என் மலர்
கதம்பம்
- உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு மட்டும் வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது.
- முன்னோர்கள் அருளிய யோக பயிற்சிகளை செய்யுங்கள், வீட்டு வேலைகளை இயந்திர துணையின்றி செய்யுங்கள்.
பசி..
உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா? தெரியாதல்லவா? பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்?
யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.
பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாமல் வரும்போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும்? எனவே பசித்த பின்னர் புசிக்க வேண்டும்
தாகம்..
அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. ஏசியில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
எனவே தாகம் எடுக்கும்போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
உடல் உழைப்பு..
ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.
இதற்கு நீங்கள் முன்னோர்கள் அருளிய யோக பயிற்சிகளை செய்யுங்கள், வீட்டு வேலைகளை இயந்திரத்துணையின்றி செய்யுங்கள்.
யாருக்கு தூக்கம் வரும்.?
உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு மட்டும் வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்கக்கூடாது.
ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம். இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
பகலில் உறங்கி சமன் செய்து விடலாம் என நினைக்காதீர்கள். இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9 மணி. இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான நோய்கள் வரும்.
ஓய்வு..
உடல் கேட்கும்போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.
மன நிம்மதி..
ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.
மனம் நிம்மதியாக இருக்க விருப்பத்துடன் வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.
எண்ணம், சொல், செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று நினையுங்கள்.
இவ்வாறு மனதையும் நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்தால் ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கியத்தை அடைந்துவிடலாம்.
-ஆதவன்
- ஆற்றில் பிணங்களை வீசினால், ஆறு கெடும். அதன் நீர் நாறும்.
- ஆயிரக்கணக்கான பிணங்களையும் உள்வாங்கிக் கொண்டு கெட்டு நாறாமல் இருக்கிறது கங்கை!
கங்கை நதி பாயும் அதே மலையிலிருந்து பிறந்து பாயும் வேறு ஆற்று நீருக்கு கங்கையின் தனிச் சிறப்பு இல்லை! அதே மலை. அதே மேகங்கள். அதே மழை. அதே பனி உருகல். என்றாலும் கங்கையின் நீர் வேறாக இருக்கிறது. ஏன் என்பதைக் கண்டுபிடித்து நிரூபிக்க முடியவில்லை - சில விஷயங்கள் நிரூபிக்க முடியாதவைதாம். கங்கையில் ஓர் ரசவாதம் ஏற்படுகிறது. நான் சொல்லி வருவதில் பல விஷயங்களை நிரூபிப்பது கடினம்.
கங்கை சாதாரண நதி அன்று. அந்த நதி முழுவதுமே ஓர் ரசாயனச் சாலை. அதனால்தான் கங்கைக் கரையில் அத்தனை புண்ணியத் தலங்கள். கங்கை நதி நீர் முற்றிலும் வேறுபட்டது என்பதை ரசவாதிகளும் விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
மற்ற நதி நீரைச் சேமித்து வைத்தால் கெட்டுவிடும்; கங்கை நீர் கெடாது! பல ஆண்டுகள் வைத்திருந்தாலும் கெடாது. ஆனால், மற்ற ஆற்று நீர் சில வாரங்களிலேயே நாறிவிடும்.
ஆற்றில் பிணங்களை வீசினால், ஆறு கெடும். அதன் நீர் நாறும். ஆனால் ஆயிரக்கணக்கான பிணங்களையும் உள்வாங்கிக் கொண்டு கெட்டு நாறாமல் இருக்கிறது கங்கை! இன்னொரு வியப்பான அம்சம். சாதாரணமாக எலும்பு, தண்ணீரில் கரையாது. ஆனால் கங்கை நீரில் கரைந்து விடுகிறது. மிச்சம் மீதியே இருப்பதில்லை! தனக்குள் போடப்படும் எல்லாவற்றையும் கரைத்து, அதன் ஆதிமூல, மூலக நிலைக்குக் கொண்டுவந்து விடுகிறது. சவங்கள் எந்த முறையிலும் பூரணமாக அழிய பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், கங்கையில் விரைவில் கரைந்து விடுகின்றன. அப்படியொரு ரசவாதம். கங்கை இதற்காகவே படைக்கப்பட்டது போலத் தோன்றுகிறது.
