என் மலர்
புதுச்சேரி

தார்சாலை பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.
ரூ.20 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்காலுடன் தார்சாலை வசதி
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பணியை தொடங்கி வைத்தார்
- முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகரன் செல்வி, மணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி தவளக்குப்பம் சடா நகர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20.16 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைப்படுகிறது. இப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி, தவளக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், விவசாய அணி சக்திபாலன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகரன் செல்வி, மணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
7ஆண்டுகளாக கரடு முரடான நிலையில் இருந்த சாலையை புதிய தார் சாலை அமைக்க ஏற்பாடு செய்து கொடுத்த சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திற்கு சடாநகர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.






