என் மலர்
புதுச்சேரி
- உலக மகளிர் மாத விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்று ஓடும் ரெயிலில் ஓவியம் வரைந்தார்கள்.
புதுச்சேரி:
அரிச்சுவடி மனநல மையம் மற்றும் ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரஞ்சிட்டி சார்பில் உலக மகளிர் மாத விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் சபாநாயகருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்று ஓடும் ரெயிலில் ஓவியம் வரைந்தார்கள்.
ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரஞ்சிட்டி தலைவர் சதிஷ்குமார் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சரவணன் ரோட்டரிக் துணை கவர்னர் மதிவாணன், கோதை சதிஷ்குமார், அரசமாதேவி, ரவிச்சந்திரன் கேக்வெட்டி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.
மேலும் ஓவியப்போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ரோட்டரிக் முன்னாள் தலைவர்கள் சாதிக், ராம்பிரகாஷ் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், செந்தில், ஏழுமலை, பிரசாந்த், பாபு ராமசந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி ஊழியர்கள் மற்றும் அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் செய்திருந்தனர்.
- புதுவை கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதா? புதிய கல்வி கொள்கையின் கீழ் எவ்வித பயிற்று மொழி நடைமுறையில் உள்ளதா?
- கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கட்டண தொகையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-
ஏ.கே.டி.ஆறுமுகம்(என்.ஆர்.காங்): புதுவை கல்வித்துறை யில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதா? புதிய கல்வி கொள்கையின் கீழ் எவ்வித பயிற்று மொழி நடை முறையில் உள்ளது? தனியார் பள்ளிகளில் புதிய கல்வி கொள்கையின் கீழ் மாணவர் சேர்க்கை விதிகள் கடை பிடிக்கப் படுகிறதா? கட்டண தொகையை கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதா?
அமைச்சர் நமச்சிவாயம்: புதுவை கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுவை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு ஆகிய மொழிகள் பயிற்று மொழிகளாக உள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கட்டண தொகையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு உதவி ெபறும், உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு 3 கல்வி யாண்டுக்கான 2022 முதல் 2025 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வறிக்கை மேல் உத்தரவுக்காக கட்டண குழுவில் வைக்கப்படும். கூடுதல் கட்டணம் பெறுவது தொடர்பாக பெற்றோர் களின் தனிப்பட்ட புகாரின்பேரில் ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தலைமையிலான குழுவால் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
ஏ.கே.டி. ஆறுமுகம்: அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- புதுவை கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆலை நிலம் விற்பனை மோசடி குறித்து மேலாண் இயக்குனரிடம் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
போராட்டக்குழு தலைவர்கள் சிவசங்கரன், மஞ்சினி, எல்லப்பன் தலைமை வகித்தனர். நடராஜன், ரஞ்சித், முருகன், பூபாலன், துரைலிங்கம், இளங்கோ முன்னிலை வகித்தனர். 10 மாதமாக மூடிக்கிடக்கும் திருபுவனை கூட்டுறவு நூற்பாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். இல்லாவிட்டால் தொழிலாளர்களுக்கு செட்டில்மென்ட் செய்ய வேண்டும்.
ஆலை நிலம் விற்பனை மோசடி குறித்து மேலாண் இயக்குனரிடம் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். உற்பத்தி செய்த நூலை காலத்தோடு விற்காமல் காலம்கடத்தி குறைந்த விலைக்கு விற்ற மேலாண் இயக்குனர் மீது விசாரணை நடத்த வேண்டும்.
மன உளைச்சலால் மரணமடைந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நட ந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென நுழைவு வாயிலை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் சாலைமறியலில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
- உலக தண்ணீர் தினத்தை யொட்டி பூத்துறை ஊராட்சி மன்ற வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- வாழ்வாதார திட்டம், பொதுப்பொருட்கள் மற்றும் சேவை திட்டம் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.
புதுச்சேரி:
உலக தண்ணீர் தினத்தை யொட்டி பூத்துறை ஊராட்சி மன்ற வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கிராம சபை கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் பற்றி விவாதிக்கப்பட்டது. கடந்த 01.04.22 அன்று முதல் 28.02.23 வரை உள்ள காலத்தில் கிராம ஊராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொண்ட செலவின் அறிக்கை வாசிக்கப்பட்டது.
இந்த தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கத்தில் ஊராட்சி உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு, குடிசை இல்லா தமிழகம் என்னும் நோக்கத்தினை அடையும் வகையில் கிராமத்தில் வீடு கணக்கெடுக்கப்பட்டு தகுதி வாய்ந்த குடும்பங்களில் இறுதிப்பட்டியலை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.
சிறுதானிய உற்பத்தி மற்றும் அதன் நன்மை குறித்து விழிப்புணர்வு செய்வதோடு சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 மார்ச் 20 முதல் 25-ந் தேதி வரை ஊராட்சிகளில் சிறப்பாக கொண்டாடுதல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2022-2023-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் உரிமை திட்டம், வாழ்வாதார திட்டம், பொதுப்பொருட்கள் மற்றும் சேவை திட்டம் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.