மற்ற ஆறுகள் பாய்வது போல், கங்கை மலையிலிருந்து பாய்வதில்லை. அது பாயும்படியாகச் செய்யப்பட்டுள்ளது. இதைப் புரிந்து கொள்வது எளிதல்ல.
கங்கையின் பிறப்பிடம் 'கங்கோத்ரி' என்ற மிகச் சிறிய சுனை. ஆனால், உண்மையான பிறப்பிடம் அதுவன்று! அது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது! இப்போதுள்ள இடம் வெறும் வெளிமுகப்பு மட்டுமே. மக்கள் இதைத்தான் சென்று கண்டு வழிபட்டுத் திரும்புகிறார்கள். உண்மையான கங்கைப் பிறப்பிடம் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது!
சாதாரண முறையில் அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை. சூட்சும சரீரம் கொண்டே அங்கே செல்ல முடியும். நமது பருவுடல் கொண்டு பயணம் செய்ய முடியாது.
கங்கையில் நீராடியவுடனே உடலில் உள்ள நீர் மாற்றம் அடைகிறது. ஆனால், அந்த மாற்றம் சற்று நேரம்தான் நீடிக்கும். சரியான முறைப்படி சோதனை செய்தால் ஆன்ம பயணம் ஆரம்பமாகிவிடும். கங்கையில் நீராடிய பின், கோவிலுக்குச் சென்று, வந்தனை வழிபாடுகள் செய்வதெல்லாம், அகத்தின் ஆன்மப் பயணத்திற்குப் புறத்தில் உள்ளவற்றைப் பயன்படுத்திக் கொள்வதுதான்.
-ஓஷோ
- ஆடி மாதம் சிறுதானியக் கூழும் வெங்காயமும் வேப்பிலையுடன் கொண்டாடுவோம்.
- தீபாவளிக்கு எண்ணெய் பலகாரங்கள் வைத்து வழிபடுவோம்.
* சித்திரை தொடக்கத்தில் கனிகள் வைத்து வழிபடுவோம். காரணம், வேனிற்காலத்திற்கு உடலுக்கு நீர்ச்சத்தும் வைட்டமீன்களும் தேவை.
* ஆடி மாதம் சிறுதானியக் கூழும் வெங்காயமும் வேப்பிலையுடன் கொண்டாடுவோம். காரணம், காற்றின் வழி பரவும் நோய்களிலிருந்து காத்துக்கொள்ள இரும்புச்சத்தும், கிருமிநாசினியும் தேவை.
* தீபாவளிக்கு எண்ணெய் பலகாரங்கள் வைத்து வழிபடுவோம். காரணம், அடுத்து வரும் குளிர்காலங்களைத் தாங்க உடலுக்கு கொழுப்புச்சத்து தேவைப்படுவதால்.
* தை மாதம் பொங்கலும் கரும்பும் படைத்து வணங்குவோம். காரணம், குளிர்காலம் முடிந்து வேனிலை எதிர்நோக்கியிருப்பதால் உடலுக்குச் சர்க்கரைத் தேவைப்படும்.
இந்த வாழ்க்கை முறை தான் தமிழம். இந்த வழிபாட்டினைச் சிறப்பாகச் செய்யும் தமிழ்க் கலாச்சார மதமே தமிழம்.
-இளவல் இளம்பரிதி
- பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்.
- எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்.
அசுத்தமான குடிநீர், உணவு, சுற்றுச்சூழல் மட்டுமல்ல கெட்ட குணங்களால் கூட நமக்கு நோய்கள் வரும்.
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...
பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்.
கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்.
துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்.
பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்.
எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்.
அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
மருந்தைக் குறிக்கும் மெடிசன் என்ற வார்த்தையும் தியானத்தைக் குறிக்கும் மெடிடேஷன் என்கிற வார்த்தையும் ஒரே மூலத்தில் இருந்து உருவானவை.
மருந்து உடல் நோயை போக்கும். தியானம் உளநோயை போக்குவதுடன் உடல் நோயையும் கட்டுப்படுத்தும்.
ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும்.
எனவே கவலைகளை விட்டொழியுங்கள்...
மகிழ்ச்சியாய் இருங்கள்...
அமைதியாய் இருங்கள்..
ஆனந்தம் என்றும் நிலைத்திருக்கும்.
-கோ. வசந்தராஜ்
- நெய்யில், சற்று கூடுதலாக விட்டமின் ஏ இருப்பதால், தோலுக்கும், கண்ணுக்கும் நல்லது.
- பிற மாமிச கொழுப்புகளை விட, நெய் செல்களினூடே எளிதில் ஊடுருவும் என்பதால் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
நெய் என்பது கொழுப்பு மற்றும் எண்ணெய் வகையில் வருவதால், உடலுக்கு ஆற்றல் தந்து, கூடுதலாக இருப்பின் திசுக்களில் சேமித்து வைக்கப்படுகிறது.
20 கிராம் கொழுப்பு ஒரு நாளைக்கு உண்ணவேண்டும் என்ற நிலையில் அது, நெய், வெண்ணெய், இறைச்சி, மீன், எண்ணெய் வித்துக்கள் என்று எதிலிருந்து வேண்டுமானாலும் பெறப்படலாம்.
நிர்ணயித்த அளவில் எடுத்துக் கொள்ளப்படும்போது, உடல் எடை சரியாகவே இருக்கும். அதிக அளவில் எடுத்துக் கொண்டு, உடல் உழைப்பும் இல்லாத நிலையில் சேமிக்கப்பட்டு, எடை கூடும். இதில் உடலில் உள்ள நோய்களின் தன்மையும் கவனிக்கத் தகுந்தது.
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஏ, ஈ, டி, கே போன்றவை கரைவதற்கு, கொழுப்புத் தேவை என்பதால், இதய நோய் உள்ளவர்களுக்கு கூட குறைந்த பட்சம் 15 கிராமாவது பரிந்துரைக்கப்படுகிறது. அது தாவர கொழுப்பாக/எண்ணெயாக இருப்பதும் நல்லது.
நெய்யில், சற்று கூடுதலாக விட்டமின் ஏ இருப்பதால், தோலுக்கும், கண்ணுக்கும் நல்லது. பிற மாமிச கொழுப்புகளை விட, செல்களினூடே எளிதில் ஊடுருவும் என்பதால் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இது சுத்தமான பசு நெய்க்கு மட்டுமே பொருந்தும்.
பசும் பாலில் இருந்து எடுக்கும் வெண்ணெயில் தயாரித்த நெய்யை தினமும் ஒரு தேககரண்டியளவு பருப்புடனோ, தோசையுடனோ, குழம்புட னோ எடுத்துக் கொள்வதில் தவறில்லை. அதனுடன் கூடுதலான அசைவம் அல்லது தாவர எண்ணெய்/ வித்துக்கள் உடலுக்குப் போகிறதா, உடலுழைப்பே இல்லாமல் இருக்கிறீர்களா என்பதிலேயே, உடலில் கொழுப்பு சேர்வதை கணக்கிட முடியும்.
ஆக, நெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் குறையும் என்பதை குறிப்பிட்டுக் கூற முடியாது. சரியான அளவில் எடுத்துக் கொள்ளும்போது, அதன் ஆற்றலுடன் சத்துக்களை மட்டுமே உடலுக்கு கொடுக்கிறது. சுத்தமான பசுநெய் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதே.
-முனைவர். ப. வண்டார் குழலி
- “நரகத்தின் பாதைகள் நல்லெண்ணத்தால் நிரம்பியவை” என ஒரு பழமொழி உண்டு.
- தன் நல்ல எண்ணம் பெரிய தீமைகளுக்கு வழிவகுக்கும் என பால் கஃபி நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார்.
1747...
தன்னிடம் இருந்த கருப்பின அடிமை ஒருவரை விடுவிக்கிறார் ஒரு அமெரிக்கர். அவர் பூர்வகுடி பெண் ஒருவரை மணக்கிறார். இருவருக்கும் பால் கஃபி எனும் ஒரு மகன் பிறக்கிறான். அடிமை முறையும், இனவெறியும் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில் அவரது தந்தை தன் மனைவியின் பூர்வகுடி நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார். பெரும் பணக்காரர் ஆகிறார்.
