search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எம்.எல்.ஏ.க்களின் அவசரப்பணிக்குதட்டச்சர் நியமிக்க வேண்டும்-கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    எம்.எல்.ஏ.க்களின் அவசரப்பணிக்குதட்டச்சர் நியமிக்க வேண்டும்-கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கை

    • புதுவை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்கின்றார்.அதன் முடிவுகள் என்ன என்பதனை மாநில மக்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.
    • உள்ளாட்சி நிர்வாகம் உள்ளாட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்கின்றார்.அதன் முடிவுகள் என்ன என்பதனை மாநில மக்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். அமைச்சரவை பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அரசு செயல்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் கோப்புகளை திருப்பி அனுப்புதல் கூடாது.

    சட்டப்பேரவை செயலகத்தில் பணியில் உள்ள தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து வேறு துறைக்கு மாற்றுங்கள். சட்டப்பேரவை செயலகத்தில் எம்.எல்.ஏக்களின் அவசரப்பணிக்கு ஒரு தட்டச்சர் தனியாக நியமிக்க வேண்டும்.

    உள்ளாட்சி நிர்வாகம் உள்ளாட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். கோவில் வரியினை முறையாக வசூலிக்க கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    புதுவை மாநிலத்தில் உள்ள 30 மருத்துவமனைகளின் தரத்தினை உயர்த்துங்கள்.புதிய வருவாய் கிராமங்களை உருவாக்க வேண்டும். உழவர்கரை தாலுக்கா வை இரண்டாகப் பிரித்து புதிய தாலுக்கா என்று உருவாக்க வேண்டும். வி.ஏ.ஓ.,வி.ஏ. பணியிடங்களை நிரப்ப வேண்டும் .

    முகத்துவாரப் பகுதியில் தூர்வார கே.எஸ்.ஆர். என்ற நிறுவனம் பணி செய்தது. 7 லட்சம் கியூபிக் மீட்டர் மண் அள்ள ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டபடி மண் அள்ளவில்லை. அரசு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கடந்த 5 நிதியாண்டுகளில் பேரம் பேசி வாங்கியக் கடனில் 40% சதவிகிதம் தான் செலவு செய்யப்படுகிறது.

    மத்திய அரசினுடைய கடனை தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை குழு மத்திய அரசினை நாட வேண்டும் வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×