என் மலர்
புதுச்சேரி
- மோட்டார் சைக்கிள் சாவியை பறித்து வண்டி பெட்டியில் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர்.
- கருணாகரன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் கூடப்பாக்கம் தச்சு பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது50). இவர் கூடப்பாக்கம் மந்தைவெளியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் சம்பவத்தன்று கடையில் இருந்தபோது 19 வயது இளம்பெண் ஒருவர் வீடு வாடகைக்கு கேட்பது போல் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவருடன் வாட்ஸ்-அப்பில் சாட்டிங் செய்துள்ளார். அதன்பிறகு கருணாகரனிடம், ஒருநாள் உங்களுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதன்படி இருவரும் வில்லியனூர் கணுவாப்பேட்டை சுடுகாடு அருகே புதர் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றபோது, ஏற்கனவே இருட்டில் மறைந்திருந்த 3 வாலிபர்கள் திடீரென டார்ச் லைட் அடித்து எங்கும் ஓடக்கூடாது என மிரட்டி அந்த கோலத்திலேயே படம் எடுத்துள்ளனர்.
பிறகு அந்த பெண்ணின் பெயரை கூறி ஆடைகளை உடுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளனர். அப்போது தான் இவர்கள் திட்டம் போட்டு பணம் பறிக்க அழைத்து வந்தது கருணாகரனுக்கு தெரியவந்தது.
இதனிடையே அந்த கும்பல் கருணாகரனிடம் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உன் போட்டோவை இணைய தளத்தில் போட்டு விடுவோம். குடும்பத்திலும் காட்டி அவமானப்படுத்துவோம் என மிரட்டியுள்ளனர்.
மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் சாவியை பறித்து வண்டி பெட்டியில் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர். இன்னும் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டியதால் உடனே கருணாகரன் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.50ஆயிரத்தை ஜிபே மூலம் கொடுத்துள்ளார்.
ஆனாலும் மேலும் பணம் வேண்டும் என மிரட்டியதால் கருணாகரன் அவரது நண்பர் கடையில் இருந்து ரூ.30 ஆயிரத்தை வாங்கி கொடுத்தார்.
மொத்தமாக ரூ.1.25 லட்சத்தை வாங்கி கொண்டு, செல்போனில் எடுத்த புகைப்படங்களை அழித்து விட்டதாக கூறிவிட்டு அந்த வாலிபர்களும், இளம்பெண்ணும் சென்று விட்டனர்.
இதுகுறித்து கருணாகரன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வில்லியனூர் கணுவாய்பேட்டையை சேர்ந்த ராமு, பிரகாஷ், அருண்குமார் மற்றும் ராமு மனைவியின் தோழி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராமு, பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணுக்கு பணம் தேவைப்பட்டதால் ராமு மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து இத்திட்டத்தை போட்டதும், கருணாகரனை கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் அடையாளம் காட்டி இவரிடம் அதிக பணம் உள்ளது என்று கூறி சிக்க வைத்ததும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் ஏற்கனவே மங்கலம் பகுதியில் ஒருவரை ஓரினசேர்க்கைக்கு அழைத்து சென்று வீடியோ எடுத்து அவரை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ராமு, பிரகாஷ் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இளம்பெண், அருண்குமாரை தேடி வருகின்றனர்.
- இலவச லேப்-டாப் வழங்க கோரிக்கை
- போராட்டத்திற்கு மாணவர் சங்க பாகூர் இடைக்கமிட்டி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கி னார். செயலாளர் பாபு, சத்தியசீலன் முன்னிலை வகித்தார்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாகூர் தாசில்தார் அலுவலகத்தை மாண வர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் தரமற்ற மதிய உணவை வழங்கும் அக்ஷய பாத்ரா வுடன் உள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் வாரத்தில் 3 நாட்கள் முட்டையுடன் கூடிய தரமான மதிய உணவை அரசு வழங்க வேண்டும்.
காலாண்டு தேர்வு முடிந்தும் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் உடனடி யாக ஆசிரியர் பணியி டங்களை உடனே நிரப்ப வேண்டும். அறிவித்த இலவச லேப்-டாப்பை உடனே வழங்க வேண்டும்.
சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை அனைத்து பள்ளிகளும் உறுதிப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தகூடாது என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் பாகூர் பாரதி அரசு பள்ளி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து பேரணியாக சென்று தாசில்தார் அலுவ லகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்திற்கு மாணவர் சங்க பாகூர் இடைக்கமிட்டி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கி னார். செயலாளர் பாபு, சத்தியசீலன் முன்னிலை வகித்தார்.
இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் பிரவீன் குமார் கண்டன உரை ஆற்றினர்.
இதில் மாணவர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
- புதுவை அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டை அணுகி காலம் கடந்த மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலா ளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
சென்டாக் அதிகாரிகளின் அலட்சியத்தால் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கிறது. இதற்கு கவர்னர் தமிழிசை, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கம் போல் கூறியுள்ளார்.
புதுவை மாணவர்கள் நலனிலும், எதிர்காலத்திலும் உண்மையில் கவர்னருக்கு அக்கறை இருந்தால் உடனடி யாக டெல்லிக்கு சென்று பிரதமர், மத்திய மந்திரிகளை சந்தித்து மருத்துவ மாண வர்களின் சூழ்நிலையை விளக்கி தளர்வு பெற வேண்டும். அனுமதி கிடைக்காத நிலையில் புதுவை அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டை அணுகி காலம் கடந்த மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும்.
வரும் காலத்திலாவது சென்டாக் மாணவர் சேர்க்கை முறையாக நடை பெற அங்குள்ள அதிகாரி களை ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட வேண்டும்.
மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஊழல், முறைகேடுகளை களைய சென்டாக் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறிளியுள்ளார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் ஒரு இடத்தில் உரை கிணறு தென்பட்டது.
- மக்கள் குடிநீருக்காக இதுபோன்ற உரைநீர் கிணற்றை பயன்படுத்தி உள்ளதாகவும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் வெள்ளேரி உள்ளது.
இந்த வெள்ளேரி தொண்ட மாநத்தம், ராம நாதபுரம், பிள்ளையார் குப்பம் உள்ளிட்ட கிராமங்களையொட்டி அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியாகும்.
இந்த ஏரியில் வெள்ளை நிறத்தில் மணல்கள் இருப்ப தால் வெள்ளேரி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வெள்ளேரி ஆழப் படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் ஒரு இடத்தில் உரை கிணறு தென்பட்டது.
இதனை கண்ட தொண்ட மாநத்தம் பகுதி இளைஞர்கள் இதுகுறித்து காவல்துறை மூலம்
அகழ்வாராய்ச்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அகழ்வாராய்ச்சி பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுக்கள் கடந்த 2 நாட்களாக உரை கிணற்றை வெளியில் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று மூன்றடுக்கு கொண்ட உரை கிணற்றை வெளியே எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். இதேபோன்று 5உறை கிணறுகள் வெள்ளேரியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் மக்கள் குடிநீருக்காக இதுபோன்ற உறைநீர் கிணற்றை பயன்படுத்தி உள்ளதாகவும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- அமைச்சர் லட்சுமிநாராயணன் திறந்து வைத்தார்
- அரங்கு மாநாட்டில் புதுவை சுற்றுலா துறை சார்பில் புதுவை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது
புதுச்சேரி:
உலக சுற்றுலா பயனீட்டா ளர்கள் சந்தை படுத்துதல் மாநாடு சிங்கப்பூர் நாட்டில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடை பெறுகிறது.
புதுவை அரங்கு மாநாட்டில் புதுவை சுற்றுலா துறை சார்பில் புதுவை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.இதனை அமைச்சர் லட்சுமி நாராயணன் திறந்து வைத்தார்.
இதில் புதுவை சுற்றுலா துறையை சேர்ந்த சுப்ர மணியன், புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தை சேர்ந்த ஆஷா குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.
சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையர் டாக்டர் ஷில்பக் அம்புலே புதுவை அரங்கினை பார்வையிட்டு பாராட்டினார்.
- இந்நிறுவனத்துடன் எங்கள் துறையின் மாணவர்களின் வேலைவாய்ப்பிற்க்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம்.
- பேராசிரியை தமிழ்சுடர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.
விநாயகாமிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை, சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி , புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி வேலைவாய்ப்பு அமைப்பின் மூலம் துறை மாணவர்களின் வேலைவாய்ப்பிற்காக பல்க லைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் வழிக்காட்டுதலின் படி பெங்களூரு குவென்சு டெக்னோ வேலி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
இதுகுறித்து துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-
குவென்சு டெக்னோ வேலி நிறுவனமானது பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயலாற்றி வரும் முன்னனி மனிதவள ஆலோசனை மற்றும் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரும் அமைப்பாகும். இந்நிறுவனத்துடன் எங்கள் துறையின் மாணவர்களின் வேலைவாய்ப்பிற்க்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம்.
இதன் மூலம் இக்கல்லூரியில் பட்டயப்படிப்பை முடிக்க போகும் மாணவர்களுக்கு உலகளாவிய அளவில் பல்வேறு முன்னனி நிறுவனங்க ளில் வேலைவாய்ப்பு உறுதி யாக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஒப்பந்தத்தில் துறை யின் டீன் செந்தில்குமார் மற்றும் குவென்சு டெக்னோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாட்டினையும் துறையின் வேலைவாய்ப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை தமிழ்சுடர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
- சிறப்புக்கூறு நிதியை முறையாக செயல்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் பதவிநீக்கம் தொடர்பாக 2 வாரம் நிலவிய பதட்டமான சூழல் முடிவுக்கு வந்துள்ளது. இதன்பின் வேறு ஒரு அமைச்சரை முதல்-அமைச்சர் நியமிக்க வேண்டும்.
புதிய அமைச்சர் ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்றே அழைக்கப்பட வேண்டும். புதுவையில் 16 சதவீதம் உள்ள ஆதிதிராவிட மக்களின் நலனை மேம்படுத்த வேண்டும். சிறப்புக்கூறு நிதியை முறையாக செயல்படுத்த வேண்டும்.
சிறப்புக்கூறு திட்டத்துறை என தனி துறையை உருவாக்கி திட்டங்களை தயாரித்து நிதி ஒதுக்க வேண்டும். எனவே புதிதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை நியமித்து, சிறப்புக்கூறு திட்டத்துறையை அமைத்து திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பணியை தொடங்கி வைத்தார்
- முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகரன் செல்வி, மணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி தவளக்குப்பம் சடா நகர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20.16 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைப்படுகிறது. இப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி, தவளக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், விவசாய அணி சக்திபாலன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகரன் செல்வி, மணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
7ஆண்டுகளாக கரடு முரடான நிலையில் இருந்த சாலையை புதிய தார் சாலை அமைக்க ஏற்பாடு செய்து கொடுத்த சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திற்கு சடாநகர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
- அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை முறைப்படி செய்யாமல் தவறுக்கு வித்திட்டாலும், அது குற்றம் புரிந்ததற்கு சமமாகும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற் றோர் நலச்சங்க தலைவர் வை. பாலா புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்டாக் நிர்வாகம் சட்டத் தில் உள்ள ஓட்டைகளை வைத்து தனியார் மருத்துவ கல்லூரி யில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 4 முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களை நிரப்பாமல் உள்ளது.
மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலம் முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்கைக்கு கடைசி நாளாக அறி விக்க ப்பட்ட அக்.25-ந் தேதிக்குள் (இன்று) கலந்தாய்வினை நடத்தி மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே 3 கட்ட கலந் தாய்வு நடைபெற்ற நிலையில் 4-ம் கட்ட சிறப்பு கலந்தாய்வுக்கு மருத்துவ கலந்தாய்வு கமிட்டியிடம் அனுமதி பெற்று சென்டாக் நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண் டும். அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை முறைப்படி செய்யாமல் தவறுக்கு வித்திட்டாலும், அது குற்றம் புரிந்ததற்கு சமமாகும்.
