என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 5-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்:
மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 5-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 20 பெண்கள் உள்பட 100 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வருவாய் துறை அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.
பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க வலியுறுத்தி சாத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர்:
பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சதுரகிரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஞானகுரு மணிமாறன், தொகுதி செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பட்டாசு தொழிலை பாதுகாப்பாக நடத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சமும், காயம் அடைந்தவருக்கு ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு குறித்த பயிற்சி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்தில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் இன்னும் அடையாளம் காணமுடியவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் நடந்துள்ள மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இது ஆகும்.
கடந்த பிப்ரவரி 12-ம் தேதி சாத்தூரில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்து ஏற்படுத்திய சோகம் விலகுவதற்குள் மற்றுமொரு விபத்து நடந்துள்ளது.
சிவகாசி அருகே திருநங்கை மர்ம மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழ்திருத்தங்கல் மகாத்மாகாந்தி காலனி பகுதியை சேர்ந்த திருநங்கை மருதுபாண்டி. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், மருதுபாண்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மருது பாண்டியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர். திருநங்கை சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒரு பெண் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பலியானார்கள்.
20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச்சூரங்குடியை சேர்ந்த பால்ராஜ் மனைவி ஜெயா (வயது50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.

வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டி நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை வட்டார மருத்துவர் ஜெயராமன் தலைமையில் செய்யப்பட்டது.
200 காளைகளும், 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு சப்-கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் மாடுபிடிவீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை சப்-கலெக்டர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன், சந்திரபிரபா எம்.எல்.ஏ., வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் சிந்து முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் நிலவள வங்கி தலைவர் முத்தையா, தாசில்தார் அன்னம்மாள் உள்பட பலர் பார்வையிட்டனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.
விறுவிறுப்பாக நடந்து முடிந்த இந்த ஜல்லிக்கட்டில், வீரர்களை சிதறடித்த காளைகளுக்கும், சிறப்பாக செயல்பட்ட மாடுபிடி வீரர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை வ.புதுப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று 35 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மற்ற பஸ்கள் டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர்:
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 355 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் இன்று 125 பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன.
விருதுநகரில் 72 பஸ்களில் 12 வெளியூர் பஸ்கள் மற்றும் 8 டவுன் பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன.
ராஜபாளையத்தில் உள்ள அரசு பேருந்து போக்குவரத்து கழகம் பணிமனையில் உள்ளே 100 பேருந்துகளில் 7 மட்டுமே இயக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர். முக்கியமான பகுதிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பஸ்களை எடுப்பதற்காக இன்று பணிமனைக்கு வந்தனர். அவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பஸ்களை எடுக்க விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரும்பாலான டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் கிராமப்புற மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் கட்டிட தொழிலாளர்கள், ஊழியர்கள் பஸ்கள் கிடைக்காமல் அவதியடைந்தனர்.
இன்று முகூர்த்த தினம் என்பதால் பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் பஸ்கள் கிடைக்காததால் குறித்த நேரத்தில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் தவித்தனர்.
பஸ்கள் ஓடாததால் ஷேர் ஆட்டோக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஆட்டோக்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.

சிவகாசியில் ரேஷன் மண்எண்ணெய் கடத்திச்சென்ற 5 பேருக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
விருதுநகர்:
மாவட்ட உணவுப்பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 31.8.2012 அன்று சிவகாசி தங்கையா நாடார் சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த வேனை சோதனையிட்டபோது அதில் 5,400 லிட்டர் ரேஷன் மண் எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வேனில் சிவகாசியை சேர்ந்த கணேசமூர்த்தி, சுனைச் செல்வம், மதுரையை சேர்ந்த ராமர், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ஆறுமுகநயினார், ராஜபாளையத்தை சேர்ந்த மகாதேவராஜா ஆகிய 5 பேர் இருந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ரேஷன் கார்டு தாரர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் மண்எண்ணெய் வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக வேனில் கடத்தி செல்வதாக ஒப்புக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் 5 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விருதுநகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த முதல் மாஜிஸ்திரேட்டு மருதுபாண்டி குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் ஒரு வருட ஜெயில் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தளவாய்புரம் அருகே கண்மாயில் குளிக்க சென்ற இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தளவாய்புரம்:
தளவாய்புரம் அருகே உள்ள நத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரன் மனைவி ராஜேஸ்வரி (வயது27). இவர்களுக்கு பவித்ரா (10) என்ற மகளும், அஸ்வந்த் (5) என்ற மகனும் உள்ளனர். இவர் ஜமீன் கொல்லங்கொண்டானில் உள்ள தனது அப்பா சங்கர வேல் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றிருந்தார்.
நேற்று பகல் ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் தனது அண்ணன் வீட்டாருடன் அங்கு உள்ள கண்மாயில் குளிக்க சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ராஜேஸ்வரி கால் தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கிவிட்டார்.
உடனே அவரை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தங்கல்லில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
திருத்தங்கல்லை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும், கார்த்திகைபட்டியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி தனது கணவர் வசித்து வரும் சமத்துவபுரம் பகுதிக்கு வந்த ராமலட்சுமி திடீரென்று தீக்குளித்தார். இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்ட ராமலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ராமலட்சுமியின் தாய் வெள்ளைத்தாய் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர் அருகே மதுபாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்:
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒத்தையால் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 38) என்பவரை கைது செய்தனர். பெரியகொல்லபட்டி லிலக்கு அருகில் கண்ணன் (48) என்பவரும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டார். அதேபோல சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சாத்தூர் அண்ணாநகர் கல்யாண மண்டபம் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற படந்தாலை சேர்ந்த குணசேகர் (55) என்பவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
வத்திராயிருப்பு அருகே நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் தயார் நிலையில் உள்ளது. 150 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகின்றனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு தாலுகாவுக்கு உட்பட்ட வ.புதுப்பட்டியில் நாளை (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி வாடிவாசல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து 150 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் பங்குபெற உள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு தங்க நாணயம், கட்டில், பீரோ, டி.வி, பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாட்டினை வ.புதுப்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.