என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகரில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய கேபிள் டி.வி. தொழிலதிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்த வாகன விற்பனை தொழிலதிபர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாளிடம் கொடுத்த புகார் மனுவில், விருதுநகர் வீராச்சாமி தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) மற்றும் வையாபுரி தெருவை சேர்ந்த கேபிள் டி.வி. தொழில் நடத்தி வரும் பிரேம்குமார் (48) ஆகிய இருவரும் சேர்ந்து தனது மனைவியின் ஆபாச படத்தை தனக்கு அனுப்பி வைத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பிரேம்குமார், மணிகண்டனின் செல்போனில் இருந்து ஆபாச படத்தை தொழில்அதிபரின் செல்போனுக்கு அனுப்பி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து இந்நகர் கிழக்கு போலீசார், மணிகண்டன் மற்றும் பிரேம்குமார் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன் கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டு்ம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர் ராம்கோ சிமெண்ட்ஸ் வளாகத்தில் ராம்கோ சிமெண்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய வரைபட வடிவில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நின்று உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கண்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    வருகிற தேர்தலில் வாக்காளர்கள் குழப்பமின்றி தெளிவாக வாக்களிக்கும் வகையில், மாதிரி வாக்குபதிவு மையம் அமைக்கப்பட்டு, மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    எனவே வாக்களிப்பதின் அவசியத்தை உணர்ந்து 18 வயது நிரம்பிய அனைவரும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்து வலுவான ஜனநாயகம் உருவாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய வரைபட வடிவில் தொழிலாளர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ், ராம்கோ சிமெண்ட்ஸ் முதுநிலை துணைத்தலைவர் ராமலிங்கம், ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் உள்பட ராம்கோ சிமெண்ட்ஸ் நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் ரகுராமன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    சாத்தூர்:

    சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் ரகுராமன் சாத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று சாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புஷ்பாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தி.மு.க. நகர செயலாளர் குருசாமி, இலக்கிய அணி செயலாளர் அசோக் ஆகியோர் உடனிருந்தனர். 

    அதேபோல இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரதி, பகுஜன் திராவிட கட்சி சார்பில் பழனிச்சாமி, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் செல்லபாண்டியன், 8 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 12 பேர் மனு தாக்கல் செய்தனர்.
    சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெம்பக்கோட்டை பகுதியில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
    தாயில்பட்டி:

    சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் முன் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம், பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    அதேபோல சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் மண்குண்டாம்பட்டி, துலுக்கன்குறிச்சி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட முக்கிய சந்திப்பு இடத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது அந்த வழியாக வாகனங்கள் அனைத்தும் நகை மற்றும் பணங்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படுகிறதா என பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ், வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ், ஆகியோர் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
    விருதுநகரில் மனைவியின் ஆபாச படத்தை செல்போனில் அனுப்பி தொழில் அதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அதே பகுதியில் மோட்டார் வாகன உதிரி பாகங்களை விற்கும் கடை நடத்தி வருகிறார்.

    இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாளிடம் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- எனது மனைவி விருதுநகர் பகுதியில் உள்ள தனியார் தனியார் பள்ளியில் பகுதி நேர ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது வையாபுரி தெருவைச் சேர்ந்த கேபிள் டி.வி. நடத்தி வரும் பிரேம்குமார் (வயது 48) என்பவர் நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு சென்றுள்ளார்.

    அங்கு எனது மனைவியிடம் அறிமுகமாகி அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் எனது மனைவி தனியாக இருந்த போது பிரேம்குமார் அத்துமீறி நுழைந்து வலுக்கட்டாயமாக நெருங்கி பழகி உள்ளார்.

    இதை வெளியே சொன்னால் உனது குடும்பத்தினரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து பிரேம்குமார் தூண்டுதலின் பேரில் வீராசாமி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் எனது மனைவியின் ஆபாச படத்தை எனது செல்போனுக்கு அனுப்பினார்.

