திக்க வருபவர்கள் முக கவம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்துவிதமாக ஆயிரம் முக கவசங்களை வழங்கினர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கடந்த 13-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.
புதுவையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றார். இதற்காக தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் முதல்- அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கொரோனா நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் முதல்-அமைச்சரை சந்திக்க வருபவர்கள் முக கவம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்துவிதமாக ஆயிரம் முக கவசங்களை வழங்கினர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, தொழில் தொடங்குவோருக்கு பல சலுகை, திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், புதுவையின் பொருளாதாரம் உயரும். இதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூட்டமைப்பு தலைவர் பாபு கேட்டுக் கொண்டார்.
- புதுவை அருகே அபிஷேகப்பாக்கம் செல்லும் சாலை சேதமாகி இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.
- புதிய தார் சாலை ரூ.46 லட்சம் செலவில் அமைப்பதற்கான பூமி பூஜை தொடங்கப்பட்டது.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் செல்லும் சாலை சேதமாகி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. இது சம்பந்தமாக பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் நடவடிக்கை எடுத்து வந்தார்.
தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் வழியாக தேடுவார் நத்தம் வரை புதிய தார் சாலை ரூ.46 லட்சம் செலவில் அமைப்பதற்கான பூமி பூஜை தொடங்கப்பட்டது.
இந்த பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். விழாவில் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் சுந்தரராஜன், உதவி பொறியாளர் கோபி, இளநிலைப் பொறியாளர் நடராஜன், தொகுதி தலைவர் லக்ஷ்மிகாந்தன், சக்திபாலன், கிராம முக்கிய பிரமுகர்கள் ராமு, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜா மற்றும் ஞானசேகரன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை அருகே திப்புராயப்பேட்டை சன்னியாசி தோப்பில் அமைந்துள்ள கல்லறையில் சமாதி திருவிழா நடைபெற்றது.
- இதில் உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில 21 கிராம ஆதிதிராவிடர் பஞ்சாயத்து குழு கூட்டமைப்பு சார்பில் திப்புராயப்பேட்டை சன்னியாசி தோப்பில் அமைந்துள்ள கல்லறையில் சமாதி திருவிழா நடைபெற்றது.
அதில் முன்னோர்களின் சமாதியை சீர்செய்து சமாதி திருவிழாவை சிறப்பாக செய்து பொதுமக்கள் வழிபட்டனர். இதில் உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.
நிகழ்ச்சியில் பெரும்பா லான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு சடங்குகளை செய்தனர், விழாவில் தி.மு.க. கட்சி நிர்வாகிகள், புதியவன், கன்னியப்பன்,மூர்த்தி, நோயல், மணிகண்டன், தேசீர், பேட்டை ரஜினி, மகிமை, பெருமாள்,சரவணன், மொயிஸ், சக்திவேல், அறிவழகன், ஈசாக், தர்ஷனா, தஸ்தான், லாரன்ஸ், ஆனந்த், மோரீஸ், தமிழா, செரேஞ்சீவி மற்றும் உப்பளம் தொகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
- முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
- ஏழைகள் அந்த நேரத்தில் பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டடசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் பேசியதாவது:-
வேல்ராம்பட்டு ஏரி ஒப்பந்தத்தை ரத்து செய்து ஏரியை காப்பாற்ற வேண்டும். முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
இயற்கை பேரிடர் காலங்களில் அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இறந்தவர் உடலை அடக்கம் செய்ய பணம் முக்கிய தேவையாக உள்ளது. ஏழைகள் அந்த நேரத்தில் பணம் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே மயான வசூலிக்கும் கட்டண தொகையினை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
அரசு மருத்துவ மனைகளில் இருதய அறுவை சிகிச்சை 2 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கிறது. தினமும் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.சிடி ஸ்கேன் எந்திரம் மேலும் 2 வாங்க வேண்டும்.
நீரழிவு நோயாளிகள் போடும் இன்சுலின் ஊசியின் பருமனை மாற்ற வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் ஒரு டாக்டரை பணியமர்த்த வேண்டும். முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை புனரமைக்க வேண்டும்
இவ்வாறு சம்பத் பேசினார்.
- ஏழை முஸ்லீம்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.
- பெண்களுக்கு புடவை, காய்கறி மற்றும் ஆண்களுக்கு வேட்டி, சட்டை ஆகியவை வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி புதுவை தி.மு.க. சிறுபான்மையினரின் நலபிரிவு சார்பில் ஏழை முஸ்லீம்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.
உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 200 முஸ்லீம் பெண்களுக்கு புடவை, காய்கறி மற்றும் ஆண்களுக்கு வேட்டி, சட்டை, இனிப்புகளை தி.மு.க. பொதுகுழு உறுப்பினர் கோபால் முன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ஆதி நாராயணன், பொரு ளாளர் சசிகுமார், சிறுபான்மை யினர் நலப்பிரிவு நிர்வாகி இஸ்மாயில் மற்றும் வர்த்தகர் பிரிவு ராதா என்கிற ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- திருபுவனையில் இயங்கி வருகிற கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 மாதங்களாக இயங்காமல் மூடி கிடக்கின்றது.
- தொழிற்சங்கத்தை சேர்ந்த முருகன் வீராசாமி துரை லிங்கம் மஞ்சினி எல்லப்பன் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
திருபுவனை கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் 3 பேர் மன உளைச்சலில் இறந்து போனவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க கோரியும், திருபுவனையில் இயங்கி வருகிற கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 மாதங்களாக இயங்காமல் மூடி கிடக்கின்றது.
