என் மலர்tooltip icon

    கதம்பம்

    பொங்கலும் பெண்களும்...
    X

    பொங்கலும் பெண்களும்...

    • தமிழரின் வாழ்வில் தவிர்க்க முடியாத படையல் பொங்கல்...
    • மானுட வாழ்வின் மகத்தான படையல் பெண்கள்....!

    பானைக்குள் மட்டுமே

    பொங்கலின் ராஜ்யம்

    பூமிப் பானை முழுவதுமே

    பெண்களின் சாம்ராஜ்யம்...!


    அறுவடை தந்த புத்தரிசி

    பொங்கலுக்கு அடையாளம்

    அறிவார்ந்த பெண்ணரசி

    அகிலத்தின் அடையாளம்...!


    பக்குவமாகக்

    கையாளத் தெரிந்தால்தான்

    பொங்கலுக்கு மகிமை

    யாரையும் பக்குவமாகக்

    கையாளத் தெரிந்தால்தான்

    பெண்களுக்கு பெருமை....!


    தமிழரின் வாழ்வில்

    தவிர்க்க முடியாத

    படையல் பொங்கல்

    மானுட வாழ்வின்

    மகத்தான படையல் பெண்கள்....!


    அடுப்பின் திரிகளில்

    பூத்தால் பொங்கல்

    அன்பின் திரிகளில்

    பூப்பது பெண்கள்....!


    ஏழை வீட்டின்

    ஒரு நாளைய

    இனிப்பு - பொங்கல்

    பிரபஞ்ச வீட்டின்

    பிரியமான இனிப்பு

    பெண்கள்...!


    அடிப்பாகம் மட்டுமே

    கரும்பு இனிக்கும்

    அடுக்களை தாண்டியும்

    பெண்களின்

    அன்பு இனிக்கும்....!


    சேர்மானங்கள்

    பொங்கலை -

    ருசியாக்கும்

    சிறந்த குணங்களே

    பெண்களை -

    உயர்வாக்கும்...!


    மஞ்சள் இஞ்சியுடன்

    பொங்கல் களை கட்டும்

    மங்கலப் பெண்களின்

    மதிமுகம் கண்டால்

    விடியும்

    திசை எட்டும்...!


    -அழ.இரஜினிகாந்தன்

    Next Story
    ×