பால் கஃபி அடிமையாக இருக்கும் கருப்பின மக்களை காப்பற்ற ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறார். காசு கொடுத்து அடிமைகளை விலைக்கு வாங்குகிறார். அவர்களை ஒரு கப்பலில் ஏற்றி ஆப்பிரிக்காவுக்கு அனுப்புகிறார். அங்கே சென்ற கப்பலின் கேப்டன் மேற்கு ஆப்பிரிக்காவில் மலிவாக இடம் வாங்கி, வீடுகளை கட்டி அவர்களை அங்கே குடியேற்றுகிறார். லைபிரியா என அதற்கு பெயர் இடப்படுகிறது.
அதன்பின் அடிமை முறையை ஒழிக்க நினைத்த பல பெரும்பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து இந்த புராஜக்டில் ஈடுபடுகிறார்கள். அடுத்த சில பத்தாண்டுகளில் 1848 வரை பல அடிமைகள் விலைக்கு வாங்கபட்டு லைபிரியாவுக்கு கொண்டு செல்லபடுகிறார்கள்.
1848ல் லைபிரியாவுக்கு தனிநாடு அந்தஸ்து கிடைக்கிறது. விடுதலை பெற்ற முன்னாள் அடிமை ஒருவர் அதிபர் ஆகிறார்.
அமெரிக்க அரசியல் சட்டத்தை அப்படியே காப்பி அடித்து லைபிரிய சட்டம் எழுதபடுகிறது. அங்கேயும் ஒரு வெள்ளை மாளிகை, அமெரிக்க பாராளுமன்றம், ஜனாதிபதி மாதிரி அமைப்புமுறை. அதன்பின் வசந்தம் பூத்துகுலுங்கியதா? அடிமைகள் வாழ்வு சிறந்ததா?
அங்கே நிலம் வாங்கபட்டாலும் அங்கே பூர்வகுடி ஆப்பிரிக்கர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தார்கள். விடுதலை பெற்ற கருப்பர்கள் தம்மை லைபிரியர்கள் என அழைத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியும், அமெரிக்க நாகரீகத்தில் ஊறி இருந்தார்கள்.
அவர்கள் செய்த முதல்வேலை பூர்வகுடிகளுக்கு ஓட்டுரிமை இல்லை என்றதும், பூர்வகுடிகள் லைபிரியர்களை மணக்க தடை விதித்து சட்டம் இயற்றியதும்தான்.
தென்னாப்பிரிக்காவில் இருந்தது போல அபார்தீட் முறையை அறிமுகப்படுத்தினார்கள். லைபிரியர்களுக்கு தனி குடியிருப்பு, பூர்வகுடிகள் உள்ளே நுழையகூடாது. வேலைவாய்ப்புகள் மறுப்பு. தனி, தனி பள்ளிக்கூடங்கள், சர்ச்சுகள். அடுத்த 120 ஆண்டுகளுக்கு அமெரிக்க-லைபிரியர்கள் தான் தொடர்ந்து அதிபர்களாக இருந்தார்கள்.
1980 வாக்கில் மிகப்பெரிய பூர்வகுடி புரட்சி நடந்தது. அன்றைய ஜனாதிபதியும், மந்திரிகளும், எம்பிக்களும் ஒட்டுமொத்தமாக பூர்வகுடிகளால் கொல்லப்பட்டார்கள். அடுத்த 23 ஆண்டுகள் தொடர்ச்சியான உள்நட்டுபோர். பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். 2003ம் ஆண்டுதான் ஒருவழியாக பிரச்சனைகள் ஓய்ந்து அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
"நரகத்தின் பாதைகள் நல்லெண்ணத்தால் நிரம்பியவை" என ஒரு பழமொழி உண்டு. தன் நல்ல எண்ணம் இத்தனை பெரிய தீமைகளுக்கு வழிவகுக்கும் என பால் கஃபி நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார்.
- நியாண்டர் செல்வன்
- மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க என்கிறார் ஜீவா.
- மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே ஜீவா..