எனவே, இன்றுக்குள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் காலியாக உள்ள 4 இடங்களை சென்டாக் இணையதள கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சம்மந்தமாக பல பேர் புகார் அளித்தும் சென்டாக் அதிகாரி கள் ஒருமையில் மாணவர்க ளையும், பெற்றோர் அமைப்புகளையும் பேசி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் விதிமீறல் நடந்துள்ளது என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித் துள்ளது. எனவே, தவறு செய்த அதிகா ரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் புதுவை அரசு ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில், புதுநகர், வார்க்கால் ஓடை பகுதியில் பகுதியில் முறையான வடிகால், பல்நோக்கு சமுதாய நலக்கூடம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
பாகூர் தொகுதிக்குட்பட்ட கன்னியக்கோவிலை அடுத்துள்ள புதுநகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு கழிவு நீர் வடிகால் வாய்க்கால், சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாகூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாகூர் தொகுதி துணைச் செயலாளர் தாயப்பன் தலைமை தாங்கினார். பாகூர் தொகுதி வட்டார காங்., தலைவர் கோபு, இந்திய மக்கள் பாதுகாப்பு சக்தி கழக தலைவர் அரிக்கி ருஷ்ணன், வார்க்கால்ஒடை முருகன், பழங்குடி விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், புதுநகர், வார்க்கால் ஓடை பகுதியில் பகுதியில் முறையான வடிகால், பல்நோக்கு சமுதாய நலக்கூடம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது சம்பந்தமாக புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், காங்கிரஸ் பிரமுகர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சட்டசபையில் சந்திர பிரியங்கா பயன்படுத்திய அறையில் இருந்து பொருட்கள் காலி செய்யப்பட்டது
- சந்திர பிரியங்காவின் அமைச்சர் பெயர் பலகை அகற்றப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் நெடுங்காடு தொகுதி என்.ஆர். காங்., எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா போக்குவரத்து அமைச்சர் பதவி வகித்து வந்த இவர், கடந்த 10-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பினார்.
ஆனால் கடந்த 8-ந் தேதியே சந்திர பிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசையிடம் கடிதம் அளித்தார். ஆனால் சந்திர பிரியங்கா நீக்கம் விவகாரத்தில் கடந்த 13 நாட்களாக இழுபறி ஏற்பட்டது. முடிவாக கடந்த 21-ந் தேதி சந்திர பிரியங்கா பதவி நீக்கம் செய்ய, ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார்.
அதையடுத்து, சட்டசபையில் சந்திர பிரியங்கா பயன்படுத்திய அறையில் இருந்து பொருட்கள் காலி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் சட்டசபை செயலர் தயாளன் அறையை பூட்டி சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினார்.
மேலும் சந்திர பிரியங்காவின் அமைச்சர் பெயர் பலகையும் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அந்த நோட்டீஸ் கிழித்து எறியப்பட்டு, முதலமைச்சரின் தனிச்செயலர் அமுதன் கையெழுத்திட்ட 'சீல் நோட்டீஸ்' அறை கதவில் ஒட்டப்பட்டது.
சட்டசபை வளாகம் சட்டசபை செயலர் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அமைச்சர்களின் அலுவல்கள் மற்றும் அறை ஒதுக்கீடு உள்ளிட்ட அதிகாரங்கள் முதலமைச்சரின் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனால் சந்திர பிரியங்கா அறைக்கு சீல் வைக்கும் அதிகாரம் முதலமைச்சர் அலுவலகத்திற்கே உள்ளது என நிரூபிக்கும் வகையில், 2-வது முறையாக சீல் வைத்து, சந்திர பிரியங்கா அறை பூட்டப்பட்டது.
- காரைக்கால் பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதனைக்கண்ட ரோந்துப்போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் நகர ரோந்துப்போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய ெரயில் நிலையம் அருகே உள்ள காட்டுநாயக்கன் தெரு சந்திப்பில், 3 பேர், பொது மக்களின் அமைதிக்கு இடையூறாக, பொது இடத்தில் சத்தம் போட்டு மது அருந்திகொண்டிருந்தனர். இதனைக்கண்ட ரோந்துப்போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் புதுச்சேரி நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பைச்சேர்ந்த ஜோதிமணி (வயது 35), அவரது நண்பர் தஞ்சாவூர் ஒரத்தநாடு கண்டபிள்ளைத் தெருவைச்சேர்ந்த ஜான்பாஸ்கோ (36), காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கீழசுப்புராய புரத்தைச்சேர்ந்த அருளானந்தமேனன் (30) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