    பின்னர் 2 பேரும் ரூ.20 லட்சம் தராவிட்டால் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி உங்களது குடும்பத்தையும், தொழிலையும் நாசப்படுத்துவோம் என மிரட்டினர்.

    எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் கிழக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பிரேம்குமார், மணிகண்டன் ஆகியோர் ஆபாச படத்தை அனுப்பி மிரட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைத்தனர்.
    கணவருடன் மோட்டார் ைசக்கிளில் சென்ற போது அரசு பஸ் மோதியதில் 7 மாத கர்ப்பிணியும், அவருடைய ஒரு வயது பெண் குழந்தையும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கோட்டையூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டியை சேர்ந்த சுந்தரலட்சுமி (வயது 24) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய ஒரு வயது பெண் குழந்ைத கவிபாரதி, தற்போது சுந்தரலட்சுமி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் குழந்தை கவிபாரதியின் பிறந்தநாளை கொண்டாட நேற்று கருப்பசாமி-சுந்தரலட்சுமி தம்பதியினர் பாறைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து நேற்று மதியம் சிவகாசிக்கு வந்து கேக் வாங்க முடிவு செய்து பாறைப்பட்டியில் இருந்து ேமாட்டார் சைக்கிளில் சிவகாசி நோக்கி வந்துள்ளனர். வாகனத்தை கருப்பசாமி ஓட்டியுள்ளார். அதில் கர்ப்பிணி சுந்தரலட்சுமி, மகள் கவிபாரதி, உறவினர் மகன் திவாகர் ஆகியோர் இருந்துள்ளனர்.

    சிவகாசி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ேமாட்டார் சைக்கிள் வந்த போது சாத்தூரில் இருந்து சிவகாசி நோக்கி வந்த அரசு பஸ்சை, கருப்பசாமி முந்தி செல்ல முயன்றுள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மோதி கீழே விழுந்துள்ளார். இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி 7 மாத கர்ப்பிணி சுந்தரலட்சுமி மற்றும் 1 வயது மகள் கவிபாரதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கருப்பசாமி மற்றும் உறவினர் மகன் திவாகரன் ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பினர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சேகரை போலீசார் கைது செய்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து கருப்பசாமியின் உறவினர்களும், சுந்தரலட்சுமியின் உறவினர்களும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அவர்கள் சுந்தரலட்சுமி, குழந்ைத கவிபாரதி உடல்களை பார்த்து கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்தால் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வத்திராயிருப்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாட்டு வண்டியில் சென்று வாக்காளர்களுக்கு கலெக்டர் கண்ணன் அழைப்பிதழ் வழங்கினார்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாட்டு வண்டியில் சென்று வாக்காளர்களுக்கு கலெக்டர் கண்ணன் அழைப்பிதழ் வழங்கினார்.

    சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டுவதற்காக நாள்தோறும் வாக்களார்களை கவரும் வகையில் அரசுத்துறை மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு புதிய பஸ் ஸ்டாண்டில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி அடங்கிய பதாதைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    வருகிற தேர்தலில் வாக்காளர்கள் குழப்பமின்றி தெளிவாக வாக்களிக்கும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தேர்தல் விழிப்புணர்வு வரைபட காட்சி மையத்தை கலெக்டர் கண்ணன் திறந்து வைத்து, வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக மகளிர் சுய உதவிக்குழுவினரால் வரையப்பட்ட வரைபடங்களை பார்வையிட்டார்.

    தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு மனிதவள விளம்பர மையத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    மகளிர் சுய உதவிக்குழுவை சார்ந்த பெண்கள் தேர்தல் ராக்கியை அணிவித்தனர். 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஓவியங்களை மெகந்தி மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் கைகளில் வரைந்து வாக்களார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மகளிர் திட்டம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுவண்டி பேரணியை தொடங்கி வைத்து 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி மாட்டுவண்டியில் சென்று வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்து, தவறாமல் வாக்களிக்க வருமாறு வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் வழங்கினார்.