மதுரையில் கட்சிக்கூட்டத்தில் பேசிவிட்டு அதிகாலையில் கோயம்புத்தூர் வருகிறார் ஜீவா.
அவரை அழைத்துச் செல்வதற்கு வரவேண்டிய தோழர்கள் இன்னும் வரவில்லை.
புகைவண்டி நிலையத்தின் இருக்கையில் படுத்துத் தூங்கிவிடுகிறார்.
தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள்.
பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம் என்கிறார் ஜீவா.
இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே என்கிறார்கள் தோழர்கள்.
சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல.
தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டுவந்த மூட்டையை எடுத்துக்கொண்டு ஜீவா கிளம்புகிறார்.
கொடுங்க தோழர், அதை நான் கொண்டாரேன் என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர். அப்போதுதான் அது நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டையென்பது தோழருக்குத் தெரிகிறது.
இது என்னங்க ஜீவா..
மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க என்கிறார் ஜீவா.
மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே ஜீவா..
அதெப்படி தோழர், கட்சிக்குக் கொடுத்த நன்கொடைல நான் இட்லி வாங்கித் திங்க முடியும், அது தப்பில்லையா? என்றார் ஜீவா.
இப்படி ஒரு தலைவரை இனி பார்க்க முடியுமா?
- செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.
- போர்க்களத்தில் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம்.
"ஒரு புலவர் காளமேகத்திடம் கேட்டார்.
ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?"
"முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?" என்றார் காளமேகம்.
"வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்" என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.
என்ன கொடுமை? இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா? அதைத் தகும் என்றும் முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேகம்.
செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல்
வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே
செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும். அப்படி போர்க்களத்தில் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.
விளக்குமாறு என்பதற்கு விளக்கம் சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.
-ஆதவன்
- “அது ஒரு கலை.... ஒருத்தருடைய முகத்தைப் பார்த்தே அவரோட குணாதிசயத்தைக் கண்டுபிடிக்கிறது!”
- ஒருத்தருடைய மூக்கு, வாய், தாடை, கன்னம், கண்கள், நெற்றி, காது – இதுகளோட வடிவமைப்பைப் பார்தே அவர் கோபக்காரரா... அமைதியானவரா...
"ஏங்க... காலங்காத்தாலே முகத்தை உம்முன்னு ஒரு மாதிரியா வச்சிக்கிட்டு உக்காந்திருக்கிங்க...?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லையே...!"
"உங்ககூட இருபது வருஷமா குடும்பம் நடத்தறேன்...இதுகூடத் தெரியாதா எனக்கு? என்ன விஷயம் சொல்லுங்க!"
" அது... அது... வந்து...!"
" என்னோட பெட்டியிலேயிருந்து இருபது ரூபா பணம் எடுத்துட்டீங்க... அதானே...?"
"ஹி...! ஹி...!"
"Phrenology தெரியுமா உங்களுக்கு?"
"என்னது...?"
"அது ஒரு கலை.... ஒருத்தருடைய முகத்தைப் பார்த்தே அவரோட குணாதிசயத்தைக் கண்டுபிடிக்கிறது!"
"அது எப்படி..?"
" ஒருத்தருடைய மூக்கு, வாய், தாடை, கன்னம், கண்கள், நெற்றி, காது – இதுகளோட வடிவமைப்பைப் பார்தே அவர் கோபக்காரரா... அமைதியானவரா... அன்புள்ளம் கொண்டவரா... சந்தேகப்பிராணியா... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறவரா... இரக்கமுள்ளவரா... புகழ்ச்சியை விரும்புகிறவரா... சேவை மனப்பான்மை உள்ளாவரா... இது மாதிரி பல குணங்களைக் கண்டுபிடிக்கிற கலை இது!"
"உனக்கு தெரியுமா அது?"
"இப்பத்தான் பழகிக்கிட்டிருக்கேன்... ஓரளவுக்கு சரியா யூகிச்சுடுவேன்!"
"நீ இப்படி சொல்றதைக் கேக்கறப்போ என் மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?"
ஆனா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு... இந்த கலை எனக்கு 1975ஆம் வருஷம் நவம்பர் மாசம் 13ஆம் தேதி தெரியாமப் போச்சேன்னு நினைக்கிறப்போ எனக்கு எவ்வளவு கவலையா இருக்குத் தெரியுமா?"
"அன்றைக்கு என்ன விசேஷம்?"
"அன்றைக்குத்தான் உங்க முகத்தை நான் முதல் தடவையா பார்த்தேன்!"
- தென்கச்சி கோ.சுவாமிநாதன்
- தமிழரின் வாழ்வில் தவிர்க்க முடியாத படையல் பொங்கல்...
- மானுட வாழ்வின் மகத்தான படையல் பெண்கள்....!
பானைக்குள் மட்டுமே
பொங்கலின் ராஜ்யம்
பூமிப் பானை முழுவதுமே
பெண்களின் சாம்ராஜ்யம்...!
அறுவடை தந்த புத்தரிசி
பொங்கலுக்கு அடையாளம்
அறிவார்ந்த பெண்ணரசி
அகிலத்தின் அடையாளம்...!
பக்குவமாகக்
கையாளத் தெரிந்தால்தான்
பொங்கலுக்கு மகிமை
யாரையும் பக்குவமாகக்
கையாளத் தெரிந்தால்தான்
பெண்களுக்கு பெருமை....!
தமிழரின் வாழ்வில்
தவிர்க்க முடியாத
படையல் பொங்கல்
மானுட வாழ்வின்
மகத்தான படையல் பெண்கள்....!
அடுப்பின் திரிகளில்
பூத்தால் பொங்கல்
அன்பின் திரிகளில்
பூப்பது பெண்கள்....!
ஏழை வீட்டின்
ஒரு நாளைய
இனிப்பு - பொங்கல்
பிரபஞ்ச வீட்டின்
பிரியமான இனிப்பு
பெண்கள்...!
அடிப்பாகம் மட்டுமே
கரும்பு இனிக்கும்
அடுக்களை தாண்டியும்
பெண்களின்
அன்பு இனிக்கும்....!
சேர்மானங்கள்
பொங்கலை -
ருசியாக்கும்
சிறந்த குணங்களே
பெண்களை -
உயர்வாக்கும்...!
மஞ்சள் இஞ்சியுடன்
பொங்கல் களை கட்டும்
மங்கலப் பெண்களின்
மதிமுகம் கண்டால்
விடியும்
திசை எட்டும்...!
-அழ.இரஜினிகாந்தன்
- மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு.
- அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு.
போகி பண்டிகை என்றால் பழையனவற்றை கழித்தல் என்று நினைத்து பலரும் தங்கள் வீடுகளில் உள்ள பழையப் பொருட்களை வீதியில் போட்டு தீயிட்டுக் கொளுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் போகியின் உண்மையான நோக்கம் வேறு. அதுபற்றி பார்ப்போம்...
ஆடி மாதத்தில் தேடி விதைத்தும் நடவு செய்தும் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து, அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைப்பதுதான் மரபாக இருந்திருக்கிறது.
வேளாண்மை உற்பத்திக்கும் உழவருக்கும் உறுதுணையாய் இருந்தவை மழையும் மாடுகளும்தான். அவ்வகையில், உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் தளுகையானது மழைக்கும் மாடுகளுக்கும்தான் முதன்மையாகப் படைக்கப்படுகிறது.
மழையைத் தெய்வமெனத் தொழுத பிறகே பொங்கலிட்டுத் தளுகை படைத்து மகிழ்ந்திருக்கின்றனர் உழவு மரபினர். அத்தகைய மழைத் தெய்வமே போகி என்பதாகும்.
மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு. அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு.
போகம் விளைவதற்கான அடிப்படை வித்தாக இருப்பது மழைதான். அதனால்தான், போகம் விளைவிக்கும் மழைத் தெய்வத்தைப் போகி என்னும் சொல்லாலும் அடையாளப்படுத்தியுள்ளனர். அதாவது, போகத்தைத் தருவதால் போகி என மழையைக் குறித்துள்ளனர்.