இந்நிலையில், அதில் பணிபுரியும் ஊழியர்கள் அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலை வாசலில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்கத்தை சேர்ந்த முருகன் வீராசாமி துரை லிங்கம் மஞ்சினி எல்லப்பன் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து அதிகாரியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர் அப்பொழுது போலீஸ்சாருக்கும் தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உருவ பொம்மையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையை அரசிற்கு தெரியப்படுத்துகிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
தொழிற்சங்கத்தின் தலைவர் சிவசங்கரன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
- புதுவை பொதுப்பணித்துறை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
- அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
இன்று 300-க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட வந்தனர்.
அரசு ஆஸ்பத்திரி அருகே குவிந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
- கருவடிகுப்பத்தில் நகராட்சிக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தில் காடு வளர்ந்துள்ளது. இது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
- கடந்த சில ஆண்டுக்கு முன் 65 வயது மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-
கல்யாணசுந்தரம்(பா.ஜனதா):- கருவடிகுப்பத்தில் நகராட்சிக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தில் காடு வளர்ந்துள்ளது. இது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
இங்கு விளையாட்டு மைதானம் அமைக்க அரசுக்கு உத்தேசம் உள்ளதா? தனியார் பங்களிப்புடன் மைதானம் அமைக்க அரசு தடையில்லா சான்று வழங்குமா? முதல்-அமைச்சர் ரங்கசாமி:- நகராட்சியின் நிதி நெருக்கடியை கருத்தில்கொண்டு தகுதியுள்ளவர்களுக்கு நீண்டகால குத்தகை, வருவாய் பகிர்வு அடிப்படையில் இந்த நிலத்தை வழங்குவதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்யாணசுந்தரம்: - இங்கு கடந்த சில ஆண்டுக்கு முன் 65 வயது மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த நிலத்தை பொதுமக்கள் சிறிது, சிறிதாக ஆக்கிரமித்து வருகின்றனர்.
இங்கு விளையாட்டு மைதானம் அமைத்தால் இளைஞர்களுக்கு உதவிகரமாக இருக்கும். கிரிக்கெட் மைதானம் அமைத்தால் இளைஞர்கள் பயிற்சி பெற முடியும்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி:- நிலத்தை சுத்தம் செய்ய முதலில் நடவடிக்கை எடுப்போம். அரசுக்கு வருவாய் வரும் வகையில் எதை கொண்டுவர முடியுமோ? அதை கொண்டுவருவோம். அங்கு 2 கிரிக்கெட் மைதானம் அமைக்கலாம் அல்லது தீம்பார்க் அமைக்கலாம். அதன்மூலம் வருமானம் வரும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- பாசிக் நிறுவனம் நிர்ணயித்த கொள்முதல் விலை நிர்ணயித்த விலைக்கும் வித்தியாசம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
- பாசிக் நிறுவன கொள்முதல் விலைக்கும் உள்ள வித்தியாசம் ரூ.23.70. ஆனால் இந்த கொள்முதல் விலையை ஒப்பிட இயலாது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன், 2018-ல் வேளாண்துறையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கைபூண்டு வழங்க கொள்முதல் செய்யப்பட்ட ஒப்பந்த புள்ளியில் குறைந்த விலை நிர்ணயித்த நிறுவனத்தின் பெயர், விபரம் என்ன? கொள்முதல் விலை, விற்பனை விலை என்ன? தமிழக அரசு நிர்ணயித்த கொள்முதல் விலைக்கும், பாசிக் நிறுவனம் நிர்ணயித்த கொள்முதல் விலை நிர்ணயித்த விலைக்கும் வித்தியாசம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், 2018-ம் ஆண்டு 20 மெட்ரிக் டன் விவசாயிகளுக்கு வழங்க தனியார் நிறுவனத்திடம் தக்கை பூண்டு கொள்முதல் செய்யப் பட்டது. கொள்முதல் விலை ரூ.51.30, விற்பனை விலை ரூ.53.90. தமிழக அரசின் கொள்முதல் விலைக்கும், பாசிக் நிறுவன கொள்முதல் விலைக்கும் உள்ள வித்தியாசம் ரூ.23.70. ஆனால் இந்த கொள்முதல் விலையை ஒப்பிட இயலாது.
இதில் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்றார். மீண்டும் குறுக்கிட்ட எம்.எல்.ஏ. அங்காளன், அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய காரணம் யார்? அவர்கள் மீது அரசு ந டவடிக்கை எடுத்ததா? இதுதொடர்பான கோப்புகள் அனைத்தையும் சபாநாயகர் அறையில் வைக்க வேண்டும். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 65 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- தலைமைச் செயலகம் எதிரில் கடலில் முழங்கால் அளவு இறங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
பாப்ஸ்கோ ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தலைமையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமையில் 8-வது நாளாக இன்று தலைமைச் செயலகம் எதிரில் கடலில் முழங்கால் அளவு இறங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். ஏ.ஐ.டி.யூ.சி. கொடிகளுடன் அவர்கள் கடலில் இறங்கினர்.
போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். பாப்ஸ்கோ ஊழியர் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர், ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு, ஏஐடியுசி மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவ தலைவர் அபிஷேகம் முன்னிலை வகித்தனர். பாப்ஸ்கோ சங்க நிர்வாகிகள் நடராஜன், முனுசாமி, அமுதவல்லி, பத்மநாபன், ரவி, ஏழுமலை, முருகவேல், வேலு, பாலமுருகன், ஜீவரத்தினம், ராஜூ, விசுவநாதன், குமரகுரு, அமுதா, அம் சவல்லி, நக்கீரன், சத்தியசீலன், ஊழியர்கள் கோவர்தன், குணா, கெஜவரதன், நாராயணன், பாலச்சந்தர், பார்த்திபன், செந்தில், சௌந்தர்ராஜன், காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப்அடைக்கலராஜ், பாலாசுப்பிரமணியன் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 65 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அனைத்து ஊழியர்களுக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் புதுவை கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.