    இதையடுத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மகளிர் திட்ட அலுவலர் தனபதி, உதவி திட்ட அலுவலர்கள் கிஷோர், வசுமதி, வளர்மதி, ஜெயராம், சுந்தரமூர்த்தி, பொன்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசி, சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கண்ணன், சிவாஅருணாசலம், அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    சிவகாசி:

    சிவகாசி கவிதா நகரில் பாரைப்பட்டியை சேர்ந்த விவேக் (வயது 35) என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு பட்டாசுக்கு சட்டிக்கூடு தயாரிக்கும் பணி நடந்து வந்தது.

    இந்த நிலையில் இந்த குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிவகாசி சப்-கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-கலெக்டர் தினேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, தாசில்தார் ராமசுப்பிரமணியன், உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு 12 மூடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதை சிவகாசி டவுன் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு போலீசார் “சீல்” வைத்தனர்.
    விருதுநகர் அருகே பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.2,100 கைப்பற்றினர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறை சேர்ந்தவர் செல்வி (வயது 48). இவர் விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் அக்னிச்சட்டி எடுப்பதற்காக கோவிலுக்கு வந்து காப்புக் கட்டினார். அப்போது பையில் இருந்த ரூ.2,100-ஐ அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் எடுத்தபோது செல்வியும் அவரது மகள்களும் கையும் களவுமாக பிடித்து இந்நகர் மேற்கு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த பெண் தூத்துக்குடியை சேர்ந்த அபூர்வம்மாள் (50) என தெரியவந்தது. அவரிடம் இருந்த ரூ.2,100 கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    விருதுநகர்:

    சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 2,370 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

    இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறை குறித்த முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

    இந்த பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் 1,2, 3 என மூன்றுஅலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்றவிருக்கும் 11 ஆயிரத்து 376 வாக்குச்சாவடிஅலுவலர்களுக்கும் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு பணி குறித்து பயிற்சி அளித்தனர்.

    ராஜபாளையம் தொகுதிக்கு பயிற்சி வகுப்பு பி.ஏ.சி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு வி.பி.எம்.எம். நர்சிங் கல்லூரியிலும், விருதுநகர் தொகுதிக்கு கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சிவகாசி தொகுதிக்கு எஸ்.எப்.ஆர். கல்லூரியிலும், சாத்தூர் தொகுதிக்கு எஸ்.ஆர். நாயுடு கல்லூரியிலும், அருப்புக்கோட்டை தொகுதிக்கு தேவாங்கர் கலைக் கல்லூரியிலும், திருச்சுழி தொகுதிக்கு சி.இ.ஒ.எ. கல்லூரியிலும் நடைபெற்றது.

    முதல்கட்ட பயிற்சி வகுப்பிலேயே வாக்குச்சாவடி அலுவலர் அனைவருக்கும் தபால் மூலம் வாக்களிக்க படிவம் 12டி வழங்கப்பட்டது.

    தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்காளர் அனைவருக்கும் கையுறை வழங்கவும், கிருமி நாசினி மருந்து வழங்கவும், உடல் வெப்பநிலையை பரிசோதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

    இவ்வாறு கலெக்டர் கண்ணன் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் சங்கர்,எஸ்.நாராயணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விருதுநகர் சந்தானலட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூர் முருகன், தாசில்தார்கள் விருதுநகர் சிவஜோதி, சிவகாசி ராமசுப்பிரமணியன், ஸ்ரீவில்லிபுத்தூர் சரவணன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    சாத்தூர் அருகே புகையிலை விற்றவர் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் அண்ணாநகர் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து புகையிலை விற்ற அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 58) என்பவரிடம் இருந்து 7 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
    தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் இரவு 10 மணிக்கு மேல் வாக்கு சேகரித்ததாக வைகை செல்வன் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அ.தி.மு.க. வேட்பாளர் வைகைச்செல்வன், ஆர். ஆர். நகர், பொம்மையபுரம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் இரவு 10 மணிக்கு மேல் அவர் வாக்கு சேகரித்ததாக வச்சக்காரப்பட்டி போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ×