search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    2500 ஆண்டுகளுக்கு முந்தைய  5உறை கிணறு கண்டுபிடிப்பு
    X

    வெள்ளேரியில் கண்டு பிடிக்கப்பட்ட உரை கிணறு.


    2500 ஆண்டுகளுக்கு முந்தைய 5உறை கிணறு கண்டுபிடிப்பு

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் ஒரு இடத்தில் உரை கிணறு தென்பட்டது.
    • மக்கள் குடிநீருக்காக இதுபோன்ற உரைநீர் கிணற்றை பயன்படுத்தி உள்ளதாகவும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் வெள்ளேரி உள்ளது.

    இந்த வெள்ளேரி தொண்ட மாநத்தம், ராம நாதபுரம், பிள்ளையார் குப்பம் உள்ளிட்ட கிராமங்களையொட்டி அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியாகும்.

    இந்த ஏரியில் வெள்ளை நிறத்தில் மணல்கள் இருப்ப தால் வெள்ளேரி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வெள்ளேரி ஆழப் படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் ஒரு இடத்தில் உரை கிணறு தென்பட்டது.

    இதனை கண்ட தொண்ட மாநத்தம் பகுதி இளைஞர்கள் இதுகுறித்து காவல்துறை மூலம்

    அகழ்வாராய்ச்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அகழ்வாராய்ச்சி பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுக்கள் கடந்த 2 நாட்களாக உரை கிணற்றை வெளியில் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்று மூன்றடுக்கு கொண்ட உரை கிணற்றை வெளியே எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். இதேபோன்று 5உறை கிணறுகள் வெள்ளேரியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் மக்கள் குடிநீருக்காக இதுபோன்ற உறைநீர் கிணற்றை பயன்படுத்தி உள்ளதாகவும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


    Next Story
    ×