பூத்துறை ஊராட்சி மன்ற தலைவர் சேகர் என்ற உதயகுமார் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆதிலட்சுமி கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர்கள் சூர்யாகுணசேகரன், ராதா பாலகிருஷ்ணன், ஆறுமுகம் மண்ணாங்கட்டி, சக்கரவர்த்தி, சமையாள்வெங்கடேசன், சுதாஅரசகுமார், குனபூசணி ஆறுமுகம் ஆகியோர் முன்னில வகித்தனர். இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வானூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மோகனா கலந்து கொண்டார்.
- புதுவை அருகே முத்திரையர்பாளையத்தில் உள்ள ஆயி குளத்தை புனரமைத்து புதுவையின் அடையாளத்தை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
- குளத்தை புனரமைத்து, சுற்றிலும் நடைபாதை அமைத்து விளக்குகள் அமைத்து அழகுபடுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-
ஆறுமுகம்(என்.ஆர்.காங்):- முத்திரைய ர்பாளையத்தில் உள்ள ஆயி குளத்தை புனரமைத்து புதுவையின் அடையாளத்தை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? முதல்-அமைச்சர் ரங்கசாமி:- அம்ருத் 2 திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
ஏ.கே.டி.ஆறுமுகம்:- முத்திரை யர்பாளையம் பகுதி மக்கள் ஆயி குளத்தை புனரமைக்க வேண்டும் என விரும்புகின்றனர். குளத்தை புனரமைத்து, சுற்றிலும் நடை பாதை அமைத்து விளக்குகள் அமைத்து அழகுபடுத்த வேண்டும். குளத்தின் நடுவே ஆயிக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி:- நீங்களே வரைபடம் தயாரித்து கொடுங்கள். ஆயி குளத்தை மேம்படுத்தும் பணியை செய்யலாம். தற்போது அங்கு தண்ணீர் அதிகமாக இருப்பதில்லை. சுற்றுலாத்துறையின் மூலம் பணிகளை செய்யலாம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- புதுவை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்கின்றார்.அதன் முடிவுகள் என்ன என்பதனை மாநில மக்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.
- உள்ளாட்சி நிர்வாகம் உள்ளாட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்கின்றார்.அதன் முடிவுகள் என்ன என்பதனை மாநில மக்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். அமைச்சரவை பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அரசு செயல்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் கோப்புகளை திருப்பி அனுப்புதல் கூடாது.
சட்டப்பேரவை செயலகத்தில் பணியில் உள்ள தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து வேறு துறைக்கு மாற்றுங்கள். சட்டப்பேரவை செயலகத்தில் எம்.எல்.ஏக்களின் அவசரப்பணிக்கு ஒரு தட்டச்சர் தனியாக நியமிக்க வேண்டும்.
உள்ளாட்சி நிர்வாகம் உள்ளாட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். கோவில் வரியினை முறையாக வசூலிக்க கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
புதுவை மாநிலத்தில் உள்ள 30 மருத்துவமனைகளின் தரத்தினை உயர்த்துங்கள்.புதிய வருவாய் கிராமங்களை உருவாக்க வேண்டும். உழவர்கரை தாலுக்கா வை இரண்டாகப் பிரித்து புதிய தாலுக்கா என்று உருவாக்க வேண்டும். வி.ஏ.ஓ.,வி.ஏ. பணியிடங்களை நிரப்ப வேண்டும் .
முகத்துவாரப் பகுதியில் தூர்வார கே.எஸ்.ஆர். என்ற நிறுவனம் பணி செய்தது. 7 லட்சம் கியூபிக் மீட்டர் மண் அள்ள ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டபடி மண் அள்ளவில்லை. அரசு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கடந்த 5 நிதியாண்டுகளில் பேரம் பேசி வாங்கியக் கடனில் 40% சதவிகிதம் தான் செலவு செய்யப்படுகிறது.
மத்திய அரசினுடைய கடனை தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை குழு மத்திய அரசினை நாட வேண்டும் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ரூ. 9 லட்சத்து 48 ஆயிரத்து 858 மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
- கிருஷ்ணமூர்த்தி, செந்தில், அமலா ஜெயசீலன், முருகவேல், பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை நகராட்சி மூலம் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட கொம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பாலமுருகன் நகருக்கு ரூ. 9 லட்சத்து 48 ஆயிரத்து 858 மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில், புதுவை நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலை பொறியாளர் ஞானசேகரன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், ஜலால் பாய், ஜெகன்மோகன், கந்தசாமி, ரமணன், அக்பர் பாய், சுப்பிரமணியன், வரதன், அருண், பரமசிவம், சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, செந்தில், அமலா ஜெயசீலன், முருகவேல், பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தமிழகத்தில் இதற்காக மத்திய அரசு நிதி அளிக்கிறது.
- சமுதாய கூடங்களை மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் நிர்வகிக்க ஏற்பாடு செய்யலாம்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-
புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தமிழகத்தில் இதற்காக மத்திய அரசு நிதி அளிக்கிறது. புதுவைக்கு ஏன் நிதி வழங்கவில்லை. மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
புதுவையின் ஒவ்வொரு பகுதியிலும் சமுதாய கூடம் உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் அதில் உள் கட்டமைப்பு வசதி இல்லை. சமுதாய கூடங்களை மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் நிர்வகிக்க ஏற்பாடு செய்யலாம். சமுதாய கூடத்தை தரம் உயர்த்தி திருமண மண்டபங்களாக மாற்றலாம்.