வேளாண்மை விளைச்சல் தரும் மழைத் தெய்வமான போகியை- இந்திரனை அறுவடைக் காலத்திலும் மறவாது நினைவு கூர்ந்து வழிபடும் சடங்கியல் மரபாகப் போகிக்குக் காப்புக் கட்டுகின்றனர். அவ்வகையில், காப்புக் கட்டுதல் எனும் வளமைச் சடங்கு, போகி என்னும் இந்திர மழைத் தெய்வத்தை வணங்கிடும் நோக்கத்தையே புலப்படுத்துகிறது.
கன்னிப் பிள்ளை, கண்ணுப் பூளை, கூழைப்பூ, கூரைப்பூ எனப்படும் புல்செடியானது, பூக்கும்போது புல் தண்டில் வெண்ணிறத்திலான மழைத் துளிகள் கோத்தது போலவும் வழிவது போலவுமான தோற்றத்தைக் கொண்டதாகும். மழைக் காலத்தில் மட்டுமே தளைக்கும் இம்மழைப்பூவைத்தான் பொங்கல் காப்புக் கட்டுக்கான பூவாகக் கருதி இருக்கின்றனர் முன்னோர்.
எத்தனையோ பூக்கள் இருக்கையில், இந்தப் பூவை மட்டும் காப்புக் கட்டுதலில் முதன்மைப் பூவாகக் கருதியதன் பின்புலமும் குறியீட்டுத் தன்மை வாய்ந்ததாகும். ஆயிரம் கண்ணுடையான் என்னும் இந்திரனைக் குறிக்கும் அடையாளத்துடன் இருக்கும் இந்தப் பூதான், கண் + பூ + இலை = கண்ணுப் பூவிலை - கண்ணுப் பூளை என்றாகியிருக்கிறது.
ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனை - போகியைக் குறியீடாகக் குறிக்கும் நோக்கத்தில்தான் பொங்கல் காப்புக் கட்டுதலில் கண்ணுப் பூவிலை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பூவுடன் மாவிலை, ஆவாரம், வேப்பிலை, தும்பை போன்றவையும் சேர்த்து வீடுகளின் முகப்புகளிலும், காடு கழனிகளின் சனி மூலைகளிலும், கண்மாய், குளத்தங்கரை அய்யனார் கோவில்களிலும், குல சாமிகளாக வழிபடப்படும் முன்னோர் நடுகற்கள் அல்லது கோயில்களிலும் காப்புக் கட்டுவது வளமைச் சடங்கின் அங்கமாகவே இன்னும் இருந்து வருகிறது.
பெரும்பாலும், போகி நாளின் மாலையிலும், தை நாள் பொழுது விடிவதற்கு முந்திய வைகறைப் பொழுதிலும் காப்புக் கட்டி விடுதல் மரபாகும். இத்தகைய மழைக் காப்புக் கட்டுதல் போகி என்னும் இந்திரனை - மழைத் தெய்வத்தை வணங்கியும் நினைவு கூர்ந்தும் நன்றிப் பெருக்கைக் காட்டியும் பொங்கல் சார்ந்த வளமைச் சடங்குகளை உழவு மரபினர் நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.
மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...
- வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம்.
- குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்...
தாய் ....இருந்தால் துன்பம் இல்லை.
தந்தை...இருந்தால் தவிப்பு இல்லை.
தங்கை... இருந்தால் தனிமை இல்லை.
தாத்தா... இருந்தால் தயக்கம் இல்லை.
பாட்டி.... இருந்தால் பயம் இல்லை.
அக்கா....இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.
அண்ணன்....இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.
தம்பி... இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.
மனைவி...இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.
மகள்.... இருந்தால் மழலைப் பருவம் தெரியும்.
மகன்.... இருந்தால் மாண்புமிக்க வம்சம் நிலைக்கும்.
நட்பு....இருந்தால் உயிர் காக்கும் அனைத்தும் கிடைக்கும்.
மண்ணில் இறக்கப் போகிறோமே தவிர..
மீண்டும் மண்ணில் ஒன்றாகப் பிறக்கப் போவது இல்லை....
வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம்.
குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்...
அதை சொர்க்கமாக்குவதும்,
நரகமாக்குவதும்
நம் கையில் தான் உள்ளது..






