என் மலர்
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே 1,520 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் நடுத்தெரு பெருமாள் கோவில் அருகே உள்ள வீடுகளுக்கு சென்று மாட்டு தீவனத்திற்காக 2 பேர் ரேஷன் அரிசி வாங்குவதாக வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) கோதண்டராமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) கோதண்டராமன், வருவாய் ஆய்வாளர் மதியழகன் ஆகியோர் மகாராஜபுரம் நடுத்தெரு பெருமாள் கோவில் பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
இந்த அதிரடி சோதனையில் அப்பகுதியில் வாங்கி பதுக்கி வைத்திருந்த 33 சிப்பம் கொண்ட 1,520 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மேலும் சோதனை செய்த போது சட்டவிரோதமாக மூடை, மூடையாக வாங்கி பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை கைப்பற்றிய அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் ஒப்படைத்தனர்.
மேலும் மகாராஜாபுரம் பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி கொண்டு இருந்த இருவர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதுபோன்று சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி:
காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் சிறுகுளத்தை சேர்ந்தவர் சங்கையா (வயது 52). விவசாயி. நேற்று தனது மோட்டார் சைக்கிளில் காரியாபட்டிக்கு ஆண்மை பெருக்கி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி கம்பரசன்கோட்டையை சேர்ந்த பீர் மைதீன் ஓட்டி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சங்கையா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து காரியாபட்டி போலீசார் சங்கையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட கூமாபட்டி நெடுங்குளம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் அய்யனார் (வயது70). இவர் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் உள்ள பம்பு செட்டில் குளிக்க சென்றார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் கூமாபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அய்யனார் உடலை கைப்பற்றி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
அதன்படி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் பெரும்பான்மையானோர் பங்கேற்றதால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதில் வருவாய்த்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் பங்கேற்கவில்லை. ஆதலால் அவர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர்.
தாய், தந்தை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி:
திருத்தங்கலை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரும் இவரது மனைவி அனிதாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் மகன் அஷ்வின் (வயது 18). ஆரோக்கியசாமியுடன் வாழ்ந்து வந்துள்ளார். அஷ்வின் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதல் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் தாய், தந்தை பிரிந்து வாழ்ந்து வந்ததை தொடர்ந்து மனஉளைச்சல் அடைந்த கல்லூரி மாணவர் அஷ்வின் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12-ந்தேதி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள அறைகள் இடிந்து தரைமட்டமானது.
இந்த வெடிவிபத்தில் கணவன்-மனைவி, கர்ப்பிணி பெண், கல்லூரி மாணவி உள்பட 20 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த சிலர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர்கள் சக்திவேல், பொன்னுபாண்டி, சிவக்குமார், ராஜா, வேல்ராஜ் ஆகிய 6 பேர் மீது ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இவர்களில் பொன்னுபாண்டி, சக்திவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சக்திவேல் மனைவி ஜெயராமு (வயது39) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரியை போலீசார் கைது செய்தனர்.
இதுவரை இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சுழியில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரியாபட்டி:
திருச்சுழி குண்டாற்றுப்பாலம் அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவர் கட்டும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் சுற்றுச்சுவர் கட்டியுள்ள பகுதியில் பொது மக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் மற்றும் பொதுப்பாதை ஆகியவைகளை மறைத்து கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த திருச்சுழி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் குமார், பொதுமக்கள் ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொதுப்பாதை மற்றும் குடிநீர் குழாயை விடுத்து கட்டிடம் கட்ட வேண்டும் என கூறியும் நெடுஞ்சாலை துறையினர் கேட்காததால் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து திருச்சுழி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராஜபாளையம் - ராமேஸ்வரம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருச்சுழி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிக்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அருப்புக்கோட்டை அருேக அடிப்படை வசதிகள் ெசய்து தர வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிகுறிச்சியில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை கல்லூரி மாணவ-மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து தூத்துக்குடி நான்கு வழி சாலையோரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கல்லூரியை செயல்படுத்தி வருவதாகவும், கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு பஸ் வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை இல்லை என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மாணவர்களின் கோரிக்கைகளை மனுவாக பெற்று கல்லூரி முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாத்தூர் அருகே மெயின் சாலையில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை மெயின் ரோட்டில் முகப்பு பகுதியில் உள்ள ஊருணி அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இந்த சாலையின் வழியாக ஏழாயிரம்பண்ணை, கோவில்பட்டி, வெம்பக்கோட்டை, கோட்டைப்பட்டி, சங்கரன்கோவில், திருவேங்கடம் உள்ளிட்ட பல ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன.
எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த சாலையின் ஓரத்தில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் இந்த ரோட்டின் வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.
