என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speaker Selvam"

    • புதுவை அருகே அபிஷேகப்பாக்கம் செல்லும் சாலை சேதமாகி இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.
    • புதிய தார் சாலை ரூ.46 லட்சம் செலவில் அமைப்பதற்கான பூமி பூஜை தொடங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் செல்லும் சாலை சேதமாகி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. இது சம்பந்தமாக பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் நடவடிக்கை எடுத்து வந்தார்.

    தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் வழியாக தேடுவார் நத்தம் வரை புதிய தார் சாலை ரூ.46 லட்சம் செலவில் அமைப்பதற்கான பூமி பூஜை தொடங்கப்பட்டது.

    இந்த பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். விழாவில் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் சுந்தரராஜன், உதவி பொறியாளர் கோபி, இளநிலைப் பொறியாளர் நடராஜன், தொகுதி தலைவர் லக்ஷ்மிகாந்தன், சக்திபாலன், கிராம முக்கிய பிரமுகர்கள் ராமு, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜா மற்றும் ஞானசேகரன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விஞ்ஞானிகளை பாராட்டுவதில் தேசம் ஒன்றாக நிற்கிறது
    • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சந்திரயான்-3 உலக அளவில் முதன்முதலாக நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த வரலாற்று வெற்றியை பாராட்டி சட்டசபையில் பிரதமர் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி சபாநாயகர் செல்வத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சந்திரயான்-3 அற்புதமான வெற்றி தொடர்பான உங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது. ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில், நமது தேசத்தை நிலவுக்கு கொண்டுசென்ற சந்திரப் பயணத்தை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. இஸ்ரோ மற்றும் நமது விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் கடின உழைப்பு, ஆர்வம் இந்தியாவின் நிலையை உலகளாவிய அளவில் மேம்படுத்தியுள்ளன.

    விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது விண்வெளித்துறையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. பல நாடுகள் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தவும் உதவி வருகின்றது. முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தில் சக்திரயான் 3 தரையிறங்கியது மற்றும் மூலம் இந்தியாவை உலகம் தீவிரமாக கவனித்துள்ளது.

    ஒவ்வொரு இந்தியரும் இதனை தனது சொந்த வெற்றியாக எடுத்துக் கொண்டனர். இந்த சந்திரப்பயணத்திற்கான உங்கள் ஆதரவும் உற்சாகமும் நமது விஞ்ஞானிகளை போற்றுவது ஒட்டுமொத்த தேசமும் ஒன்றாக நிற்கிறது என்பதைக் காட்டுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

    ×