கிழக்கு கடற்கரை மீன் அங்காடியில் காலாப்பட்டு மீனவர்களுக்கு இடம் ஒதுக்கி தரப்படவில்லை. அவர்களுக்கு நவீன மீன் மார்க்கெட்டில் இடம் கொடுங்கள் இல்லையென்றால் புதிதாக ஒரு மார்க்கெட் கட்டி கொடுக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் கீழ் 3 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் பட்டா, பட்டா மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. சட்டமன்றத்தை தவிர வேறு அனைத்தையும் பதிவு செய்து தரும் நிலையில் பத்திரப்பதிவு துறை உள்ளது. பத்திரப்பதிவு துறையில் பணியில் உள்ளவர்களை சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும். ஆன்லைன் பட்டா மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கல்யாணசுந்தரம் பேசினார்.
- புதுவை அருகே அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராதாகண்ணன் காளி. இவர் மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஊழியர்.
- ராதாகண்ணன் காளிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராதாகண்ணன் காளி. இவர் மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஊழியர். இவரது மனைவி கோமதி (வயது60). இவர்களது சொந்த ஊர் சென்னை சுற்றுக்கேணியாகும். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
ராதாகண்ணன் காளிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் எதிர்வீட்டில் வசிக்கும் நபர் வெளியூருக்கு செல்லும் போது சாவியை கொடுத்து விட்டு செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று ராதாகண்ணன் காளி எதிர் வீட்டிலேயே தூங்க சென்றார். அப்ேபாது அளவுக்கு அதிகமாக மது குடித்த ராதாகண்ணன் காளி மின்விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி கோமதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- துறைமுகத்தை தனியாருக்கு தாரைவார்க்காமல் அரசே நிர்வகிக்கலாம். இதனால் புதுவைக்கு பலமடங்கு நிதி கிடைக்கும்.
- அரசு மருத்து வமனைகளை தனியார் மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார் பேசியதாவது:-
துறைமுகத்தை தனியாருக்கு தாரைவார்க்காமல் அரசே நிர்வகிக்கலாம். இதனால் புதுவைக்கு பலமடங்கு நிதி கிடைக்கும். இதற்காக சிறந்த வல்லுனர்களை பணியமர்த்த வேண்டும். புதுவைக்கு வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். அதிகாரிகள் கோப்புகளை தேக்கி வைக்க கூடாது.
அரசு மருத்து வமனைகளை தனியார் மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுகிறதா என்பதனை கண்காணிக்க வேண்டும்.
பிளாஸ்டிக்பாட்டில்களை மறு சுழற்சி செய்து ஆடைகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை புதுவையில் வந்து தொழில் தொடங்க அழைக்க வேண்டும். அரசுக்கு வருமானம் வரும்போது நாம் தனி மாநில அந்தஸ்து கேட்கலாம்.
இவ்வாறு ஜான்குமார் பேசினார்.
- பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை மத்திய அரசின் ஆணைக்கு மாறாக 2012-ம் ஆண்டு உதவியாளர்களுக்கான நியமன விதியை வெளியிட்டது.
- தேவையற்ற போட்டி தேர்வுக்கு தயார் செய்ய அலுவலர்கள் விடுப்பு எடுத்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை மத்திய அரசின் ஆணைக்கு மாறாக 2012-ம் ஆண்டு உதவியாளர்களுக்கான நியமன விதியை வெளியிட்டது. நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் அகில இந்திய அளவில் கோரப்பட்டுள்ளது. இதனால் புதுவை வாழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும்.
உதவியாளர் பதவி என்பது நிர்வாகத்தில் மிகவும் முக்கியமான பதவியாகும். எனவே அனுபவமிக்க ஆட்களை கொண்டே நிரப்பப்பட வேண்டும். தேவையற்ற போட்டி தேர்வுக்கு தயார் செய்ய அலுவலர்கள் விடுப்பு எடுத்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
எனவே 600 உதவியாளர் காலி பணியிடங்களை 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் உள்ள யூ.டி.சி.க்களை கொண்டு நிரப்பினால்தான் 800-க்கும் மேற்பட்ட எல்.டி.சி., யூ.டி.சி. பணியிடங்கள் காலியாகும்.
இதை படித்த பட்டதாரி இளைஞர்களை கொண்டு நேரடி நியமன தேர்வு நடத்தி நிரப்ப வாய்ப்புகள் உருவாகும். அரசும் சம்மந்தப்பட்ட துறையும் கவனத்தில் கொண்டு புதுவை மாநிலத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நேரு பேசினார்.
இதே கருத்தை வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியும் பேசினார்.
- சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- உகாதி திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்டு வரும் நாளாக அமைய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-
யுகாதி திருநாளை முன்னிட்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்த உகாதி திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்டு வரும் நாளாக அமைய வேண்டும்.
புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்த வளமான புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இந்த புத்தாண்டு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






