என் மலர்
செய்திகள்

மோடியை வீழ்த்த எந்தவித பயமுமின்றி விவசாயிகள், இளைஞர்கள் முன்வரவேண்டும் - ராகுல் காந்தி
பிரதமர் மோடியை வீழ்த்த எந்தவித பயமுமின்றி விவசாயிகளும், இளைஞர்களும் முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியின் ஆட்சியை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது முன்னால் வந்து ஆடுவது சிரமமாக இருக்கும். ஆனால், நாம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை வீழ்த்துவதற்கு களத்தில் முன்னால் வந்து ஆடி சிக்சர் அடிக்க வேண்டும்.

விவசாயிகளும், இளைஞர்களும் எந்தவித பயமுமின்றி முன்வர வேண்டும். களத்தில் அவர்கள் முன்னால் வந்து ஆடவேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதமர் மோடி தடுப்பு ஆட்டத்தை மட்டுமே ஆடி வந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மூன்று மாநில சட்டசபை தேர்தல்களில் விவசாயிகள் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இதன்மூலம் உலகுக்கு நமது பலத்தையும் வெளிப்படுத்தி உள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்யாததை, நாங்கள் ஆட்சிக்கு வந்த 2 தினங்களில் செய்துகாட்டி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers
Next Story