மேலும் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகையின் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுவது மட்டுமல்லாமல் விபத்திற்கு காரணமாக அமைகிறது.
மேலும் இங்குள்ள ஊருணி அருகே குப்பை கொட்டப்படுவதால் ஊருணியின் நீர் மாசு ஏற்படுவது மட்டுமல்லாமல் இந்த ஊருணி நீரை அருந்தும் கால்நடைகளுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் மாசடைந்த நீரினால் ஊருக்குள் கொசுக்கள் அதிகம் உருவாகிறது. இதனால் மனிதர்களுக்கும் தொற்று நோய்கள் பரவக்கூடும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயில்பட்டி:
தாயில்பட்டி ஊராட்சி கலைஞர் காலனியை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 52), பட்டாசு தொழிலாளி. இவர் வீட்டின் பின்புறத்தில் இருந்த ஓட்டையை அடைத்து கொண்டிருந்தபோது ஓட்டையில் இருந்து வந்த பாம்பு ஆபிரகாமை கடித்ததில் மயக்கமடைந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து ஆபிரகாம் மகள் ஆஷா கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்
சாத்தூர்:
சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளா்கள் 20 போ் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்தநிலையில் சாத்தூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சத்திற்கான நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார்.
மேலும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் காயம் அடைந்த 19 பேருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.
அப்போது ராஜவர்மன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கலெக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன், கோட்டாட்சியர் காசி செல்வி, தாசில்தார் வெங்கடேஷ், சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் கே.டி.ராேஜந்திரபாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதால் தி.மு.க உள்ளிட்ட சில இயக்கங்கள் பட்டாசு தொழிலை நிறுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.
உயிரிழப்பு என்பது எல்லா தொழிலும் இருக்கின்றது. ஆனால் பட்டாசு தொழிலில் மட்டும் உயிரிழப்பு வெளியில் தெரிகிறது. எனவே தமிழக முதல்-அமைச்சர் உயிரிழப்பை தடுக்க விரைவான நடவடிக்கை எடுத்துள்ளார். நிவாரணமும் அறிவித்துள்ளார்.
பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.க.வினர் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் இந்த தொழிலை நிறுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர எண்ணற்ற நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.
பட்டாசு தொழிலாளர் நலச்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்துகள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக தொழிலை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
தாய் தந்தையை இழந்த நடுசூரங்குடி நந்தினிக்கு தேவையான படிப்பு செலவினை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அந்தக் குழந்தைக்கென தனி கவனம் செலுத்தி எங்கள் வீட்டுப் பிள்ளையாக நாங்கள் கவனித்துக் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

ராஜபாளையத்தில ஆதார் அட்டையில் தொலைபேசி எண் சேர்க்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில ஆதார் அட்டையில் தொலைபேசி எண் சேர்க்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் அட்டை அவசியம் ஆகும்.
பெரும்பாலான ஆதார் அட்டையில் தெரு பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட பல தகவல்கள் பிழையாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பிழைத்திருத்தம் மற்றும் புதிதாக தொலைபேசி எண் பதிவு செய்வதற்கு கிராமப்பகுதியிலிருந்து எண்ணற்ற பொதுமக்கள் அன்றாடம் ராஜபாளையம் நகருக்கு வருகின்றனர்.
ராஜபாளையம் தாலுகா அலுவலகம், தபால் அலுவலகம், ஒரு தனியார் வங்கி என சில இடங்களில் மட்டுேம ஆதார் அட்டை பிழை திருத்தும் பணி, செல்போன் எண் மாற்றுதல் உள்ளிட்டவை செய்யப்படுகிறது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருவர் மட்டுமே இப்பணியை மேற்கொண்டு வருகிறார். தினமும் எண்ணற்ற பேர் பிழைத்திருத்தம், தொலைபேசி எண் பதிவு செய்ய வருவதாக கூறப்படுகிறது.
எனவே கூட்டத்தை தவிர்க்க டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் வாங்குவதற்கு வரிசையில் பல மணிநேரம் காத்து கிடந்து அவதிக்குள்ளாகின்றனர்.
அவ்வாறு டோக்கன் பெற்றாலும் மேற்கண்ட மையங்களில் தினமும் 20 பேருக்கு மட்டுமே ஆதாரில் திருத்தம் செய்து தரப்படுகிறது.
தினமும் குறைவான எண்ணிக்கையில் பிழைத்திருத்தம் மேற்கொள்வதால் பலர் பல மாதங்களுக்கு காத்துக்கிடக்கவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் போட்டி தேர்விற்கு விண்ணப்பிப்பவர், பத்திரப்பதிவு செய்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பொதுநலன் கருதி தாலுகா அலுவலகத்தில் இயங்கிவரும் இ-சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமித்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
அத்துடன் ஆதாரில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் கூடுதல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.