search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்- சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    ஏழை முஸ்லீம் பெண்களுக்கு எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.

    ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்- சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்

    • ஏழை முஸ்லீம்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • பெண்களுக்கு புடவை, காய்கறி மற்றும் ஆண்களுக்கு வேட்டி, சட்டை ஆகியவை வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி புதுவை தி.மு.க. சிறுபான்மையினரின் நலபிரிவு சார்பில் ஏழை முஸ்லீம்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 200 முஸ்லீம் பெண்களுக்கு புடவை, காய்கறி மற்றும் ஆண்களுக்கு வேட்டி, சட்டை, இனிப்புகளை தி.மு.க. பொதுகுழு உறுப்பினர் கோபால் முன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.

    நிகழ்ச்சியில், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ஆதி நாராயணன், பொரு ளாளர் சசிகுமார், சிறுபான்மை யினர் நலப்பிரிவு நிர்வாகி இஸ்மாயில் மற்றும் வர்த்தகர் பிரிவு ராதா என்கிற ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×